கேபிள் டிவி புதிய கட்டணம்: மார்ச் 31 வரை அவகாசம் நீட்டிப்பு

News18 Tamil
Updated: February 12, 2019, 8:11 PM IST
கேபிள் டிவி புதிய கட்டணம்: மார்ச் 31 வரை அவகாசம் நீட்டிப்பு
மாதிரிப் படம்
News18 Tamil
Updated: February 12, 2019, 8:11 PM IST
கேபிள் டிவி புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ட்ராய் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை பார்ப்பதற்கு அதற்கான கட்டணங்களை மட்டும் செலுத்தும் திட்டத்தை அறிவித்த ட்ராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம், மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ட்ராய் அறிவித்துள்ளது. அதுவரை பழைய முறையே தொடரும் என்றும் ட்ராய் கூறியுள்ளது. சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ட்ராய் தெரிவித்துள்ளது.

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...