Home /News /technology /

பல ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் ட்விட்டரில் வரும் எடிட் ஆப்சன்.. ஆனால் ஒரு கண்டிஷன்

பல ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் ட்விட்டரில் வரும் எடிட் ஆப்சன்.. ஆனால் ஒரு கண்டிஷன்

டிவிட்டரில் எடிட்

டிவிட்டரில் எடிட்

பல யூசர்களும் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்த ட்விட்டரில் பதிவுகளை ‘திருத்தும்’ அம்சம் வெளியிட இருப்பதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமான செய்தியை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால் சில நாட்களுக்கு முன்பே, டிவிட்டர் இனி தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம் பெறும் என்று கூறியிருந்தார். சர்ச்சைகள், புகார்கள் என்று டிவிட்டர் பற்றிய பரபரப்பான செய்திகளுக்குக் குறைவே இல்லை. ஆனால், புதிய அம்சம் பற்றிய செய்தி வெளியிட்டு டிவிட்டர், தலைப்பு செய்தியில் இடம் பெற்றுள்ளது. பல யூசர்களும் பல ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருந்த ட்விட்டரில் பதிவுகளை ‘திருத்தும்’ அம்சம் வெளியிட இருப்பதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமான செய்தியை வெளியிட்டுள்ளது. அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்

    டிவிட்டரில் ஒரு பதிவை டிவீட் செய்த பின்பு அதைத் திருத்த முடியாது. டிவிட்டர் யூசர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பதிவுகளைத் திருத்தும் விருப்பத்தை ட்விட்டர் வழங்கவே இல்லை. எடிட் ஆப்சன் சேர்க்கலாமா வேண்டாமா என்று ஒரு கருத்துக்கணிப்பும் நடந்தது. அதற்கு டிவிட்டர் இரண்டு தரப்பாகப் பிரிந்து விவாதித்தது.

    இந்த நிலையில், டிவிட்டர் எடிட் அம்சத்தை உலகம் முழுவதிலும் அமல்படுத்த இருப்பதாக வியாழனன்று தெரிவித்துள்ளது. இந்த எடிட் ஆப்சன் எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவலை, நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் கணக்கின் வழியே வெளியிட்டுள்ளது.



    ஒரு டிவீட் எடிட் செய்யப்பட்டது என்று பார்த்தால் அந்த கணக்கில் எடிட் அம்சம் இருக்கிறது என்று அர்த்தம். தற்போது இந்த விருப்பத்தை டெஸ்ட் செய்து வருகிறோம் என்று ட்விட்டர் தெரிவித்திருந்தது.

    எடிட் அம்சத்தில், ஒரு டிவீட் கடைசியாக எடிட் செய்யப்பட்டது என்ற ஒரு லேபிளுடன் ஒரு பென்சில் ஐகான் காணப்படும். அதாவது ஒரு பதிவு எப்பொழுது எடிட் செய்யப்பட்டது எந்த விவரம் அதில் குறிப்பிட்டு இருக்கும்

    Also Read : செகன்டரி நம்பர் தேவையில்லை.. உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பலாம் - வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்.!

    ஆனால் இந்த எடிட் அம்சம் அனைத்து யூசர்களுக்கும் தற்பொழுது அறிமுகம் செய்யப்படவில்லை. கட்டணம் செலுத்தும் யூசர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புதிய அம்சம் தற்போது அமெரிக்கா, கனடா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே கிடைக்கும் என்பதையும் அறிவித்துள்ளது.

    டிவிட்டரில் ‘திருத்தும்’ அம்சம் தேவைப்படுபவர்கள், மாதா மாதம் $4.99 கட்டணம் செலுத்த வேண்டும்; தோராயமாக இந்திய மதிப்பில் 400 ரூபாய் ஆகும்.

    டிவிட்டரில் திருத்தும் அம்சம் உலகம் முழுவதும் இந்த அம்சம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தாலும் கட்டணம் செலுத்தி எடிட் செய்யும் அம்சத்தைப் பெற வேண்டும் என்பதை எத்தனை யூசர்கள் விரும்புவார்கள் என்று தெரியவில்லை. நிறுவனத்திற்கு இது சாதகமான முடிவாக இருந்தாலும் இந்தியா போன்ற நாடுகளில் கட்டணம் செலுத்தி சேவை பெறுவது என்பது அந்த அளவுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தாது.

    இது மிகவும் முக்கியமான அப்டேட்டாக இருப்பதால் இந்தியாவில் எல்லா யூசர்களுக்கு இலவசமாக எதிர்காலத்தில் வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Twitter, Twitter new policy

    அடுத்த செய்தி