எலான் மஸ்க் ட்விட்டரைத் தன்னகப்படுத்தியதையடுத்து, மைக்ரோ பிளாக்கிங் தளம் தினசரி ஏதோ ஒரு மாற்றத்தை சந்தித்து வருகிறது. ட்விட்டரில் சரிபார்த்த கணக்கை (ப்ளு டிக் கணக்குகளை) வைத்திருப்பவர்களுக்கு மாதம் இனி குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் ஏற்கனவே அறிவித்திருந்தார். இப்போது அந்த சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, டிவிட்டர் புளூவை பயன்படுத்துவதற்கு மாதாந்திர சந்தாவாக இணைய வழியில் பயன்படுத்த 650 ரூபாயும், செல்போன்களில் பயன்படுத்த மாதம் 900 ரூபாயும் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி இணையம், IOS,மற்றும் ஆண்டிராய்டு என 3 தளங்களிலும் பயன்படுத்தலாம் என்றும் இந்த சேவைகளை ஆண்டு சந்தாவாக 6,800 ரூபாய் செலுத்தியும் பெற முடியும் என்றும் டிவிட்டர் அறிவித்துள்ளது. பணம் செலுத்தி பயன்படுத்தும் டிவிட்டர் சேவைகளில் டிவீட்களை எடிட் செய்து கொள்ள முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்
சந்தா செலுத்தும் நபர்களின் டிவிட்டர் கணக்கின் பெயர்களுக்கு பின்னால் நீல நிற டிக் கிடைக்கும். இதற்கு முன்பாக இந்த வகை டிக் மற்றும் வெரிபைட் கணக்குகள் குறிப்பிட்ட துறை சார்ந்த பிரபலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் பயனர்கள் Twitter Blue tick-க்கு ஒரு மாதத்திற்கு $19.99 ( இந்திய மதிப்பில் 1647.17 ரூபாய்) செலுத்த வேண்டி வரும் என்ற தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elon Musk, Technology, Twitter, Twitter new policy