முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இனி வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கும் தனியாகக் கட்டணம் - மகிழ்ச்சியில் டெலிகாம் நிறுவனங்கள்.. ஆனால் யூசர்கள்?

இனி வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கும் தனியாகக் கட்டணம் - மகிழ்ச்சியில் டெலிகாம் நிறுவனங்கள்.. ஆனால் யூசர்கள்?

இணையம் வழியாக செய்யப்படும் அழைப்புகளுக்கு கட்டணமா?

இணையம் வழியாக செய்யப்படும் அழைப்புகளுக்கு கட்டணமா?

இலவசமாக வழங்கப்பட்டு வரும் இணையம் வழியாக செய்யப்படும் அழைப்புகளுக்கு இனிமேல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற ட்ராயின்(TRAI) கோரிக்கையை பரிசீலனை செய்ய உள்ளது தொலைத்தொடர்பு நிறுவனம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சாதாரணமாக மொபைல் நம்பரிலிருந்து கால் செய்வது போல, பலரும் ஆன்லைன் ஆப்ஸ் வழியே இன்டர்நெட் பயன்படுத்திப் பேசி வருகிறார்கள். ஆடியோ கால் மட்டும் அல்லாமல், வீடியோ கால் வசதியும் உள்ளன. மாதம் இணையத்துக்கு இவ்வளவு கட்டணம் செலுத்துகிறேன், அதிலேயே 'கால்' செய்து பேசிக் கொள்வது எளிது என்று பலரும் நினைக்கிறார்கள். இந்நிலையில், பொதுமக்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகி இருக்கின்றது.

தற்போது இலவசமாக வழங்கப்பட்டு வரும் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஆகியவற்றின் வழியாகச் செய்யப்படும் அழைப்புகளுக்கு இனிமேல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற ட்ராயின்(TRAI) கோரிக்கையைப் பரிசீலனை செய்ய உள்ளது தொலைத்தொடர்பு நிறுவனம்.

ஜியோவின் வருகைக்குப் பின்னர் இந்தியாவில் டெலிகாம் சேவையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. முக்கியமாக அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய கட்டணங்களை மாற்றி அமைத்து இன்கமிங் சேவைகளுக்குக் கூட கட்டணம் செலுத்த வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை ஏற்படுத்தினர்.

இதனால் பாதிக்கப்பட்ட பெருமளவு மக்கள் சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப் வழியாகவும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் வழியாகவும் அழைப்புகளை மேற்கொள்கின்றனர். இதில் ஆடியோ கால் மட்டுமின்றி வீடியோகால், மேலும் குழுவாகச் சேர்ந்து பேசும் க்ரூப் சாட் ஆகியவையும் அடக்கம். தற்போது வரை இலவசமாக வழங்கப்பட்டு வரும் இந்த சேவைகளை இனிமேல் கட்டணம் செலுத்தித் தான் பெற வேண்டும் என்பது போன்ற ஒரு கோரிக்கையை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆன ட்ராய், DOT என அழைக்கப்படும் இந்தியத் தொலைத்தொடர்பு துறையிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்த கோரிக்கையை 2008 ஆம் ஆண்டு முதலே “டாட்” இடம் வைத்து வரும் ட்ராய் நீண்ட காலமாக அதைக் கிடப்பிலே போட்டு வந்தது. 2016-17 ஆம் ஆண்டில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாகக் கருத்து ஏதும் கூறாமல் இருந்த டாட் தற்போது அதிகப்படியான விளக்கங்களை அளிக்குமாறு ட்ராயிடம் தெரிவித்துள்ளது.

Also Read : பசிபிக் கடலில் மிதக்கும் 90% குப்பைகளுக்கு இந்த 6 நாடுகள்தான் காரணம்..

அவ்வாறு ட்ராயின் கோரிக்கையை டாட் ஏற்கும் பட்சத்தில், தற்போது இலவசமாக வழங்கப்பட்டு வரும் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகிள் டியோ, சிக்னல், மற்றும் டெலிகிராம் ஆகியவற்றில் வழங்கப்பட்டு வரும் இலவச சேவைகள் அனைத்தும் இதன் பிறகு கட்டணம் செலுத்தி மட்டுமே பெற முடியும்.

ஏற்கனவே இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்தியே பயன்படுத்தி வரும் நாம் இனிமேல் அந்த இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்கு ஒரு கட்டணமும், அதன்மூலம் பெறப்படும் சேவைகளுக்குத் தனியாக ஒரு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இது வாடிக்கையாளர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தாலும் டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் மிகப் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

First published:

Tags: Instagram, TRAI, Video calls, WhatsApp Audio