Home /News /technology /

ரூ.1,000-க்கும் குறைவான கட்டணத்தில் அதிவேக பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு வேண்டுமா?

ரூ.1,000-க்கும் குறைவான கட்டணத்தில் அதிவேக பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு வேண்டுமா?

broadband internet connections

broadband internet connections

Fibre Broadband Internet Plans | இதேபோன்று ரூ.999-க்கு ஒரு திட்டத்தை ஜியோ வழங்குகிறது. மிகவும் பிரபலமாக உள்ள இந்தத் திட்டத்தில் உங்களுக்கு 150 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் கிடைக்கும். அத்துடன் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா உள்ளிட்ட சேவைகளை பெற்று கொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...
நாடெங்கிலும் ஃபைபர் பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்புகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஏர்டெல், ஜியோ ஃபைபர், ஆக்ட், எக்ஸிடெல் போன்ற நிறுவனங்கள் சார்பில், வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்படியான விலையில் அதிவேக இன்டர்நெட் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

இருப்பதிலேயே மிகக் குறைவான கட்டணத்தில் ரூ.399-க்கு ஜியோ ஃபைபர் சார்பில் இன்டர்நெட் பிளான் வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் சார்பில் ரூ.499க்கும், எக்ஸிடல் சார்பில் ரூ.699க்கும், ஆக்ட் சார்பில் ரூ.549-க்கும் இன்டர்நெட் பிளான்கள் வழங்கப்படுகின்றன. மிக அதிகமான டேட்டா மற்றும் இன்டர்நெட் வேகம், அதே சமயம், பட்ஜெட் கட்டணத்தில் கிடைக்கக் கூடிய பிளான்களையே வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவர்.

நீங்கள் குடியிருக்கும் பகுதியில் ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பு கிடைக்கவில்லை என்றால், சாதாரண பிராட்பேண்ட் கனெக்‌ஷனை பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் ரூ.299-க்கு நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் நெட் பிளான்ஸ்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த சேவை கிடைக்கிறது. அதில் ரூ.1000-க்கும் குறைவான கட்டணத்தில் சில திட்டங்களை இப்போது பார்க்கலாம். ரூ.399 செலுத்தினால், ஒரு மாதம் முழுவதும் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் உங்கள் இன்டர்நெட் கிடைக்கும். அதுவே நீங்கள் ரூ.699 செலுத்தினால் மாதம் முழுவதும் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். இந்த இரண்டு திட்டங்களில் இலவச வாய்ஸ் கால் சேவையை நீங்கள் அனுபவிக்கலாம்.



இதேபோன்று ரூ.999-க்கு ஒரு திட்டத்தை ஜியோ வழங்குகிறது. மிகவும் பிரபலமாக உள்ள இந்தத் திட்டத்தில் உங்களுக்கு 150 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் கிடைக்கும். அத்துடன் அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா உள்ளிட்ட சேவைகளை பெற்று கொள்ளலாம்.

Also Read : நல்ல கேமரா வசதியுடன் கூடிய ஃபோன்கள் - மார்ச் மாத அறிமுகங்களில் சிலவற்றை பார்க்கலாம்

ஏர்டெல் எக்ஸ்டீர்ம் ஃபைபர் பிளான்ஸ்

ரூ.499-க்கு 40 எம்பிபிஎஸ் வேகத்திலும் ரூ.799க்கு 100 எம்பிபிஎஸ் வேகத்திலும் அன்லிமிடெட் டேட்டா உங்களுக்கு கிடைக்கும். இத்துடன் லோக்கல் மற்றும் எஸ்டிடி இலவச கால்களை இந்தத் திட்டங்களில் பெற்றுக் கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல் விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாதெமி ஆகிய சேவைகள் சேர்ந்து கிடைக்கும். ரூ.999-க்கு 200 எம்பிபிஎஸ் வேகத்தில் அனிலிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் அமேசான் பிரைம் சப்ஸ்கிரிப்ஷன் ஆகிய பலன்கள் கிடைக்கும்.



எக்ஸிடெல் ஃபைபர் பிராட்பேண்ட் இன்டர்நெட் பிளான்ஸ்

இந்த நிறுவனத்தில் ரூ.699-க்கு 100 எம்பிபிஎஸ் வேகத்திலும், ரூ.799-க்கு 200 எம்பிபிஎஸ் வேகத்திலும், ரூ.899-க்கு 300 எம்பிபிஎஸ் வேகத்திலும் அன்லிமிடெட் டேட்டா சேவை உங்களுக்கு கிடைக்கும். அதேசமயம், நீங்கள் எந்த திட்டத்தை தேர்வு செய்தாலும் ரவுட்டர் பெறுவதற்கு ரூ.2,000 டெபாசிட் கட்டணம் செலுத்த வேண்டும். அதை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

Also Read : வெகு விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள iPhone 13.. விலை குறைய வாய்ப்பு உள்ளதா.?

ஆக்ட் ஃபைபர் இன்டர்நெட் பிளான்ஸ்

ரூ.549-க்கு அடிப்படையான திட்டத்தின் கீழ் 50 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கனெக்‌ஷன் வழங்கப்படுகிறது. அதுவே ரூ.799 செலுத்தினால் அன்லிமிடெட் டேட்டாவை 150 எம்பிபிஎஸ் வேகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
Published by:Selvi M
First published:

Tags: Airtel, Hi-speed internet, Jio Fiber

அடுத்த செய்தி