• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Twitter: ட்விட்டரில் திடீரென பாலோயர்ஸ் குறைவது ஏன்? விளக்கம் அளித்த ட்விட்டர்!

Twitter: ட்விட்டரில் திடீரென பாலோயர்ஸ் குறைவது ஏன்? விளக்கம் அளித்த ட்விட்டர்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகளை வைத்திருப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக மொபைல் எண் மற்றும் மெயில் ஐடிகளை சரிபார்க்க அறிவுறுத்துவோம். இதனை முறையாக செய்த ஐடிகள் மட்டுமே ட்விட்டர் தளத்தில் இயங்க முடியும்.

  • Share this:
ட்விட்டர் கணக்குகளை முறையாக பராமரிக்காத நபர்களின் அக்கவுண்டை லாக் செய்து வைத்திருப்பதாக ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.

முன்னணி நடிகர் மற்றும் பிரபலமான நபர்களின் பின்தொடர்பாளர்கள் ட்விட்டரில் திடீரென குறைந்தன. பாலிவுட் நடிகர் அனுபம் கேர் மற்றும் பத்திரிக்கையாளர் ரிச்சார் கேர் ஆகியோரும் தங்களின் ட்விட்டர் கணக்குகளில் இருந்த பின்தொடர்பாளர்கள் அதிகளவு குறைந்ததாகவும், இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை? என்றும் வெளிப்படையாக அதிருப்தி பதிவு செய்து இருந்தனர். இதேபோல், இன்னும் சிலருக்கும் கூட பாலோயர்ஸ் எண்ணிக்கை குறைந்தது.

இது குறித்து ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ட்விட்டரில் இருக்கும் கணக்குகளின் உண்மைத்தன்மை ஆய்வு செய்வதற்காக வழக்கமாக ஒரு சில நடைமுறைகளை பின்பற்றுவோம்.  அதாவது, ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகளை வைத்திருப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக மொபைல் எண் மற்றும் மெயில் ஐடிகளை சரிபார்க்க அறிவுறுத்துவோம். இதனை முறையாக செய்த ஐடிகள் மட்டுமே ட்விட்டர் தளத்தில் இயங்க முடியும். மற்ற ஐடிக்கள் அழியாது, ஆனால் லாக் செய்யப்பட்ட நிலையில் இருக்கும்.

Also Read:   Ind vs NZ: உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன் யார்?: ஆஸி கேப்டன் டிம் பெய்ன் கணிப்பு!

குறிப்பிட்ட கணக்குகளை வைத்திருப்பவர்கள் தங்களின் கணக்குளை சரிபார்க்கும் வரை, அந்த ட்விட்டர் ஐடிக்கள் முடங்கிய நிலையிலேயே இருக்கும் எனக் கூறியுள்ளது. போலி அக்கவுண்டுகளை திறந்து அதன்மூலம் ட்விட்டரை பயன்படுத்துவதை தவிர்க்கவும், தவறான நபர்கள் ட்விட்டரில் செயல்படுவதை தடுக்கவும் இந்த நடைமுறையை பின்பற்றுவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

Also Read:   ரிக்கி பாண்டிங்கின் இந்த உலக சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

அனைத்து யூசர்களின் அக்கவுண்டுகளையும் பாதுகாப்பது தங்களின் முதன்மை நோக்கம் எனவும் டிவிட்டர் தெரிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் அனுபம் கேரின் அக்கவுண்டில் இருந்து சுமார் 80 ஆயிரம் பாலோயர்ஸ் எண்ணிக்கை 36 மணி நேரத்தில் குறைந்தது. இதேபோல், அமிதாப்பச்சனுக்கும் 2018 ஆம் ஆண்டு பின்தொடர்பாளர்கள் எணிக்கை குறைந்தது. இது தொடர்பாக அவரும் கேள்வி எழுப்பியிருந்தார். டிவிட்டர் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சில மாற்றங்களை செய்து கொண்டே இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்டேட்டாக இருக்கும் அக்கவுண்டுகள் தொடர்ந்து நீடிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. அப்டேட்களை செய்யாத கணக்குகள் செயல்படாதவை என தீர்மானிக்கப்பட்டு முடக்கம் செய்யப்படும். கடந்த ஆண்டில் ட்விட்டர் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதியை பெரும்பாலான நாடுகளில் ட்விட்டர் நிறுவனம் தடை செய்தது. இதற்கு முக்கிய காரணமாக அந்த நிறுவனம் கொடுத்த விளக்கம் என்னவென்றால், ட்விட்டரின் எஸ்.எம்.எஸ் சர்வீஸ்களை பயன்படுத்தி முறைகேடுகள் மற்றும் தேவையற்ற தகவல்கள் பரிமாறுவது கண்டுபிடிக்கப்பட்டது. யூசர்களும் இது குறித்து புகார்களை அந்த நிறுவனத்துக்கு எழுப்பியதன் அடிப்படையில் அந்த வசதியை நீக்கியது. ஒரு சிலர் ட்விட்டர் கணக்கை பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் உள்ளனர். அவர்களுடைய அக்கவுண்டுகள் இதன்மூலம் முடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: