ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Twitter Blue : ட்விட்டர் ப்ளூ டிக் பெற புதிய சந்தா, விலை, திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள்!

Twitter Blue : ட்விட்டர் ப்ளூ டிக் பெற புதிய சந்தா, விலை, திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள்!

ட்விட்டர்

ட்விட்டர்

Twitter Blue : புதிதாக டிவிட்டர் கணக்கு தொடங்கியவர்கள் உடனடியாக இந்த சேவையைப் பெற முடியாது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ட்விட்டர் எவ்வாறு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பது பற்றிய பல விதமான கேள்விகள் எழுப்பப்பட்டு வருவது ஒரு புறம் இருக்கிறது. மற்றொரு பக்கத்தில் ட்விட்டரில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்பது பற்றி தினமும் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நிலையில் அதிரடியான மாற்றங்களை எல்லாம் செய்து வருகிறார் எலான் மஸ்க். ஏற்கனவே வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளுக்கும் சந்தா செலுத்த வேண்டும் என்ற செய்தி சில வாரங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது பல மாற்றங்களுக்கு உட்பட்டு தற்போது ட்விட்டர் புளூ என்ற புதிய சரிபார்க்கப்பட்ட கணக்கிற்கான, புதிய சந்தா விலை உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்

உங்கள் ட்விட்டர் கணக்கை சரிபார்க்கப்பட்ட கணக்கு என்ற மாற்ற வேண்டும் என்றால், ட்விட்டர் ப்ளூ என்ற பணம் செலுத்தி பெறக்கூடிய திட்டத்தை தேர்வு செய்யவேண்டும். சந்தா செலுத்தினால், உங்கள் கணக்கில் ஒரு புளூ டிக் தோன்றும். அதுமட்டும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில அம்சங்களும் உங்கள் கணக்கிற்கு கிடைக்கும். உதாரணமாக சந்தா செலுத்துபவர்களுக்கு தான் ட்வீட்டை எடிட் செய்யும் அம்சத்தை எலான் வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மொபைல் நெட்வொர்க் திட்டங்கள் போல, பல விதமான திட்டங்களை வெவ்வேறு விலையில் எலான் மஸ்க் பட்டியலிட்டுள்ளார். ஆண்டிராய்டு ஃபோனில் டிவிட்டர் ப்ளூ டிக் வேண்டுமென்றால், மாதம் அமெரிக்க டாலரின் மதிப்பில் ஒரு மாத சந்தா விலையாக 11 டாலர் (இந்திய மதிப்பில் 895 ரூபாய்) செலுத்த வேண்டும். இதே விலை தான் ஆப்பிள் சாதனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் ப்ளூ சேவை யாருக்கெல்லாம் கிடைக்கும்?

மொபைல் அல்லாமல், இணையதளத்தில் ப்ளூ டிக் பெற விரும்புபவர்களுக்கு வேறு விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த சந்தா செலுத்தி ப்ளூ டிக் பெறும் சேவை, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், யுகே மற்றும் நியூசிலாந்து ஆகிய ஆறு நாடுகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் உலகம் முழுவதும் இது அமலுக்கு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக டிவிட்டர் கணக்கு தொடங்கியவர்கள் உடனடியாக இந்த சேவையைப் பெற முடியாது. கணக்கு தொடங்கி 90 நாட்கள் ஆனபிறகே, இதற்கு சந்தா செலுத்தி, ப்ளூ டிக் பெறலாம். ப்ளூ டிக் சந்தாதாரர்கள் அனைவருமே தங்களுடைய மொபைல் எண்ணை வெரிஃபை செய்வது கட்டாயம். இந்த திட்டத்தில் நீங்கள் சந்தா செலுத்திய பிறகு, உங்கள் கணக்கின் முகப்பு புகைப்படம், பெயர் அல்லது யூசர் நேம் ஆகியவற்றில் நீங்கள் எதை மாற்றினாலும், புளூ டிக்கை இழப்பீர்கள்.

உங்களுடைய மாற்றங்கள் அனைத்துமே ட்விட்டரால் மீண்டும் சரிபார்க்கப்பட்டு சரியாக இருக்கிறது என்பதை உறுதி செய்யும் வரை உங்களுக்கு வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்கு இருக்காது. அது மட்டுமில்லாமல் இந்த சரிபார்ப்பு காலத்தில் நீங்கள் கூடுதலாக எந்தவித மாற்றத்தையும் செய்ய முடியாது. இதற்கு முன்னர், $7.99 க்கு சந்தா செலுத்தி இந்த திட்டத்தில் இணைந்த ஆப்பிள் யூசர்களுக்கும் இனி மாதம் $11 செலுத்த வேண்டும்.

First published:

Tags: Android, Twitter