எழுத்தே இல்லாமல் ட்வீட் செய்ய முடியுமா? - சாதித்து காட்டிய நெட்டிசன்கள்

இதையடுத்து ட்விட்டர் நிறுவனம் 140 எழுத்துகளுக்கு பதிலாக 280 எழுத்துகள் வரை ட்வீட் செய்யும் வசதியை ஏற்படுத்தியது | is this a new update in twitter. tweeting without a word

news18
Updated: December 1, 2018, 5:36 PM IST
எழுத்தே இல்லாமல் ட்வீட் செய்ய முடியுமா? - சாதித்து காட்டிய நெட்டிசன்கள்
இதையடுத்து ட்விட்டர் நிறுவனம் 140 எழுத்துகளுக்கு பதிலாக 280 எழுத்துகள் வரை ட்வீட் செய்யும் வசதியை ஏற்படுத்தியது | is this a new update in twitter. tweeting without a word
news18
Updated: December 1, 2018, 5:36 PM IST
ட்விட்டரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு எழுத்து கூட இல்லாமல் போடப்பட்ட ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போல தற்போது ட்விட்டரும் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. அரசியல் பிரபலங்கள், திரைநட்சத்திரங்கள், சாதாரண மக்கள் என அனைவரும் ட்விட்டர் மூலம் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ட்விட்டர் பயன்பாட்டிற்கு வந்த போது அதில் 140 எழுத்துகளுக்குள் மட்டுமே ட்வீட் செய்யும் வசதி இருந்தது. இதனால் சிலர் தங்கள் கருத்துகளை முழுமையாக தெரிவிக்க முடியாமல் இருந்தனர். இதையடுத்து ட்விட்டர் நிறுவனம் 140 எழுத்துகளுக்கு பதிலாக 280 எழுத்துகள் வரை ட்வீட் செய்யும் வசதியை ஏற்படுத்தியது.

மேலும் ட்விட்டரில் ட்வீட் செய்ய வேண்டுமானால் ஒரு எழுத்தாவது இருக்க வேண்டும் அப்படி இல்லையென்றால் நம்மால் ட்வீட் செய்ய முடியாது. ஆனால் ட்விட்டர் நிறுவனம் தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு எழுத்து கூட இல்லாமல் ட்வீட் ஒன்றை செய்துள்ளது. அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை வைத்து பலர் மீம்ஸ்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.மேலும் ட்விட்டர் நிறுவனம் ஒரு எழுத்து கூட இல்லாமல் ட்வீட் செய்ததை போல பலர் முயற்சி செய்து வருகின்றனர். அதில் பலர் அதைப்போலவே ட்வீட் செய்து சாதித்து காட்டியுள்ளனர்.

அதில் ஒருவர் 2018 ஆம் ஆண்டில் நான் சாதித்தது இது தான் என்று இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Loading...
மற்றொருவர் நான் எப்போது மெசேஜ் செய்தாலும் என் மனதுக்கு நெருக்கமானவள் இப்படிதான் எதையும் சொல்ல மாட்டாள் என்பது போல பதிவிட்டுள்ளார்.இது போல் பலரும் நகைச்சுவையாக பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
First published: December 1, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...