இனி ஹார்டின் விடமுடியாது: புதிய வசதிகளை அறிமுகம் செய்ய ட்விட்டர் யோசனை!

உலகம் முழுவதும் 336 மில்லியன் பேர் பயன்படுத்தும் ட்விட்டர், மிகச்சிறந்த கருத்து பறிமாற்ற செயலியாக திகழுகிறது.

news18
Updated: October 30, 2018, 7:35 PM IST
இனி ஹார்டின் விடமுடியாது: புதிய வசதிகளை அறிமுகம் செய்ய ட்விட்டர் யோசனை!
கோப்புப்படம்
news18
Updated: October 30, 2018, 7:35 PM IST
ட்விட்டரில் மற்றவர்களின் பதிவுக்கு லைக்ஸ் போடும் வசதி விரைவில் நீக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இரண்டே வரிகளில் சொல்ல வந்ததை நறுக்கென்று பதிவு செய்பவர்களின் சொர்க்கம் ட்விட்டர். ட்விட்டரை உலகம் முழுவதும் 33.6 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவர் ஒரு ட்வீட் செய்தால், அதை அவரைப் பின் தொடருபவர்கள் விரும்பினால் லைக், ரீ-ட்வீட், ரிப்ளே செய்யலாம். இதய வடிவில் இருக்கும் லைக்ஸ் பட்டனை நீக்க ட்விட்டர் முடிவெடுத்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

லைக்ஸ் வசதி நீக்கம் பற்றிய செய்திகளை அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜேக் டோர்சே உறுதி செய்துள்ளார். லைக் பட்டனை அழுத்தும் வசதியால் உபயோகிப்பாளர்கள் இடையே கருத்துப்பரிமாற்றம் ஏதும் நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, இந்த வசதியை நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக புதிய வசதிகள் ஏதேனும் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்..

கூகுள் ப்ளேஸ்டோரில் ஆப் டவுன்லோட் செய்தால் இவ்வளவு பிரச்னையா? கவனம் பாஸ்!

பிக் பாஸ் புகழ் யாசிகாவின் கியூட் போட்டோஸ்!

Also see..
Loading...
First published: October 30, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...