Home /News /technology /

30 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு ப்ளான்... ட்ராய் உத்தரவு சொல்வது என்ன?

30 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு ப்ளான்... ட்ராய் உத்தரவு சொல்வது என்ன?

கட்டண விவரம்

கட்டண விவரம்

தற்போது பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள் அதிகபட்சமாக 28 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே உள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 30 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு ப்ரீபெய்டு ரீசார்ஜ் ப்ளானாவது இருக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் நாளுக்கு நாள் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து வர முக்கிய காரணமாக இருப்பது ஸ்மார்ட்போன்கள், இது தொழில்நுட்பத்தை எளிமையாக்கியது இல்லாமல், அனைவரின் கையடக்கத்தில் உலகத்தை கொண்டு வந்துவிட்டது என்றே சொல்லலாம். அன்றாட தேவைகள் அனைத்தையும் நமக்கு எளிதாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்கள். இப்படி இந்த ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும், அதில் இணைய வசதி இல்லை என்றால், நாம் எதையோ இழந்ததை போல உணரும் அளவுக்கு இணைய சேவைகளின் தேவையும் அதிகரித்துள்ளது.

    ஆரம்பத்தில் இந்த இணைய சேவைக்கான கட்டணத்தை குறைத்து வைத்து விற்பனை செய்து வந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நாளடைவில், நாம் அதன் பயன்பாட்டிற்கு அடிமையான பின்னர், இணைய சேவை கட்டணத்தை உயர்த்தின. சமீபத்தில் கூட ஏர்டெல், வோடபோன் இந்தியா உள்ளிட்ட நிறுனங்கள் தங்களது சேவை கட்டணத்தை பல மடங்கு உயர்த்தின.

    Also Read : புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்குவோர் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!

    தற்போது பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள் அதிகபட்சமாக 28 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே உள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 13 முறை தங்களின் செல்ஃபோன் எண்ணை ரீசார்ஜ் செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

    இந்நிலையில், வவுச்சர், சிறப்பு டாரிஃப் வவுச்சர் மற்றும் காம்போ வவுச்சர் ஆகியவற்றில் தலா ஒரு திட்டத்தின் வேலிடிட்டியாவது 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என ட்ராய் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ஓராண்டுக்கு மேற்கொள்ளும் ப்ரீபெய்டு ரீசார்ஜ்களின் எண்ணிக்கை 12 ஆகக் குறையும்.

    ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய சூழலால் தாங்கள் ஏமாற்றப்படுவதாக உணர்வதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கான புகார்கள் வந்த நிலையிலேயே ட்ராய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    மேலும், உத்தரவு வந்த 60 நாட்களுக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் டிராய் உத்தரவிட்டுள்ளது.

    Also Read : வாட்ஸ்அப் யூசர்களுக்காக வரும் புதிய பில்டர்கள்!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: TRAI

    அடுத்த செய்தி