ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

போனுக்குள் ஒரு ரோபோ.. இனி நமக்கு வேலை ஈசி.. ட்ரெண்டாகி வரும் புதிய AI Chatbot..!

போனுக்குள் ஒரு ரோபோ.. இனி நமக்கு வேலை ஈசி.. ட்ரெண்டாகி வரும் புதிய AI Chatbot..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ChatGPT தனது அறிவாற்றலுடன் ஒரு செஃப் ரோலை ஏற்கலாம், சமையல் டிப்ஸ்களை வழங்கலாம், மார்க்கெட்டர்ஸ்களுக்கு ஏற்ற வணிகத் திட்டங்களை உருவாக்கலாம், மக்கள் தொடர்பு நிபுணர்களுக்கான பத்திரிகை வெளியீடுகளை உருவாக்கலாம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

யூஸர்களுடன் இயல்பான உரையாடல்களை மேற்கொள்ளும் மற்றும் அவர்களின் பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறனை கொண்டுள்ள காரணத்தால் டயலாக்-பேஸ்டு  தொழில்நுட்பமான ChatGPT மிகவும் பிரபலமாகி வருகிறது.பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ள இந்த மனதை கவரும் புதிய AI சாட்போட்டாக இருக்கும் ChatGPT, ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ரிசர்ச் & டெவலப்மென்ட் நிறுவனமான OpenAI-ஆல் உருவாக்கப்பட்டுள்ளது. பல மேம்பட்ட திறன்களைக் கொண்டு யூஸர்களுடன் தொடர்புகொள்ள உருவாக்கப்பட்ட இந்த சாட்போட் தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ChatGPT-ன் சாஃப்ட்வேர் அல்காரிதம்களைப் பயன்படுத்தி பரந்த அளவிலான உள்ளீடுகளுக்கு மனிதர்களை போல பதில்களை உருவாக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. சாஃப்ட்வேர் நிறுவனமான Avalon Labs-ன் நிறுவனரான வருண் கூறுகையில் ChatGPT ஒரு மனிதன் செயல்படுவதை போலவே இருக்கிறது. கட்டுரைகள், கவிதைகள் அல்லது ஸ்கிரிப்ட்களை எழுத அல்லது உரையை மொழிபெயர்க்க அல்லது சுருக்க யூஸர்கள் இந்த AI-ஐ கேட்கலாம். மேலும் இது பல்வேறு தலைப்புகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அல்லது கோடிங்கில் ஏற்படும் சிக்கலையும் கூட தீர்க்கலாம் என்கிறார்.

இது தொடர்பாக தகவலை பகிர்ந்துள்ள நிபுணர்கள், ''ChatGPT-ஆனது GPT-3.5 டெக்னலாஜி மாடலை அடிப்படையாகக் கொண்டது. இது ஒரு மனிதனை போல யூஸர்களுடன் உரையாடல்களை மேற்கொள்ள டீப் லேர்னிங் அல்காரிதம்களை பயன்படுத்துகிறது. OpenAI நிறுவனத்தின் வெப்சைட்டில் ChatGPT சாட்போட்டின் செயல்பாட்டைக் காண்பிக்கும் சில மாதிரிகள் ஷேர் செய்யப்பட்டுள்ளன. அவற்றின்படி ஒரு கோடிங்-ல் பிழைத்திருத்த தீர்வுகளை வழங்குகிறது. அதே நேரம் மற்றொரு உரையாடலில் ஒருவரின் வீட்டிற்குள் எப்படி நுழைவது? என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துள்ள ChatGPT, யாரோ ஒருவரின் வீட்டிற்குள் நுழைவது போன்ற சட்ட விரோத செயல்களை பற்றி விவாதிப்பது அல்லது ஊக்குவிப்பது இங்கே பொருத்தமானது அல்ல என்று கூறுகிறது.

Read More : உலகின் முதல் செயற்கை கருப்பை வசதி.. வருடத்திற்கு 30,000 குழந்தைகளை உருவாக்குமாம்..!

மேலும் இது previous text நினைவில் வைத்திருக்கும் என்பதால் யூஸர்கள் உரையாடல் வழியில் ஃபாலோ-அப் கேள்விகளையும் கேட்கலாம். யூஸர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த எக்ஸிகியூடிவ் அசிஸ்டென்ட், நண்பர் மற்றும் தெரப்பிஸ்டை பெற்றுள்ள உணர்வை இது ஏற்படுத்தும் என்பதால் ஒரு கட்டத்தில் பெரும்பாலானோர் ChatGPT -ஐ பயன்படுத்தப் போகிறார்கள் என்று வருண் கூறுகிறார். யூஸர்கள் கேட்கும் எண்ணற்ற கேள்விகளுக்கு பயனுள்ள பதிலை கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ChatGPT, அறிமுகப்படுத்தப்பட்ட சில வாரங்களில் மில்லியன் கணக்கான யூஸர்கள் முயற்சித்து வருவதாக தெரிகிறது. யூஸர்கள் இதனிடம் நியூட்டனின் இயக்க விதிகளை விளக்க சொல்லியும் கேட்கலாம்.

ChatGPT தனது அறிவாற்றலுடன் ஒரு செஃப் ரோலை ஏற்கலாம், சமையல் டிப்ஸ்களை வழங்கலாம், மார்க்கெட்டர்ஸ்களுக்கு ஏற்ற வணிகத் திட்டங்களை உருவாக்கலாம், மக்கள் தொடர்பு நிபுணர்களுக்கான பத்திரிகை வெளியீடுகளை உருவாக்கலாம் அல்லது ஒரு தெரபிஸ்ட் போல ஆலோசனைகளை வழங்கலாம். ஏனென்றால் இதன் பதில்கள் இன்டர்நெட்டில் உள்ள பெரிய அளவிலான தகவல்களிலிருந்து பெறப்பட்டவையாக இருக்கும் என கூறப்படுகிறது.

ChatGPT -ஐ எவ்வாறு பயன்படுத்துவது.?

ChatGPT வெப்சைட்டிற்கு சென்று ChatGPT-ஐ செலக்ட் செய்யவும்.
அடிப்படை விவரங்களை என்டர் செய்த பிறகு Sign up செய்யவும்
தற்போது ட்ரெண்டாக இருக்கும் ChatGPT-இடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை ஸ்கிரீனின் அடிப்பகுதியில் காணும் டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்யவும்.
First published:

Tags: Technology, Trending, Viral