ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ட்விட்டர் இந்திய அலுவலகத்தில் மொத்தமே 12 ஊழியர்கள்தான் வேலையில் உள்ளனர்...

ட்விட்டர் இந்திய அலுவலகத்தில் மொத்தமே 12 ஊழியர்கள்தான் வேலையில் உள்ளனர்...

ட்விட்டர்

ட்விட்டர்

Twitter | எலான் மஸ்க் டிவிட்டரில் நடத்திய அதிரடியான ஆட்குறைப்பு மற்றும் மாஸிவ் லே-ஆஃப் என்பது உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், இந்திய ஊழியர்களும் இதற்கு தப்பவில்லை. இந்தியாவில் டிவிட்டரில் பணியாற்றி வருபவர்களில் 90 சதவிகிதத்தினர் பணி நீக்கம் செய்த?

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  எலான் மஸ்க் டிவிட்டரில் நடத்திய அதிரடியான ஆட்குறைப்பு மற்றும் மாஸிவ் லே-ஆஃப் என்பது உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், இந்திய ஊழியர்களும் இதற்கு தப்பவில்லை. இந்தியாவில் டிவிட்டரில் பணியாற்றி வருபவர்களில் 90 சதவிகிதத்தினர் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டனர் என்றும், தற்பொழுது 12 நபர்கள் மட்டுமே வேலையில் இருக்கிறார்கள் என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி மிகவும் சென்சிடிவ் ஆக பார்க்கப்படுவதால் யாரெல்லாம் தற்போது பணியில் இருக்கிறார்கள் என்பது பற்றிய பெயர்கள் வெளியிடப்படவில்லை.

  டிவிட்டரில் அதிரடியான மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், டிவிட்டர் வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல வேண்டும், வருமானம் ஈட்டும் முறையை அதிகரிக்க வேண்டும் என்று பல விதமான காரணங்களுக்காக எலான் மஸ்க் ஆட்குறைப்பு செய்து வந்ததாக தெரிவித்து வந்துள்ளார். இதில் தான் 90 சதவிகித ட்விட்டர் இந்திய ஊழியர்கள் வேலை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஜினியரிங் மற்றும் புராடக்ட் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

  உலகம் முழுவதிலுமே பொருளாதார பாதிப்பு, பணவீக்கம் என்ற காரணத்தால் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால் தொழில்நுட்பத்தில் தற்போது அனைவரும் பயன்படுத்தி வரும் பிரபலமான தயாரிப்புகள், சேவைகள் என்று பெரும்பாலான நிறுவனங்களுக்கு இந்தியா ஒரு முக்கிய சந்தையாக இருந்துள்ளது.

  கூகுள், மெட்டா, டிவிட்டர் என்று எல்லாவற்றிலுமே  தயாரிப்பு மற்றும் சேவைகளில் இந்தியர்களின் பங்களிப்பு அதிகம். அதுமட்டுமல்லாமல் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பயன்படுத்தும் அதிக ஆன்லைன் யூசர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா கட்டாயமாக இடம்பெறும்.

  பொறியாளர்களின் நாடு என்று கூறப்படும் இந்தியாவில் புராடக்ட் மற்றும் இன்ஜினியரிங் சம்பந்தப்பட்ட குழுக்களில் 70 சதவிகிதத்தினர் வேலை இழந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இதைத் தவிர்த்து, மார்க்கெட்டிங் மற்றும் தகவல் தொடர்பு, கார்ப்பரேட் கம்யூனிக்கேஷன், பப்ளிக் பாலிசி ஆகிய பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்கள் பெரும்பாலானவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் ட்விட்டர் தலைமையகத்தில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தினர் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  வேலை நீக்கம் தொடர்பாக டிவிட்டர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருப்பினும் டிவிட்டர் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் மஸ்க் இதைப்பற்றி வேடிக்கையாக விளக்கம் அளித்து வருகிறார். ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

  வாட்ஸ்அப்பில் ஆன்லைனில் இருப்பதை யாருக்கும் தெரியாமல் மறைப்பது எப்படி.?

   இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, டிவிட்டரில் இத்தனை ஊழியர்கள் திடீரென்று பணிநீக்கம் செய்யப்படுவதன் மூலம் தளத்தை யார் மாடரேட் செய்வார்கள், உள்ளடக்கங்களை நிர்வகிப்பது எப்படி என்பது பற்றிய மற்றொரு கேள்வியும் எழுந்துள்ளது. 100 மொழிகளுக்கு மேல் இயங்கிவரும் டிவிட்டரில் லட்சகணக்கான கோடிக்கணக்கான ஃபாலோயர்களைக் கொண்டுள்ள கணக்குகளும் உள்ளன. மிகமிக குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்களுடன் இதையெல்லாம் ட்விட்டரால் நிர்வகிக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றனர்.

  இந்தியாவிலும் அதிரடியை தொடங்கிய எலான் மஸ்க்... ட்விட்டர் ஊழியர்கள் பணிநீக்கம்

   இந்தியாவில் டிவிட்டர் அலுவலகங்கள் டெல்லி மும்பை மற்றும் பெங்களூருவில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று அலுவலகங்களிலுமே தற்போது மொத்தமாக 12 நபர்கள் தான் பணியாற்றுகிறார்கள் என்பது வருத்தம் அளிக்கும் செய்தியாக உள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Elon Musk, Twitter