சுந்தர் பிச்சை மற்றும் சத்யா நாதெல்லாவுக்கு பிறகு, இந்திய வம்சாவளியை சேர்ந்த மற்றொருவர் முன்னணி பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தகவல் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ஜாக் டோர்சி ராஜினாமா செய்துள்ளார், இதனையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் சிடிஓ பராக் அகர்வால் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
"ட்விட்டரை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளேன், ஏனெனில் நிறுவனம் மெம்மேலும் முன்னேறத் தயாராக உள்ளது என்று நான் நம்புகிறேன். ட்விட்டரின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான பராக் மீது எனது நம்பிக்கை ஆழமானது. கடந்த 10 வருடங்களாக அவரது பணி ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது திறமைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர் வழிநடத்த வேண்டிய நேரம் இது" என்று டோர்சி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள பராக் அகர்வால், என் மேல் நம்பிக்கை வைத்து ட்விட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நிறுவனத்தை மென்மேலும் உயர்த்த பாடுபடுவேன், வரவிருக்கும் வாய்ப்புகளால் நான் நம்பமுடியாத அளவிற்கு உற்சாகமடைகிறேன் என்றும் கூறியுள்ளார்.
பராக் அகர்வால் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.,
1. பராக் அகர்வால் பம்பாயில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பொறியியலில் கணினி அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார்.
2. இதனை தொடர்ந்து ஐஐடி பாம்பேயில் தேர்ச்சி பெற்ற பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பிஎச்டி பெற்றார்.
3. பராக் தனது கல்வியை முடித்த பிறகு மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் மற்றும் யாகூ ரிசர்ச் ஆகியவற்றில் தலைமைப் பதவிகளை வகித்தார்
4. அக்டோபர் 2011ல் ட்விட்டரில் இணைந்தார்.
5. வருவாய் மற்றும் நுகர்வோர் பொறியியலில் செய்த சிறந்த பணியின் காரணமாக பராக் குறுகிய காலத்திலேயே நிறுவனத்தின் மிகச்சிறந்த மென்பொருள் பொறியாளர் என்ற இடத்துக்கு முன்னேறினார்.
6. 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் பராக்கின் சிறப்பான பணியின் காரணமாக ட்விட்டர் நல்ல வளர்ச்சியை பெற்றது.
7. அக்டோபர் 2018ல், ட்விட்டர் நிறுவனத்தின் CTO-வாக நியமனம் செய்யப்பட்டார்.
8. CTO-வாக பொறுப்பேற்ற பின்னர் அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப உத்திக்கு பராக் பொறுப்பேற்றார். அதேநேரத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி வேகத்தை மேம்படுத்தும் பணியை முன்னெடுத்தார்.
9. 2019ல் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி பராக்கை ப்ராஜெக்ட் ப்ளூஸ்கியின் தலைவராக்கினார்.
10. நவம்பர் 29, 2021 அன்று, ஜாக் டோர்சி ட்விட்டரில் இருந்து ராஜினாமா செய்தார், மேலும் ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பராக்கை ட்விட்டர் நிறுவனம் பணியமர்த்தியுள்ளது.
11. பராக் 37 வயது மற்றும் இளைய தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவராகவும் இருக்கிறார். இவருக்கும், மார்க் ஜுக்கர்பெர்க்கினிற்கும் ஒரே வயது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Twitter