Home /News /technology /

30,000 ரூபாய்க்குள் சிறந்த ஸ்மார்ட்போன் வாங்கணுமா? இதோ இந்த 6-ல் இருந்து ஒன்றை தேர்வு செஞ்சுக்கங்க!

30,000 ரூபாய்க்குள் சிறந்த ஸ்மார்ட்போன் வாங்கணுமா? இதோ இந்த 6-ல் இருந்து ஒன்றை தேர்வு செஞ்சுக்கங்க!

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

Best Smartphones under Rs.30,000 | 'மேட் இன் இந்தியா' தயாரிப்பான மைக்ரோமேக்ஸ் நோட் 2 ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாகும்.

வகை வகையான ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொரு வாரமும் வெளிவந்து ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு சிறப்பு விருந்தை அளித்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் வைத்திருப்பார்கள். அந்த பட்ஜெட்டுக்குள் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்று விட வேண்டும் என்கிற எண்ணம் பெரும்பாலும் இருக்கும். சிறந்த கேமரா வசதி, அதிக ஸ்டோரேஜ், அதிரடியான புராசஸர் போன்ற முக்கிய அம்சங்களை பட்ஜெட்டுக்குள் எதிர்பார்ப்பார்கள். இந்த பதிவில் 30,000 ரூபாய்க்குள் நீங்கள் வாங்க கூடிய, சிறந்த அம்சங்கள் கொண்ட 6 ஸ்மார்ட்போன்கள் பற்றி பார்ப்போம்.

மைக்ரோமேக்ஸ் நோட் 2

மிட்-ரேன்ஜ் பட்ஜெட்டுக்குள் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமென்றால், 'மேட் இன் இந்தியா' தயாரிப்பான மைக்ரோமேக்ஸ் நோட் 2 ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாகும். இதில் ஆண்ட்ராய்டு OS அனுபவத்தை நீங்கள் பெறலாம். ஃபிளிப்கார்ட்டில் 64ஜிபி வகை ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை ரூ.13,499 ஆகும். இது இரண்டு நிறங்களில் வருகிறது. குவாட் ரியர் கேமராக்கள், ஃபிங்கர் ஃபிரிண்ட் சென்சார் அன்லாக், 5,000mAh பேட்டரி மற்றும் மீடியா டெக் G95 சிப்செட் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகம்.

ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி

உங்கள் பட்ஜெட்டுக்குள் சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமென்றால் ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாகும். இது ஒரு ஆல்-ரவுண்டர் பெர்ஃபார்மன்ஸ் வழங்க கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இதன் விலை ரூ.24,999 ஆகும். 6.43 இன்ச் 90ஹெர்ட்ஸ் AMOLED டிஸ்ப்ளே உடன் 5ஜி வசதி, மீடியா டெக் 900 SoC, 65W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் மூன்று பின்புற கேமராக்கள் ஆகிய அம்சங்கள் இதில் உள்ளன.

சாம்சங் கேலக்சி M52 5ஜி

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சாம்சங் கேலக்சி M52 5ஜி வெளியானது. இந்த ஃபோன் நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இதில் 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இதன் விலை ரூ.24,999 என்பது தற்போதைய நிலவரம். ஃபிங்கர் ஃபிரிண்ட் சென்சார், 6.7 இன்ச் 120 ஹெர்ட்ஸ் sAMOLED டிஸ்பிளே, 5,000mAh பேட்டரி மற்றும் மூன்று பின்புற கேமராக்கள் ஆகியவற்றை இதன் சிறப்பு அம்சமாக வழங்கி உள்ளனர். ஸ்னாப்டிராகன் 778G SoC சிப்செட் இதில் பொருத்தப்பட்டுள்ளது. கேம்கள் மற்றும் பல பயன்பாடுகளை ஒரே நேரத்தில் எளிதாக இயக்க இந்த ஸ்மார்ட்போன் மிகவும் உதவும்.

ஜியோமி 11i ஹைப்பர்சார்ஜ் 5ஜி

அதிவேக சார்ஜிங் வசதியுடன் உங்கள் பட்ஜெட்டில் ஸ்மார்ட் போன் வாங்க விரும்பினால் ஜியோமி 11i ஹைப்பர்சார்ஜ் 5ஜி சிறந்த தேர்வாக இருக்கும். 120W அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் தரப்பட்டுள்ளது. வெறும் 15 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இந்த போனில் 120Hz முழு HD+ AMOLED டிஸ்பிளே, 108-மெகா பிக்சல்- டிரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் மீடியா டெக் டைமென்சிட்டி 920 SoC ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்தியாவில் இதன் விலை ரூ.28,999 இல் இருந்து தொடங்குகிறது. இதன் பேக்கேஜில் 120W ஃபாஸ்ட் சார்ஜர் தரப்படுகிறது.

Also read... லாவாவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன் lava X2 இந்தியாவில் அறிமுகம்.! விலை மற்றும் விவரங்கள்

விவோ V23 5ஜி

இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு ஃபிரண்ட் கேமராக்கள் உள்ளன. இரவு நேரத்தில் சிறப்பாக போட்டோ அல்லது வீடியோ எடுப்பதற்கான மிகச்சிறந்த கேமிரா இதன் சிறப்பம்சமாகும். ஐபோன் 12 ஸ்மார்ட்போனைப் போன்ற அழகான, நேர்த்தியான வடிவமைப்பை இது கொண்டுள்ளது. வயர்டு இயர்பட்ஸ் மற்றும் 3.5 மிமீ முதல் USB-C டாங்கிள் ஆகியவை இந்த பேக்கேஜில் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இது வருகிறது. இதன் விலை ரூ.29,990 ஆகும்.

ஓப்போ ரெனோ 7 5ஜி

ஓப்போ பிராண்ட் புதிதாக அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன் தான் இந்த ஓப்போ ரெனோ 7 5ஜி. இது கண்ணைக் கவரும் வடிவமைப்புடன் வருகிறது. மேலும் இது டிமென்சிட்டி 9000 SoC ஆல் இயக்கப்படுகிறது. AMOLED டிஸ்ப்ளே, 5G வசதி, தரமான பின்புற கேமராக்கள் மற்றும் நீண்ட நேர பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்ஃபோனின் விலை ரூ.30,000 ஆகும். இதில் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமிராவும் உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Smart Phone

அடுத்த செய்தி