குறைந்தபட்ச பிராட்பேண்ட் ஸ்பீட் 2 mbps, கிராமப்புற சந்தாதாரர்களுக்கு சலுகை.. அரசுக்கு டிராய் பரிந்துரை...!

டிராய்

பிராட்பேண்டின் வரையறை மதிப்பாய்வு செய்யப்பட்டு, பிராட்பேண்ட் கனெக்டிவிட்டிக்கு குறைந்தபட்ச டவுன்லோட் ஸ்பீட் 512kbps இலிருந்து தற்?

  • Share this:
நாட்டில் இன்டர்நெட் கனெக்ட்டிவிட்டியை ஊக்குவிக்க மற்றும் இருக்கும் கனெக்ட்டிவிட்டிகளின் வேகத்தை அதிகரிக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அரசுக்கு பல நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது. இதில் முக்கியமான ஒன்று பிராட்பேண்ட் இணைப்பிற்கான குறைந்தபட்ச டவுன்லோட் ஸ்பீடை தற்போது இருப்பதை விட, நான்கு மடங்கு அதிகரிப்பது ஆகும். தவிர மாதாந்திர சந்தா கட்டணங்களில் குறிப்பிட்ட சதவீதத்தை மானியமாக செலுத்துவதன் மூலம் கிராமப்புறங்களில் fixed line broadband வெளியீட்டை அரசு விரைவுபடுத்த கூறியுள்ளது. "பிராட்பேண்ட் கனெக்ட்டிவிட்டி மற்றும் மேம்படுத்தப்பட்ட பிராட்பேண்ட் வேகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டி" பற்றிய பரிந்துரைகளில், டிராய் அமைப்பானது குறைந்தபட்ச பிராட்பேண்ட் வேகத்தை வினாடிக்கு 2 மெகாபிட்டாக (2Mbps) நிர்ணயிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக பரிந்துரை அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ள டிராய், "பிராட்பேண்டின் வரையறை மதிப்பாய்வு செய்யப்பட்டு, பிராட்பேண்ட் கனெக்டிவிட்டிக்கு குறைந்தபட்ச டவுன்லோட் ஸ்பீட் 512kbps இலிருந்து தற்போது 2mbps ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள 512Kbps ஸ்பீட் “சில பேஸிக் ஆப்ஸ்களை கூட அணுகுவதற்கு போதுமானதாக இல்லை” என்று கண்டறியப்பட்ட்டுள்ளதால், குறைந்தபட்ச வேக வரம்பு 2Mbps ஆக இருக்க வேண்டும் என்று டிராய் கூறி இருக்கிறது. டவுன்லோட் ஸ்பீட் அடிப்படையில் நிலையான பிராட்பேண்ட் (fixed broadband) இது பேஸிக், ஃபாஸ்ட், சூப்பர் ஃபாஸ்ட் என 3 வெவ்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று டிராய் கூறி இருக்கிறது. மேற்காணும் இந்த மூன்று வகை பிராட்பேண்ட் சேவையை டிராய் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதில் பேஸிக் வகையின் டவுன்லோட் ஸ்பீட் குறைந்தபட்சம் 2mbps-லில் துவங்கி 50mbps-க்கு குறைவாகவும், ஃபாஸ்ட் பிராட்பேண்ட் சேவையானது 50mbps -300mbps டவுன்லோட் ஸ்பீடுக்கு இடையேயும், சூப்பர் ஃபாஸ்ட் சேவையானது 300mbps வேகத்தை விட அதிகமாக வழங்கக்கூடிய திறன் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த திட்டத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்களைக் கொண்டு வருவதற்கு முன் வரையறுக்கப்பட்டபடி சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயை ஏற்றுக்கொள்ளவும் டிராய் பரிந்துரைத்தது. மேலும் கிராமப்புறங்களில் ஃபிக்ஸ்ட் லைன் வரிசையான பிராட்பேண்ட் (fixed line broadband) சேவைகளின் வளர்ச்சியை துரிதப்படுத்த, ஒரு சந்தாதாரருக்கு அவர்களின் பிராட்பேண்ட் கனெக்ஷன் கட்டணங்களுக்கு மாதம் ரூ.200 வரை திருப்பி அளிப்பதன் மூலம். டைரக்ட் பெனிஃபிட் ட்ரான்ஸ்ஃபர் (DBT - direct benefit transfer)அமல்படுத்த பரிந்துரைத்துள்ளது. DBT என்பது பல்வேறு நலத்திட்டங்களிலிருந்து, மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மானியங்களை சென்றடைவதை நோக்கமாக கொண்டது.

Also read... OnePlus, Realme மாடல்களுக்கு போட்டியாக களமிறங்கிய Samsung Galaxy A52: விலை விவரம் உள்ளே!

மேலும் கேபிள் ஆப்ரேட்டர்களை ஊக்குவிக்கும் வகையில்,பிராட்பேண்ட் சேவைகளை வழங்க கேபிள் ஆபரேட்டர்களுக்கான சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயை (computation of Adjusted Gross Revenue) கணக்கிடுவது தொடர்பான பிரச்சனைகள் முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அரசுக்கு டிராய் பரிந்துரை செய்துள்ளது. இந்த சிக்கலை தீர்க்க ஆணையம் ஏற்கனவே சில பரிந்துரைகளை அரசுக்கு தெரிவித்துள்ளதாக டிராய் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கிறது. தவிர பிராட்பேண்ட் வேகத்தை அதிகரிப்பதற்காக தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு தேவைக்கேற்ப பேக்என்ட் கனெக்ட்டிவிட்டிக்கு பயன்படுத்தப்படும் ஸ்பெக்ட்ரம் கிடைக்கும்படி செய்ய தொலைத்தொடர்பு துறைக்கு டிராய் பரிந்துரை செய்து உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: