இலவச வாய்ஸ் கால் வசதியை அளிக்கும் ட்ரூகாலர் ஆப்..!

ட்ரூகாலர் ஆப் பயன்படுத்தும் அத்தனை பேருக்கும் இந்த வசதியைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

Web Desk | news18
Updated: June 19, 2019, 5:04 PM IST
இலவச வாய்ஸ் கால் வசதியை அளிக்கும் ட்ரூகாலர் ஆப்..!
ட்ரூகாலர் ஆப்
Web Desk | news18
Updated: June 19, 2019, 5:04 PM IST
புதிதாக இலவச இன்டெர்நெட் வாய்ஸ் கால் சேவையை அறிமுகப்படுத்துகிறது ட்ரூகாலர் ஆப்.

‘ட்ரூகாலர் வாய்ஸ்’ என்னும் புதிய அம்சம் மூலம் ட்ரூகாலர் பயன்படுத்தும் பயனாளர்கள் இணைய வாய்ஸ்கால் சேவையைப் பயன்படுத்தலாம். மொபைல் டேட்டா மட்டுமல்லாது வைஃபை மூலமும் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும்.

தற்போதைய சூழலில் சோதனைக் கட்டத்தில்தான் ட்ரூகாலர் வாய்ஸ்கால் அம்சம் உள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு தளங்களுக்கும் இந்த ஆப்ஷன் அறிமுகம் செய்யப்படும். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களில் அறிமுகமாகும் போது கால் லாக்(call log), எஸ்.எம்.எஸ், கான்டாக்ட்ஸ் லிஸ்ட் ஆகிய ஆப்ஷன் மூலம் ஷார்ட் கட் ஆக உபயோகிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.


முதலில் ட்ரூகாலர் சப்ஸ்க்ரைப் செய்திருந்தால் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால், தற்போது ட்ரூகாலர் ஆப் பயன்படுத்தும் அத்தனை பேருக்கும் இந்த வசதியைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

மேலும் பார்க்க: அறிமுகத்துக்கு முன்னரே எதிர்ப்பை சம்பாதிக்கும் ஃபேஸ்புக் க்ரிப்டோகரன்ஸி!
First published: June 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...