Home /News /technology /

54 லட்ச யூசர்களின் தகவல் திருட்டு! டிவிட்டரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

54 லட்ச யூசர்களின் தகவல் திருட்டு! டிவிட்டரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

 ட்விட்டர்

ட்விட்டர்

54 லட்ச யூசர்களின் கணக்கு விவரங்கள் ஹேக்கரின் கைவசம் உள்ளன என்பதையும் தற்போது டிவிட்டர் உறுதி செய்துள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கடந்த சில மாதங்களாகவே ட்விட்டர் பற்றிய பல்வேறு செய்திகள் வைரலாக பகிரப்பட்டு தலைப்பு செய்தியாக இடம் பெற்று வந்துள்ளன. எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கப் போவதாக வெளிவந்த செய்தி முதல், எலான் டிவிட்டர் ஒப்பந்தம், ட்விட்டரில் ஆட்குறைப்பு, புதிய தலைமை, போலி யூசர்கள் மற்றும் சமீபத்தில் டேட்டா பிரீச் வரை பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.

    புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி ஒவ்வொரு மாதமும் ட்விட்டர், ஃபேஸ்புக் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை இயக்கி வரும் பெரு நிறுவனங்கள் அனைத்தும், யூசர்களின் புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது பற்றியும், எத்தனை யூசர்கள் விதிமீறலில் ஈடுபட்டார்கள் என்பது பற்றியும் முழுமையான அறிக்கையை வெளியிட வேண்டும். அதன்படி கடந்த சில மாதங்களாக ட்விட்டர் நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் எத்தனை புகார்கள் பதிவாகியுள்ளன என்றும், அந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் கம்ப்ளையன்ஸ் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதற்கிடையில், டிவிட்டரில் கணிசமான எண்ணிக்கையில் பாட்ஸ் மற்றும் போலி யூசர்கள் உள்ளன என்றும், பரபரப்பான செய்தி வெளியாகின.

    மாதிரி படம்


    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டிவிட்டர் தளம் ஹேக்கரால் பாதிக்கப்பட்டது என்றும், அதன் மூலம் 54 லட்ச யூசர்களின் கணக்கு விவரங்கள் ஹேக்கரின் கைவசம் உள்ளன என்பதையும் தற்போது டிவிட்டர் உறுதி செய்துள்ளது. இந்த சைபர்-அட்டாக் நடந்தது உண்மை தான் என்பதைக் கடந்த மாதம் டிவிட்டர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அதைச் சரியும் செய்துள்ளது என்று தெரிவித்தது.

    தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறினாலும் ஹேக்கர்கள் அதையே பயன்படுத்தி யூசர்களின் தரவுகளை ஹேக் செய்வதில் கைதேர்ந்து வருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அதேபோலத்தான் டிவிட்டரில் 54.85 லட்சம் யூசர்களின் தகவல் ஹேக் செய்யப்பட்டுள்ளது. யூசர்களின் வசிப்பிடம், அவர்களுடைய URL, ப்ரோஃபைல் புகைப்படம் மற்றும் பல்வேறு தரவுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

    64 சதவீதம் மக்கள் பிராண்டுகள் பற்றி அறிய காணொளி விளம்பரங்களைப் பார்க்க ட்விட்டரை அதிகம் பயன்படுத்துகிறார்கள்


    ஒரு யூசர் டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கிறாரா என்பதைத் தேடுவதற்குப் பல வழிகள் உள்ளன. பெயர், மின்னஞ்சல், மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட்டுத் தேடலாம். அந்த வகையில், ஆக்டிவாக உள்ள ஒரு டிவிட்டர் கணக்கின் மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஃபோன் நம்பரைத் தேடுவதற்கான ஒரு சிறிய ஆப்ஷனை வழங்கியதன் மூலம், ஹேக்கர்கள் ட்விட்டர் யூசர்களின் கணக்குகளைக் கைப்பற்றியுள்ளனர்.

    ட்விட்டர் யூசர்களின் டேட்டாவை திருடிய ஹேக்கர் அனைத்து டேட்டாவையும் 30,000 டாலருக்கு விற்பதாக ப்ளீப்பிங் கம்ப்யூட்டர் செய்தி வெளியிட்டது. ஆனால் இந்த டேட்டா ப்ரீச்சுக்கு காரணமாக இருந்தவர், யூசர்களின் டேட்டாவை இலவசமாகவும் வெளியிடுவதாகத் தகவல் வெளியானது. ஒருவேளை இந்த தகவல் வெளியாகினால் லட்சக்கணக்கான யூசர்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளியாகி அவர்களுக்கு மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். ஜனவரி 2022 இல் இந்த பிரச்சனையைக் கண்டறிந்த ட்விட்டர் நிறுவனம் உடனடியாக இதை சரிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது, சில நாட்களில் இந்த ‘bug’ஐ நீக்கிவிட்டது. இருப்பினும், ஏற்கனவே அந்த ஹேக்கரின் வசம் இருக்கும் டேட்டாவை டிவிட்டர் நிறுவனத்தால் எதுவும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.

    Also Read : உலகளாவிய செயலிழப்பை எதிர்கொண்டு மீண்டும் வேலை செய்யும் கூகுள்

    ஆண்ட்ராய்டு போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ள தகவலின்படி, ட்விட்டர் ஒவ்வொரு யூசருக்கும் இதைப் பற்றி தகவல் தெரிவித்து வருவதாகவும், யாருடைய கணக்கு பாதிக்கப்பட்டது, யாருடைய தகவல் ஹாக்கர் வசம் உள்ளது என்பதைப் பற்றித் தனிப்பட்ட முறையில் கூற முடியாது என்பதையும் கூறியுள்ளது. யூசர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்துமே ஹேக்கர்கள் வசம் இருந்தாலும், அவர்களுடைய பாஸ்வேர்ட்கள் திருடப்படவில்லை என்பது இதிலிருக்கும் ஆறுதலான ஒரே ஒரு விஷயம். எனவே ட்விட்டர் எல்லா யூசர்களையும் டூயல் ஆத்தன்டிகேஷன் ஃபேக்டரை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகிறது.

    Also Read :உடலின் செல் செயல்களை ஆராயும் டிஎன்ஏவால் செய்யப்பட்ட நானோ-ரோபோட்

    ஃபோன் நம்பரை வைத்து ஒரு கணக்கை எளிதில் ஹேக் செய்துவிட முடியும் என்ற நிலையில் தற்பொழுது ஆத்தன்ட்டிகேஷன் செயலி மூலம் லாகின் உறுதி செய்யலாம் அல்லது ஒரு ஹார்ட்வேர் கீயை லாகின் செய்யப் பயன்படுத்துமாறும் ட்விட்டர் வலியுறுத்தி வருகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Personal data theft, Twitter

    அடுத்த செய்தி