12 ஆண்டுகளுக்குப் பின்னர் பதவி விலகிய ட்விட்டர் துணை நிறுவனர்

முன்னர் ட்விட்டர் சி.இ.ஓ ஆகப் பணியாற்றி வந்த இவான் வில்லியம்ஸ், தற்போது துணை நிறுவனர்களுள் ஒருவராக மட்டுமே இருக்கிறார்.

Web Desk | news18
Updated: February 23, 2019, 1:11 PM IST
12 ஆண்டுகளுக்குப் பின்னர் பதவி விலகிய ட்விட்டர் துணை நிறுவனர்
File photo
Web Desk | news18
Updated: February 23, 2019, 1:11 PM IST
கடந்த 12 ஆண்டுகளாக ட்விட்டர் நிறுவனத்தின் தூண்களுள் ஒன்றாகப் பணியாற்றி வந்த துணை நிறுவனர் இவான் வில்லியம்ஸ் தற்போது பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

2006-ம் ஆண்டு ட்விட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ட்விட்டர். இந்நிறுவனத்தை ஜேக் டார்ஸி, நோவா க்ளாஸ், பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ் ஆகிய நண்பர்கள் இணைந்து குழுவாகத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாகவே இவான் வில்லியம்ஸ் தான் ட்விட்டரைவிட்டு வெளியேறப்போவதாக சிறு சிறு பதிவுகளைக் குறியீடாக வெளியிட்டு வந்தார். இந்நிலையில், இன்று தான் ட்விட்டரை விடுத்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்தார். முன்னர் ட்விட்டர் சி.இ.ஓ ஆகப் பணியாற்றி வந்த இவான் வில்லியம்ஸ், தற்போது துணை நிறுவனர்களுள் ஒருவராக மட்டுமே இருக்கிறார்.
Loading...தனது ட்விட்டர் பக்கத்தில் இவான் வில்லியம்ஸ், “ட்விட்டர் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து கடந்த 12 ஆண்டுகளாக ட்விட்டர் போர்டில் பணியாற்றி வந்தேன். மிகவும் ஆர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் சவால் நிறைந்ததாகவும் எனது பணி இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: விற்பனைக்கு வருகிறது உபர் ஈட்ஸ்! காரணம் என்ன?
First published: February 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...