முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / Twitter: ட்விட்டர் இந்தியாவின் இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரி திடீர் ராஜினாமா!

Twitter: ட்விட்டர் இந்தியாவின் இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரி திடீர் ராஜினாமா!

ட்விட்டர்

ட்விட்டர்

தர்மேந்திர சாதுர் என்பவரை இந்திய அளவிலான இடைக்கால குறைதீர் அதிகாரியாக சில நாட்களுக்கு முன்னதாக ட்விட்டர் நியமனம் செய்தது.

  • Last Updated :

பலகட்ட சர்ச்சைகளுக்கு பிறகு ஒருவழியாக மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு இணங்கி, ட்விட்டர் நியமித்த இந்திய அளவிலான குறைதீர்ப்பு அதிகாரி, நியமனம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே திடீரென ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சோஷியல் மீடியாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ள நிலையில், அதை பின்பற்ற தவறிய ட்விட்டருக்கு வழங்கப்பட்டு வந்த சட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டது. முன்னதாக புதிய ஐடி விதிகளை பின்பற்ற ட்விட்டர் நிறுவனத்திற்கு பல முறை வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் ஆனால் ட்விட்டர் நிறுவனம் விதிகளுக்கு இணங்க கூடாது என்ற பாதையை தேர்ந்தெடுத்தது என்றும் மத்திய அரசு குற்றம்சாட்டியது.

மத்திய அரசு விதித்த இறுதி கெடுவுக்கு பின்னதாக, ஒருவழியாக புதிய ஐடி விதிகளுக்கு உட்பட்டது ட்விட்டர். அதன்படி தர்மேந்திர சாதுர் என்பவரை இந்திய அளவிலான இடைக்கால குறைதீர் அதிகாரியாக சில நாட்களுக்கு முன்னதாக ட்விட்டர் நியமனம் செய்தது.

Also Read:  அமைச்சர்களின் கார் பார்க்கிங்கான ஸ்போர்ட்ஸ் ட்ராக்.. விஐபி கலாச்சாரத்தை தோலுரித்து காட்டிய பாஜக எம்.எல்.ஏ!

இருப்பினும் அவர் பதவியேற்று ஒரு புகாரை கூட கையாளாமல் திடீரென அவரது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ட்விட்டர் நிறுவனத்தின் வலைத்தளத்தில் இருந்தும் அவருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    ட்விட்டர் நிறுவனம், மத்திய அரசுடன் மோதல் போக்கை கையாண்டு வந்த நேரத்தில் குறைதீர்ப்பு அதிகாரி நியமனம் மூலம் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்திருந்த நிலையில் தற்போது திடீரென குறைதீர்ப்பு அதிகாரி ராஜினாமா செய்திருப்பது இந்த விவகாரத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே கேள்விக்குறியாக மாறியுள்ளது.

    First published:

    Tags: Technology, Twitter