ஜியோவில் டி.பி.ஜி நிறுவனம் ரூ.4,546 கோடி முதலீடு: ஏழு வாரத்தில் ரூ.1 லட்சம் கோடி திரட்டிய ரிலையன்ஸ்

ஜியோ நிறுவனத்தில் டி.பி.ஜி நிறுவனம் 4,546 கோடி ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் 0.93 சதவீத பங்குகளை வாங்குகிறது.

ஜியோவில் டி.பி.ஜி நிறுவனம் ரூ.4,546 கோடி முதலீடு: ஏழு வாரத்தில் ரூ.1 லட்சம் கோடி திரட்டிய ரிலையன்ஸ்
ஜியோ
  • Share this:
ஜியோ நிறுவனத்தில் கடந்த இரண்டு மாத காலத்தில் ஃபேஸ்புக் உள்ளிட்ட உலக அளவிலான மிகப் பெரும் நிறுவனங்கள் பெருமளவுக்கு முதலீடு செய்துவருகின்றன. கடந்த ஏழு வாரங்களில் 9 நிறுவனங்களிலிருந்து ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான அளவு முதலீட்டை ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது. இந்திய அளவில் மிகப் பெரும் தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ, உலக அளவில் எந்த நிறுவனத்தையும் விட அதிக அளவிலான முதலீட்டைப் பெற்றுள்ளது. எண்ணெய், சிறுவர்த்தகம், தொலைதொடர்புதுறைகளில் கோலோச்சும் ஜியோ நிறுவனம், அந்த நிறுவனத்தில் 21.99 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம், 1,02,432.15 கோடி ரூபாயை உலக நாடுகளின் நிறுவனங்கள் மூலம் முதலீடாக பெற்றுள்ளது.

சர்வதேச அளவிலான கொரோனா ஊரடங்குக்கு மத்தியிலும், இத்தனைப் பெரிய முதலீட்டைப் பெற்றது என்பது இந்தியாவின் மிகப்பெரும் டிஜிட்டல் திறனுக்கும், ஜியோவின் தொழில்நுடபத்திறனுக்கு, நீண்டகால வளர்ச்சித் திறனுக்கு, தொழில் யுக்திக்கும் கிடைத்த வெற்றி என்றுதான் புரிந்துகொள்ளவேண்டும். ஏப்ரல் 22-ம் தேதி 43,574 கோடி ரூபாய் முதலீடு செய்ததன் மூலம், ஃபேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 9.99 சதவீதப் பங்குகளை வாங்கியது. அதனைத் தொடர்ந்து, ஜென்ரல் அட்லாண்டிக், சில்வர் லேக், விஸ்டா நிறுவனம், கே.கே.ஆர், முபாடாலா முதலீட்டு நிறுவனம், அடியா ஆகிய நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்துள்ளனர்.டி.பி.ஜி நிறுவனத்தின் முதலீடு குறித்து தெரிவித்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, ‘டிஜிட்டல் சூழலை உருவாக்குவதன் மூலம், இந்தியர்களின் வாழ்வை டிஜிட்டல் வசதிகள் கிடைக்க வழிவகை செய்யும் தொடர் முயற்சியில் டி.பி.ஜி நிறுவனத்தை நான் வரவேற்கிறேன். உலக தொழில்நுட்ப தொழில்களில் டி.பி.ஜி நிறுவனம் முதலீடு செய்துள்ள தரவுகளைப் பார்த்து நாங்கள் மிகவும் வியப்படைந்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
 
First published: June 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading