ப்ரீபெய்டு ப்ளான் வேலிடிட்டி காலத்தை நீட்டிக்கவும்- டெலிகாம் நிறுவனங்களுக்கு ட்ராய் உத்தரவு

இதன் மூலம் வீட்டினுள்ளேயே இருக்கும் மக்களுக்கு இச்சேவை பெரிய உதவியாய் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ப்ரீபெய்டு ப்ளான் வேலிடிட்டி காலத்தை நீட்டிக்கவும்- டெலிகாம் நிறுவனங்களுக்கு ட்ராய் உத்தரவு
மாதிரிப்படம்
  • Share this:
டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கான வேலிடிட்டி காலத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என ட்ராய் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் அமலில் உள்ளது. இத்தகைய சூழலில் ப்ரீபெய்டு சந்தாதாரர்களுக்கான ப்ளான் வேலிடிட்டி காலத்தை நீட்டிக்க வேண்டும் என ட்ராய் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் வீட்டினுள்ளேயே இருக்கும் மக்களுக்கு இச்சேவை பெரிய உதவியாய் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் பயன்படுத்தாமல் இதர வழிகளில் ரீசார்ஜ் செய்து வருவோருக்கு இந்த சூழல் பல சிரமங்களைத் தரும் என்பதால் இந்த நடவடிக்கையை அத்தியாவசியமானது எனக் கருத வேண்டும் என்றும் ட்ராய் தெரிவித்துள்ளது.


இதுகுறித்த அதிகாரப்பூர்வ உத்தரவை நேற்றே ட்ராய் அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் தெரிவித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: வாட்ஸ்அப் மூலம் உங்கள் டேட்டா-வை மிச்சப்படுத்துங்கள்
First published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading