Home /News /technology /

டிவி-க்களை ஆன்லைனில் வாங்கவே அதிக இந்தியர்கள் விரும்புகிறார்கள் - சர்வேயில் வெளியான தகவல்!

டிவி-க்களை ஆன்லைனில் வாங்கவே அதிக இந்தியர்கள் விரும்புகிறார்கள் - சர்வேயில் வெளியான தகவல்!

டிவி

டிவி

அதிகமான இந்திய மக்கள் டிவி-க்களை வாங்க ஆன்லைனை நாடுகிறார்கள் என்று மார்க்கெட் ரிசர்ச் நிறுவனமான சைபர் மீடியா ரிசர்ச் (CyberMedia Research) நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

  சைபர் மீடியா மேற்கொண்ட புதிய ஆய்வின் படி, இதுவரை ஆஃப்லைனில் டிவி வாங்கியவர்களில் ஐந்தில் மூன்று பேர், தங்களது அடுத்த புதிய டிவியை ஆன்லைனில் வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். பிராண்ட் நம்பிக்கை, வசதி மற்றும் பணத்திற்கான மதிப்பு ஆகிய 3 முக்கிய காரணிகள் இந்திய மக்களை ஆன்லைனில் டிவி-க்களை வாங்க தூண்டுவதாக CyberMedia Research (CMR)-ன் சமீபத்திய அறிக்கை தெரிவித்துள்ளது.

  இது 18-40 வயதுக்குட்பட்ட 3,236 நுகர்வோரை உள்ளடக்கிய ஒரு விரிவான பான்-இந்தியா சர்வேயை அடிப்படையாக கொண்டது. இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, லக்னோ, நாக்பூர், அசன்சோல், கோயம்புத்தூர் மற்றும் ஜலந்தரில் இந்த சர்வே எடுக்கப்பட்டது.

  சைபர் மீடியா ஆராய்ச்சியின் “இந்தியா, மற்றும் டிவி வாங்கும் பழக்கம்” (“India, And the TV Buying Behaviour") என்ற தலைப்பில் மேகொள்ளப்பட்ட ஆய்வு முடிவின் அறிக்கைபடி, தீவிர தொற்றுக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் அதிகமான இந்திய நுகர்வோர் தங்கள் வாங்க நினைக்கும் அடுத்த புது டிவி-யை ஆன்லைனில் வாங்கவே விரும்புகிறார்கள். Tier 1 மற்றும் Tier 2 சிட்டிக்களில் வழங்கப்படும் ஈஸி ஹோம் டெலிவரி, டிவி தேர்வுகளின் வரம்பு மற்றும் கவர்ச்சிகரமான மற்றும் மலிவு கட்டணச் சலுகைகள் ஆகியவை ஆன்லைனில் வாங்கும் அனுபவத்தை சிறப்பாக மாற்றுகிறது என்ற எண்ணம் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்கள் என்று அறிக்கை கூறுகிறது.

  Also Read : 5ஜி நெட்வொர்க்கால் ஒரு புதிய பிரச்சனை! தொலைத்தொடர்பு துறை மக்களுக்கு எச்சரிக்கை

  சைபர் மீடியா ரிசர்ச் (CMR) தரவுகளின்படி ஆன்லைனில் அமேசானும், ஆஃப்லைனில் Croma-வும் டிவி விற்பனையில் முன்னணியில் உள்ளன. இந்தியாவில் டிவி வாங்கும் நுகர்வோர்கள் அதிகம் தேர்வு செய்யும் இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மாக அமேசான் இருப்பதாகவும், பிராண்ட்டின் மீதான நம்பிக்கை, வசதி மற்றும் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமேசான் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

  சைபர் மீடியா ரிசர்ச் (CMR)-ன் இண்டஸ்ட்ரி கன்சல்டிங் குரூப் (IIG) தலைவர் சத்யா மொஹந்தி கூறுகையில், "இந்தியர்கள் பொதுவாக சராசரியாக 8 வருடங்கள் ஒரு டிவி-யை பயன்படுத்தும் அதே வேளையில், அதிக நுகர்வோர் இப்போது தங்கள் பொழுதுபோக்கு அனுபவங்களை லேட்டஸ்ட் மற்றும் ஸ்மார்ட் டிவி மூலம் மேம்படுத்த முயல்கின்றனர்" என கூறி இருக்கிறார்.

  டிவி எப்படி இருக்கிறது என நேரில் சென்று பார்த்து வாங்குவது முக்கியமான ஒன்றாக இருந்து வந்த நிலையில், ஆன்லைனில் டிவி வாங்கும் பழக்கம் அதிகரித்து வருவது பெரிய மாற்றத்தை காட்டுகிறது என்று சைபர்மீடியா ரிசர்ச் இன் இண்டஸ்ட்ரி தலைவர் பிரபு ராம் கூறி உள்ளார்.

  சைபர் மீடியா அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்:

  தற்போதைய டிவி பயன்பாடு மற்றும் எதிர்கால டிவி பரிசீலனை..

  CMR அறிக்கைன்படி ஒவ்வொரு11-ல் 5 பேர் பழைய டிவி-யில் இருந்து ஸ்மார்ட் டிவி-க்கு அப்கிரேட் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய டிவியை வாங்கியுள்ளனர் அல்லது வாங்க திட்டமிட்டுள்ளனர். புதிய டிவி வாங்க தூண்டியதில் நண்பர்கள்/குடும்பத்தினர், ஆன்லைன் போர்ட்டல்கள் மற்றும் சோஷியல் மீடியாக்கள் அடங்கும்.

  சவுண்ட் மற்றும் பிக்சர் குவாலிட்டி..

  இந்திய வாடிக்கையாளரின் பார்வையில் டிவி-யின் சவுண்ட் குவாலிட்டி மற்றும் பிக்ச்சர் குவாலிட்டி மிக முக்கியம் என்று அறிக்கை கூறுகிறது.

  டிசைன்..

  ஸ்கிரீன் சைஸ் மற்றும் ஸ்லிம் ஃபிரேம், அட்வான்ஸ்டு டிசைன் ஆகியவற்றுக்கு வாடிக்கையாளர்கள் முன்னுரிமைகள் அளிக்கின்றனர்.

  முக்கிய தூண்டுதல்:

  மக்களை ஆன்லைனில் டிவி வாங்க முக்கியமான தூண்டுதல் காரணியாக இருப்பது டோர் டெலிவரி. இது தவிர பணத்திற்கான மதிப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவை ஆன்லைனில் டிவிகளை வாங்க முக்கிய காரணங்கள். விரைவான மற்றும் பாதுகாப்பான டெலிவரி என்பது ஆன்லைன் போர்ட்டல்களின் மிக முக்கியமான எதிர்பார்ப்பாகும்.
  Published by:Vijay R
  First published:

  Tags: Television

  அடுத்த செய்தி