கட்டண சேனல்களை வாடிக்கையாளரே தேர்வு செய்யும் புதிய நடைமுறை அமலானது
ஒரு கட்டண சேனலுக்கு, மாதமொன்றுக்கு அதிகபட்சம் 19 ரூபாய் மட்டுமே வாடிக்கையாளரிடம் பெற வேண்டும் என அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது.

கோப்புப் படம்
- News18
- Last Updated: February 1, 2019, 8:37 AM IST
தொலைக்காட்சி கட்டண சேனல்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் டிராயின் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.
நாம் விரும்பும் சேனல்களை, நாமே தேர்வு செய்து, அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, ஒவ்வொரு வாடிக்கையாளரும் 100 இலவச சேனல்களை அடிப்படை கட்டணத்தை செலுத்தி பார்க்கலாம்.
அதாவது, மாத கட்டணமான 130 ரூபாயுடன், 18 சதவீத ஜி.எஸ்.டி தொகை 23 ரூபாயை சேர்த்து, மொத்தமாக 153 ரூபாய் மாதந்தோறும் செலுத்த வேண்டும். இந்த 100 சேனல்களின் பட்டியலில், தூர்தர்ஷனின் 25 சேனல்களும் அடங்கும்.100-க்கும் மேற்பட்ட இலவச சேனல்கள் வேண்டும் என்றால், ஒவ்வொரு 25 இலவச சேனலுக்கும், கூடுதலாக 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதோடு, கட்டண சேனல்கள் தேவைப்பட்டால் அதற்குரிய கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.
அதேசமயம், ஒரு கட்டண சேனலுக்கு, மாதமொன்றுக்கு அதிகபட்சம் 19 ரூபாய் மட்டுமே வாடிக்கையாளரிடம் பெற வேண்டும் என அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது.
Also see...