முடிவுக்கு வருகிறது ஐ.யு.சி கட்டண முறை...!

TRAI Meet Favours Ending IUC Charge from January 1

முடிவுக்கு வருகிறது ஐ.யு.சி கட்டண முறை...!
TRAI Meet Favours Ending IUC Charge from January 1
  • News18 Tamil
  • Last Updated: November 16, 2019, 10:43 AM IST
  • Share this:
அடுத்தாண்டு ஜனவரி முதல் ஐ.யு.சி கட்டணத்தை ரத்து செய்வதற்கு ட்ராய் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாக, ஒரு தொலைத் தொடா்பு நிறுவனத்தின் வாடிக்கையாளா்கள் பிற நிறுவனங்களின் எண்களைத் தொடா்புகொண்டு பேசும்போது, அந்த அழைப்பை ஏற்பதற்கான சிறு கட்டணத்தை அந்த நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும். இது, நிறுவனங்களிடையிலான இணைப்புக் கட்டணம் (ஐயுசி) என்றழைக்கப்படும். அந்தக் கட்டணத்தை, ஒவ்வொரு அழைப்புக்கும் 6 பைசாவாக டிராய் (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) நிா்ணயித்துள்ளது.

ஜியோ நிறுவனம் சந்தையில் கால் எடுத்து வைத்ததுமே, தனது வாடிக்கையாளா்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு வசதியை முழுமையாக அளித்து வந்தது. வாடிக்கையாளா்களிடமிருந்து அழைப்புக் கட்டணம் வசூலிக்காவிட்டாலும், போட்டி நிறுவன தொலைபேசி எண்களுக்கு அவா்கள் விடுக்கும் அழைப்புகளுக்காக, அந்த நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ ஐயுசி கட்டணத்தை அளித்து வந்தது. அந்த வகையில், ஏா்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ இதுவரை ரூ.13,500 கோடி செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.


எனினும், பிற நிறுவனங்களின் வாடிக்கையாளா்கள் தங்களது வாடிக்கையாளா்களுக்கு ‘மிஸ்டு கால்’ மட்டுமே தந்து பேசுவதால், அந்த நிறுவனங்களிடமிருந்து ஐயுசி கட்டணங்கள் வசூலாவதில்லை. இதனால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று ஜியோ கூறியது

இந்த கட்டண முறையை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவுக்குக் கொண்டு வருவதாக டிராய் முன்னர் கூறியிருந்தது.

தொலைத் தொடா்பு சந்தையில் அதிரடியாக நுழைந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது வாடிக்கையாளா்களுக்கு இலவச தொலைபேசி அழைப்பு வசதியை முழுமையாக அளித்து வந்தது. வாடிக்கையாளா்களிடமிருந்து அழைப்புக் கட்டணம் வசூலிக்காவிட்டாலும், போட்டி நிறுவன தொலைபேசி எண்களுக்கு அவா்கள் விடுக்கும் அழைப்புகளுக்காக, அந்த நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ ஐயுசி கட்டணத்தை அளித்து வந்தது. அந்த வகையில், ஏா்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ இதுவரை ரூ.13,500 கோடி செலுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.எனினும், பிற நிறுவனங்களின் வாடிக்கையாளா்கள் தங்களது வாடிக்கையாளா்களுக்கு ‘மிஸ்டு கால்’ மட்டுமே தந்து பேசுவதால், அந்த நிறுவனங்களிடமிருந்து ஐயுசி கட்டணங்கள் வசூலாவதில்லை என்று ஜியோ கூறி வருகிறது. இதனால், பிற நிறுவன தொலைபேசி எண்களின் அழைப்புக்காக செலுத்தும் 6 பைசாவை வாடிக்கையாளரிடமிருந்து வசூலிப்பதாக அறிவித்து தற்போது வசூலித்து வருகிறது

இந்த நிலையில், ஐயுசி கட்டணத்தை ரத்து செய்வதற்கான அடுத்த ஆண்டு ஜனவரி மாத காலக் கெடுவை நீட்டிக்க டிராய் முடிவு செய்துள்ளது. இதற்கு, ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இதற்கிடையே, கட்டணத்தை ரத்து செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. இதனால், கொதித்தெழுந்த ஜியோ, ட்ராய் அமைப்புக்கு கடிதம் எழுதி, காலக்கெடுவை எக்காரணம் கொண்டும் நீட்டிக்கக் கூடாது. இது தொலைபேசி கட்டணத்தை உயர்வதற்கு வழிவகை செய்யும் என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், சமீபத்தில் ட்ராய் ஒரு கூட்டம் ஒன்றை நடத்தியது. 155 பேர் இதில் கலந்து கொண்டனர். ஜியோ, ஏர்டெல், வோடாபோன், பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஐயுசி கட்டணத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஐயுசி கட்டணம் ரத்து செய்யப்பட்டால், ஜியோ வாடிக்கையாளர்கள் இனி தனியாக மற்ற நெட்வொர்க்-களுக்கு பேச ரீசார்ஜ் செய்ய தேவையில்லை. பழைய முறையில் இலவசமாகவே பேசலாம்.
First published: November 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading