ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஹேக்கிங் இருந்து கிரேட் எஸ்கேப்... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ட்விட்டர்!

ஹேக்கிங் இருந்து கிரேட் எஸ்கேப்... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ட்விட்டர்!

ட்விட்டர்

ட்விட்டர்

ட்விட்டரில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சிக்கல்கள் தொடர்பாக அந்நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்புத்தலைவரான பீட்டர் ஜாட்கோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  ட்விட்டர் யூஸர்கள் தங்களது பழைய பாஸ்வேர்டை மாற்றியமைத்த பிறகு செல்போன், லேப்டாப், கம்யூட்டர் போன்ற சாதனங்களில் லாகின் ஆகியிருக்கும் தவறை சரி செய்துவிட்டதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

  சோசியல் மீடியாவில் நண்பராக பழகி பண மோசடிகளில் ஈடுவது எல்லாம் மலையேறிவிட்டது. தற்போது சோசியல் மீடியா மூலமாக தனிநபர் பற்றி ஒட்டுமொத்த தரவுகளையும் திருடி கோடிகளில் விற்பனை செய்யும் ஹேக்கர்கள் கும்பல் அதிகரித்து வருகிறது. எனவே தான் கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற டெக் ஜாம்பவான்கள் கூட பக் பவுண்டிற்காக கோடிகளை செலவழிக்க தயாராக உள்ளன. இந்நிலையில் ட்விட்டரில் பல லட்சக்கணக்கான யூஸர்களின் தரவு திருட்டை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  யூஸர் தனது ட்விட்டர் அக்கவுண்ட் பாஸ்வேர்ட்டை மாற்றிய உடனேயே ஸ்மார்ட்போன் முதற்கொண்டு அனைத்து சாதனங்களிலும் லாக் அவுட் ஆகிடுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் யூஸர்கள் தங்களது பாஸ்வேர்டை மாற்றினாலும், பிற சாதனங்களில் லாகின் நிலையிலேயே இருப்பது கண்டறியப்பட்டு. இந்த பிழை (பக்) மூலமாக ஹேக்கர்கள் ட்விட்டரில் உள்ள தனிநபர் தகவல்களை திருடுவதற்கான வாய்ப்புகள் இருந்தன.

  இந்நிலையில் பாஸ்வேர்டு மாற்றப்பட்ட பிறகு ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் உள்ள ட்விட்டர் ஆப்-யில் இருந்து லாக் அவுட் ஆகாமல் இருந்த பிழையை சரி செய்துள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய சிக்கல்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட யூஸர்களை தொடர்பு கொண்டு எச்சரித்துள்ளதாகவும், அவர்களை உடனடியாக பிற சாதனங்களில் இருந்து லாக்அவுட் செய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

  கடந்த ஆண்டு ட்விட்டர் பவர் பாஸ்வேர்டு ரீசெட் சிஸ்டத்தை மாற்றியபோது இந்த பிழை கண்டறியப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் அப்டேட் செய்திருந்த நிலையில் இந்த பிழை கண்டறியப்பட்டுள்ளது. எனவே கடவுச் சொற்களை மாற்றிய பிறகும் மொபைல் போன்களில் இருந்து லாக்அவுட் ஆகாத ட்விட்டர் யூஸர்கள் தாங்களாகவே உடனடியாக லாக்அவுட் செய்து, மீண்டும் லாகின் செய்யும் படி ட்விட்டர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

  "இது சிலருக்கு சிரமமாக இருக்கலாம் என்பதை நாங்கள் உணர்கிறோம், ஆனால் உங்கள் அக்கவுண்ட்டை பாதுகாப்பாகவும், தேவையற்ற அணுகலை தவிர்க்கவும் இது ஒரு முக்கியமான படியாகும்" என ட்விட்டர் தெரிவித்துள்ளது.

  ட்விட்டரில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சிக்கல்கள் தொடர்பாக அந்நிறுவனத்தின் முன்னாள் பாதுகாப்புத்தலைவரான பீட்டர் ஜாட்கோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை ஆய்வில் இறங்கிய ட்விட்டரின் தொழில்நுட்ப குழு, சிக்கல்களை சரி செய்துவிட்டதாக தற்போது அறிவித்துள்ளது.

  Read More: இந்திய மாணவனுக்கு ரூ.38 லட்சம் பரிசு வழங்கிய இன்ஸ்டாகிராம்... காரணம் என்ன?

  ட்விட்டர் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மீறல்கள் தொடர்பான புகாரில் சிக்குவது இதுமுதல் முறையல்ல. 2022ம் ஆண்டு ஜனவரி மாதம், இந்நிறுவனம் தனது யூஸர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை விளம்பர நோக்கங்களுக்காக ஏமாற்றி பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டது. இதற்காக ட்விட்டர் நிறுவனத்திற்கு 150 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்புப்படி ரூ.1,100 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Amazon, Google, Hacking, Twitter