இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் முடக்கமா? இனி யூஸ் பண்ண முடியாதா?

முகநூல்

இந்தியாவில் சமூக வலைதளங்களில் மதரீதியிலான அவதூறுகள், வசவுகளுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருத்தல், தன்னிச்சையாக தனி நபர் கணக்குகளை முடக்குதல் என பல்வேறு பிரச்சனைகளை சரிவர கையாளவில்லை சமூக வலைதளங்கள் மீது அதன் யூசர்கள் குறை கூறினர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் மூன்று மாதங்களுக்கு முன் ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் செயல்பட இந்திய அரசு புதிய சட்டதிட்டங்களை கடந்த பிப்ரவரி 25ம் தேதி அறிமுகம் செய்தது. அதனை ஏற்க அரசு மே 25 வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தது. அந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைவதால் மேற்கூறிய சமூக வலைதளங்கள் இயங்க அனுமதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இன்றுடன் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் செயல்படாது என்று தகவல் பரவியது.

இந்தியாவில் சமூக வலைதளங்களில் மதரீதியிலான அவதூறுகள், வசவுகளுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருத்தல், தன்னிச்சையாக தனி நபர் கணக்குகளை முடக்குதல் என பல்வேறு பிரச்சனைகளை சரிவர கையாளவில்லை சமூக வலைதளங்கள் மீது அதன் யூசர்கள் குறை கூறினர். அவற்றின் மேல் 36 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்பிங் செய்யப்பட்ட, நிர்வாண புகைப்படங்கள் குறித்த நடவடிக்கையை 24 மணிநேரத்திற்குள் எடுக்க வேண்டும்.

மேற்கூறிய பிரச்சனைகளை தீர்க்க, யூசர்களின் குறைகளை கேட்டறியவும் தனி அதிகாரியையும், நோடர் தொடர்பு நபரையும் நியமிக்க வேண்டும். இதுதொடர்பாக முறையான வழிமுறைகளை வகுத்துள்ள இந்திய மன்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அதனை சமூகவலைதளங்கள் பின்பற்றுவதற்காக மே 25 ஆம் தேதி வரை காலக்கெடு விதித்திருந்தது. இதற்கு இந்திய நிறுவனமான கூ(Koo)விற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

மூன்று மாதங்கள் அவகாசம் இருந்தும் இவை எதையும் சமூக வலைதளங்கள் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சமூக வலைளங்கள் 6 மாத கால அவகாசத்தை கோரியிருந்தன. இதுகுறித்து அரசு தரப்பில் இந்த நிறுவனங்கள் அரசின் புதிய விதிகளை கடைபிடிக்காவிட்டால் அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தது. இதனால் இந்தியாவின் யூசர்ஸ் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது என்று அர்த்தமில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

Also read... Gmail : உங்கள் வேலையை ஈஸியாக்க ஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ள 7 புதிய வழிகள்!

இதுகுறித்து டிஜிட்டல் ரைட்ஸ் ஆக்டிவிஸ்ட் நகில் பாவா, இந்த புதிய விதிகளை கடைபிடிக்க இந்திய அரசு வலியுறுத்தினால் சமூக வலைதள நிறுவனங்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேற்கூறிய திட்டங்கள் அரசியலமைப்பிற்கு உட்பட்டது இல்லை என்பதால் அரசு நீதிமன்றத்தில் சங்கடப்பட நேரிடும். இதனை நெறிப்படுத்த அரசுக்கு கால அவகாசம் தேவைப்படும். எனவே மேற்கூறிய விதிகளை சமூக வலைதள நிறுவனங்கள் கடைபிடிப்பதற்கான காலக்கெடுவை அரசு நீட்டிக்கும். மேலும் சமூக வலைதளங்களின் செயல்பாடுகளை தடை செய்ய வாய்ப்பு துளியும் இல்லை. ஏனெனில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவர் இந்திய அரசுடன் தொடர்பை வலுப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார் என்றார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: