ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இனி வீடுதான் அலுவலகம்.. வாடகை செலவை குறைக்கணும்.. இந்திய அலுவலகங்களை காலி செய்யும் ட்விட்டர்?!

இனி வீடுதான் அலுவலகம்.. வாடகை செலவை குறைக்கணும்.. இந்திய அலுவலகங்களை காலி செய்யும் ட்விட்டர்?!

ட்விட்டர்

ட்விட்டர்

செலவீனங்களை குறைக்கும் விதமாக ட்விட்டர் நிறுவனம் இந்திய அலுவலகங்களை மூடும் வேலையில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

  • News18 India
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எலான் மஸ்க் ட்விட்டரின் தலைவராக எலான் மஸ்க் ஒரு பதவியேற்ற உடனேயே அதிரடியான பல விதமான மாற்றங்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்தினார் என்று பல தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ட்விட்டர் சிஇஓ-வாக இருந்த பராக் அகர்வால் உள்பட பல ஆயிரம் ஊழியர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்தார். அதுமட்டுமில்லாமல் புளூ டிக் வேண்டுமென்றால் அதற்கு கட்டாயமாக சந்தா செலுத்த வேண்டும் என்பதையும் அறிவித்தார். அது சர்ச்சையை உண்டாக்க, தற்காலிகமாக திரும்பப் பெற்றார். இந்நிலையில் உலகளவில் உள்ள ட்விட்டர் அலுவலகங்களை கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்கிறது அந்நிறுவனம். அந்த வகையில் டெல்லி, மற்றும் மும்பையில் இயங்கி வரும் ட்விட்டர் அலுவலக பணி இடங்களை காலி செய்ய அந்நிறுவனம் தயாராகி வருவதாகவும் அதற்கான வேலையை கடந்த 2022 டிசம்பர் மாதமே தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே பெங்களூருவில் இயங்கிவந்த ட்விட்டர் அலுவலகம் மூடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. ட்விட்டர் நிறுவனம் மும்பையின் BKC இல் உள்ள WeWork பகுதியில் சுமார் 150 இடங்களையும், டெல்லியின் குதுப் பகுதியில் உள்ள தி எக்ஸிகியூட்டிவ் சென்டரில் சுமார் 80 இடங்களையும் கொண்டுள்ளது. இதுதான் தற்போது காலியாகும் எனத் தெரிகிறது. வாடகை பணத்தை மிஞ்சம் செய்யும் விதமாக இந்த நடவடிக்கையில் ட்விட்டர் இறங்கியுள்ளதாகவும், பணியாளர்கள் வீட்டி இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்படுவதாககவும் கூறப்படுகிறது.

உலகில் இதுவரை வெளியாகாத கலரில் அசத்தலான லுக்கில் அறிமுகமான Motorola Edge 30

எலான் மஸ்க் வசம் ட்விட்டர் வந்தது முதல் அந்நிறுவனத்தில் அதிரடி மாற்றங்களும் அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன. ஜனவரி 11 அன்று, ட்விட்டரின் சிங்கப்பூர் அலுவலகத்தில் உள்ள தொழிலாளர்கள் அதே நாளில் வளாகத்தை காலி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். கேபிடாகிரீன் கட்டிடத்தை விட்டு வெளியேறவும், மாலை 5 மணி வரை நேரம் அவகாசம் என்று மெயில் அனுப்பப்பட்டது.

$44 பில்லியனுக்கு ட்விட்டரை வாங்கியதிலிருந்து அதன்செலவுகளை கடுமையாகக் குறைக்க தீவிரமாக வேலை செய்து வருகிறார் எலான் மஸ்க். ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவது, ட்விட்டர் நிறுவன வாடகையை குறைப்பது என பார்க்கும் பக்கமெல்லாம் செலவை குறைக்க பார்க்கிறார். கடந்த ஆண்டு நவம்பரில் சுமார் 3,700 பணியாளர்களை அவர் பணிநீக்கம் செய்தார். இந்தியாவில் அநேகமானவர்களை வேலையை விட்டு தூக்கினார். இது குறித்து பேசிய எலான் மஸ்க், எஞ்சின் தீப்பிடித்துக்கொண்ட ஒரு விமானம் அதிவேகமாக தரையை நோக்கி செய்வதுபோல ட்விட்டர் நிறுவனம் இருப்பதாகவும் அதனால்தான் பைத்தியக்காரத்தனமாக செலவைக் குறைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் கொலம்பியா ரெய்ட் என்னும் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் ட்விட்டர் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. அலுவலகத்திற்கான வாடகை முறையாக செலுத்தப்படவில்லை என்ற பிரச்னையும் கிளம்பியுள்ளது. இதனால் ட்விட்டருக்கு கொலம்பியா ரெய்ட் நிறுவனம் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அதில் வாடகைத் தொகையான 1,36,250 அமெரிக்க டாலரை 5 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் இது ரூ.1.12 கோடி ஆகும். இருப்பினும்  வாடகையை ட்விட்டர் நிறுவனம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சான் பிரான்சிஸ்கோவின் மாநில நீதிமன்றத்தில் ட்விட்டருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது கொலம்பியா ரெய்ட். ட்விட்டர் சான்பிரான்சிஸ்கோ அலுவலகம் மட்டுமல்லாது உலகளவில் இயங்கும் பிற நிறுவனங்களுக்கும் வாடகையை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

First published:

Tags: Elon Musk, Twitter