முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ட்விட்டரில் அடுத்த அதிரடி மாற்றம் அறிமுகம்!

ட்விட்டரில் அடுத்த அதிரடி மாற்றம் அறிமுகம்!

 ட்விட்டர்

ட்விட்டர்

அரசுத் துறைகள், வர்த்தக ரீதியிலான நிறுவனங்கள், பிசினஸ் பார்ட்னர்கள், பிரபல ஊடக நிறுவனங்கள்,

  • 1-MIN READ
  • Last Updated :
  • New Delhi, India

டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவன அதிபர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து அதில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ட்விட்டர் ஊழியர்கள் பலர் கொத்து, கொத்தாக பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, ட்விட்டரில் பிரபலம் மிகுந்த நபர்களுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் அடையாளத்திற்கு இனி மாதந்தோறும் 8 டாலர் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்தார். இதற்கு உலகளாவிய அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்த போதிலும், அதை அமல்படுத்துவதில் எலான் மஸ்க் உறுதியாக இருக்கிறார்.

அதே சமயம், மக்கள் பிரதிநிதிகள், அரசுத் துறைகள், வணிக நிறுவனங்கள் போன்ற தரப்பினருக்கும் ப்ளூ டிக் வழங்க கட்டணம் வசூல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இத்தகைய நிலையில், இதுபோன்ற அக்கவுண்ட்களுக்கு ‘அஃபிசியல்’ (Official) என்னும் தனி பேட்ஜ் வழங்குவதற்கு ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

கட்டணம் வசூல் செய்யப்படுமா?

தனி நபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் மாதந்தோறும் கட்டணம் செலுத்தினால் மட்டுமே ப்ளூ டிக் கிடைக்கும் என்று ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ள அதே வேளையில், அரசுத் துறைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அஃபிசியல் என்னும் பேட்ஜுக்கு கட்டணம் எதுவும் வசூல் செய்யப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் பணியாளர்கள் முன்னறிவிப்பு இன்றி வேலை நீக்கம்: வழக்கு பாய்கிறது

 தற்போதைய சூழலில், இந்த பேட்ஜ் தேர்வு செய்யப்பட்ட சில இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. முழுமையான அளவில் எப்போது செயல்பாட்டு வரும் என்ற கால நிர்ணயம் குறித்து தகவல் எதுவும் இல்லை.

விளக்கம் கொடுத்த டிவிட்டர் நிறுவனம்

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்திய 2 வாரங்களுக்குள்ளாக இத்தகைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் எஸ்தர் க்ரௌபார்டு, டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “அலுவல் ரீதியாக அக்கவுண்ட்களுக்கு நாங்கள் கொடுக்க இருக்கும் பேட்ஜ் மற்றும் டிவிட்டர் ப்ளூ சப்ஸ்கிரைபர்களுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் ஆகிய இரண்டுக்குமான வேறுபாடுகளை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அலுவல் ரீதியிலான அக்கவுண்ட்களுக்கு வழங்கப்படும் அஃபிசியல் என்னும் பேட்ஜ், தொடர்புடைய அக்கவுண்டின் புரொஃபைல் பெயருக்கு கீழே இடம்பெற்றிருக்கும்.

ஆண்ட்ராய்டு யூசர்களே எச்சரிக்கை! இந்த 4 ஆப்ஸை உங்கள் மொபைலில் இருந்து உடனே நீக்கி விடுங்கள்!

யார், யாருக்கு இது கிடைக்கும்

அரசுத் துறைகள், வர்த்தக ரீதியிலான நிறுவனங்கள், பிசினஸ் பார்ட்னர்கள், பிரபல ஊடக நிறுவனங்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் பொதுவாழ்வில் உள்ள சில நபர்களுக்கு இத்தகைய பேட்ஜ் வழங்கப்படும் என்று டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ட்விட்டரில் இதுவரையிலும் குறுகிய பதிவுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், நீண்ட பதிவுகளை அனுமதிப்பது குறித்தும் அந்நிறுவனம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Twitter