ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Twitter செயலிக்கு மாற்றாக Bluesky உருவாக்கும் ஜாக்!

Twitter செயலிக்கு மாற்றாக Bluesky உருவாக்கும் ஜாக்!

ட்விட்டருக்கு மாற்றாகுமா ப்ளூஸ்கை

ட்விட்டருக்கு மாற்றாகுமா ப்ளூஸ்கை

Bluesky: இந்த செயலி வெளியானபின் இது ட்விட்டருக்கு மாற்றாக அமையும் என்று அந்நிறுவனம் பெரிதும் நம்புகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ட்விட்டரின் முன்னாள் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, ட்விட்டருக்கு மாற்றாக புதிய சமூக தளத்தை சோதனை செய்வதாக செய்தி வெளியிட்டுள்ளார்.

வியாழனன்று ட்விட்டர் எனும் மைக்ரோ பிளாக்கிங் தளத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய நிலையில் அதற்கு  ஒரு வாரத்திற்கு முன்பு தனது ப்ளூஸ்கை( bluesky ) எனும் புதிய சமூக வலைதளத்தின்  பீட்டா சோதனை நடைபெற்று வருவதாகவும். அதற்கு சோதனையாளர்களை தேடுவதாக ஜாக் டோர்சி செய்தி வெளியிட்டார்.

2015 முதல் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாக், ட்விட்டர் போன்ற ஒரு பேரலெல் செயலியாக  ப்ளூஸ்கியை 2019 இல் உருவாக்கத் தொடங்கினார். அதன் பின்னர் நவம்பர் 2021 இல், அவர் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை விட்டு விலகி முழுமையாக இந்த செயலியை உருவாக்கும் பணியில் இறங்கினார்.

நாங்கள் உருவாக்கும் செயலியை  ப்ளூஸ்கை என்று அழைக்கிறோம். ‘ப்ளூஸ்கை' என்ற சொல் ஒரு பரந்த-விரிந்த வாய்ப்பை எடுத்துக்காட்டுகிறது. அதுபோலவே செயலியும் அங்கீகரிக்கப்பட்ட பரிமாற்ற நெறிமுறை (AT புரோட்டோக்கால்) எனப்படும் கூட்டமைக்கப்பட்ட சமூக வலைப்பின்னலைப் பயன்படுத்தும். இது ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களால் ஹோஸ்ட் செய்யப்படுகிறது என்றார்.

அண்டார்டிக்காவில் சுருங்கி வரும் ஓசோன் ஓட்டை..! விஞ்ஞானிகள் கணிப்பு

ப்ளூஸ்கை, மக்கள் பயன்படுத்தும் எல்லா சமூக ஊடகங்களுக்கும் போட்டியாக இருக்கும் என்று ஜாக்  கடந்த வாரம் தனது ட்விட்டரில் தெரிவித்தார். செயலியின் அடிப்படை சோதனைகள் நிறைவுற்றது. பலதரப்பட்ட பயனர்கள் பயன்பாட்டுக்கு வர இருப்பதால் செயலியை மேம்படுத்த, நெறிமுறை சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஒரு நெட்வொர்க் பயன்படுத்த பட தொடங்கியதும் அதற்கு பல தரப்பினரின் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. நெறிமுறைகளை குறுக்குசோதனைகள் செய்ய தொடங்கியுள்ளோம். சிக்கல்களைத் தீர்க்க தனிப்பட்ட பீட்டா சோதனை தொடங்க இருப்பதாக ஜாக் கூறினார்.

இந்த செயலி வெளியானபின் இது ட்விட்டருக்கு மாற்றாக அமையும் என்று அந்நிறுவனம் பெரிதும் நம்புகிறது. சோதனைகள் முடிந்து சந்தைக்கு வரும்போது உண்மை நிலை தெரியும்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Elon Musk, Twitter