Home /News /technology /

உங்கள் ஃபோனில் வைஃபை சிக்னலை பூஸ்ட் செய்வது எப்படி - இந்த டிப்ஸ்களை முயற்சித்து பாருங்கள்

உங்கள் ஃபோனில் வைஃபை சிக்னலை பூஸ்ட் செய்வது எப்படி - இந்த டிப்ஸ்களை முயற்சித்து பாருங்கள்

Mobile Wifi

Mobile Wifi

Boost WIFI Signal | இன்டர்நெட் பயன்படுத்தும் பலரும் அவ்வபோது இந்த பிரச்சினையை எதிர்கொண்டிருப்பார்கள். அதாவது உங்கள் வைஃ-பை சிக்னல் தற்போது வீக்-காக உள்ளது என்ற செய்தி வரும். எந்த நெட்வோர்க் சேவையை பயன்படுத்தினாலும் இந்த குறை ஏதேனும் ஒரு சமயத்தில் வந்தே தீரும்.

மேலும் படிக்கவும் ...
இன்டர்நெட் இணைப்பு என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நம் அன்றாட வாழ்வில், தகவல்களை தெரிந்து கொள்ள இது அடிப்படையான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக, தொழில்நுட்ப ரீதியாக பணிபுரிபவர்களுக்கு இன்டர்நெட் என்பது மிகவும் அவசியமான ஒன்று. வீட்டில் இருப்பவர்களுக்கும் கூட மியூஸிக் கேட்பது, வீடியோ பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது போன்ற அனைத்து ஆன்லைன் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் தலையாய அடிப்படையாக இருப்பது இன்டர்நெட் ஆகும்.

இப்படி இன்டர்நெட் பயன்படுத்தும் பலரும் அவ்வப்போது இந்த பிரச்னையை எதிர்கொண்டிருப்பார்கள். அதாவது உங்கள் வைஃ-பை சிக்னல் தற்போது வீக்-காக உள்ளது என்ற செய்தி வரும். எந்த நெட்வோர்க் சேவையை பயன்படுத்தினாலும் இந்த குறை ஏதேனும் ஒரு சமயத்தில் வந்தே தீரும். நீங்களும் வைஃ-பை இணைப்பு பயன்படுத்துபவர் என்றால், நீங்களும் இந்த தலைவலியை எதிர்கொண்டு வருவீர்கள். ஆனால், இதற்கு நிரந்தர தீர்வு காண சில எளிய டிப்ஸ்களை பின்பற்றி பார்க்கலாம். அவை என்ன என்பதை இந்த செய்தியில் அறிந்து கொள்ளலாம்.

முதலில் உங்கள் டிவைஸ் அல்லது ஸ்மார்ட்ஃபோனை ரீஸ்டார்ட் செய்யுங்கள்

இது கற்காலம் அல்ல. 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப உலகம். இப்போது போய் இந்த சாதாரண ஐடியா-வா என தோன்றக் கூடும். ஆனால், உங்கள் டிவைஸ் அல்லது ஸ்மார்ட்ஃபோனை ரீஸ்டார்ட் செய்தீர்கள் என்றால், உங்களுக்கான இன்டர்நெட் இணைப்பு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பக் கூடும். இன்னும் பழைய டிரிக் ஒன்று உள்ளது. சிறிது நேரத்திற்கு உங்கள் டிவைஸை ஸ்விட் ஆஃப் செய்துவிட்டு, சிறிது நேரம் கழித்து ஆன் செய்தால், இது சரியாக வரும். அதிர்ச்சி தேவையில்லை. அனைத்து ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பாளர்கள் வழங்கும் தரம் என்பது இவ்வளவுதான்.



வைஃ-பை ரவுட்டரை ரீ-ஸ்டார்ட் செய்யுங்கள்

உங்கள் ஃபோனை ரீஸ்டார்ட் செய்த பிறகும் இணைப்பு கிடைக்கவில்லை என்றால், வைஃ-பை ரவுட்டரை ஸ்விட்ச் ஆஃப் செய்து பாருங்கள் அல்லது அதில் உள்ள வொயரை அன்பிளக் செய்து, மீண்டும் மாட்டிப் பார்க்கலாம்.

Also Read : இந்தியாவில் கூகுள் பிளே பாஸ் சர்வீசஸ் அறிமுகம்...

ரவுட்டரை நெருக்கமாக வைத்துக் கொள்ளவும்

ரவுட்டருக்கும், உங்கள் டிவைசுக்கும் இடையே ஏகப்பட்ட தடைகள் இருப்பதால் இன்டர்நெட் இணைப்பு கிடைக்காமல் போகலாம். ஆகவே, எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு ரவுட்டரையும், ஸ்மார்ட் ஃபோனையும் அருகாமையில் வைத்துக் கொண்டால் சிக்னல் அதிகமாக கிடைக்கும். ரவுட்டரை உயரமான இடத்தில் வைத்தாலும் சிக்னல் நன்றாக இருக்கும்.

Also Read : டெலிகிராமின் முக்கிய அம்சத்தை காப்பி அடிக்கப்போகும் வாட்ஸ் அப்! 

ஸ்மார்ட் ஃபோனில் அனைத்து செட்டிங்ஸ் ரீசெட் செய்யுங்கள்

எல்லா முயற்சிகளையும் விட இது சிறந்த தீர்வுகளை கொடுக்கும். உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் அனைத்து செட்டிங்ஸ் ரீசெட் செய்து பாருங்கள். குறிப்பாக, வைஃ-பை நெட்வொர்க்ஸ், ப்ளூடுத் இணைப்பு மற்றும் ஹோம் ஸ்க்ரீன் லே அவுட் போன்ற செட்டிங்க்ஸ் ரீசெட் செய்யவும். உங்கள் ஃபோனில் சேமிக்கப்படாதவை டெலீட் ஆகிவிடும் என்பது உண்மைதான். ஆனால், நீண்ட நேரம் முயற்சித்தும் வெற்றி கிடைக்காவிட்டால், இது ஒன்றே தீர்வு தரும்.
Published by:Selvi M
First published:

Tags: Technology, Wifi

அடுத்த செய்தி