• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • விண்டோஸ் 11 வசதியுடன் ரூ.50000-க்குள் கிடைக்கும் டாப் 5 லேப்டாப்கள்!

விண்டோஸ் 11 வசதியுடன் ரூ.50000-க்குள் கிடைக்கும் டாப் 5 லேப்டாப்கள்!

ரியல்மி புக் ஸ்லிம்

ரியல்மி புக் ஸ்லிம்

15 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த ரெட்மி புக் 15 ப்ரோவின் விலை ரூ.44,999 ஆகும். சிறப்பான செயல்திறனுக்கு இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் கொண்ட 11th Gen இன்டெல் கோர் i5 புராசஸர், 8GB RAM, 512GB ஸ்டோரேஜ் மற்றும் முழு HD டிஸ்பிளே இதில் தரப்பட்டுள்ளது.

  • Share this:
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு வீட்டில் இருந்தே வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன. வீடுகளில் தனக்கேற்ற ஆபீஸ் செட் அப்பை சிறப்பானதாக உருவாக்க பல்வேறு விதமான நவீன தொழில்நுட்பம் பொருந்திய கேஜெட்களை வாங்கி வருகின்றனர். அந்த வகையில், லேப்டாப்களின் முக்கியத்துவம் இதில் அதிகமாகி உள்ளது. சிறந்த புராசஸர், அதிக ஸ்டோரேஜ், விண்டோஸ் 11 ஓஎஸ், வேகமான செயல்திறன் போன்ற அம்சங்கள் கொண்ட சூப்பர் லேப்டாப்களை உங்கள் பட்ஜெட்டில் வாங்க ஆன்லைனில் தேடுபவரா நீங்கள்? உங்களுக்கு ஏற்ற டாப் 5 லேப்டாப்கள் பற்றி இனி பார்க்கலாம்.,

ரியல்மி புக் ஸ்லிம் :

முழுவதுமாக மெட்டாலிக் வடிவமைப்பை கொண்ட இந்த ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப்பின் ஆரம்ப விலை ரூ.44,999 ஆகும். இந்த விலையில் 11th Gen இன்டெல் கோர் i3 புராசஸர், விண்டோஸ் 11, 8GB RAM, 256GB SSD ஸ்டோரேஜ், 2K ரிசொலியூசன் கொண்ட டிஸ்பிளே, 11 மணி நேரம் வரை தாங்கும் பேட்டரி போன்ற சிறந்த வசதிகள் தரப்படுள்ளன. எடை குறைவாகவும், எளிதாக பயன்படுத்தவும் நினைப்போர் இந்த ரியல்மி புக் ஸ்லிம் லேப்டாப்பை தேர்வு செய்யலாம்.

ரெட்மி புக் 15 ப்ரோ :

15 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த ரெட்மி புக் 15 ப்ரோவின் விலை ரூ.44,999 ஆகும். சிறப்பான செயல்திறனுக்கு இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் கொண்ட 11th Gen இன்டெல் கோர் i5 புராசஸர், 8GB RAM, 512GB ஸ்டோரேஜ் மற்றும் முழு HD டிஸ்பிளே இதில் தரப்பட்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப்பில் விண்டோஸ் 11 ஓஎஸ் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. கல்லூரி படிக்கும் மாணவர்கள், அலுவலக தேவைகளுக்கு இந்த ரெட்மி புக் 15 ப்ரோ சிறப்பான பயன்பாட்டை தரும்.

டெல் இன்ஸ்பைரான் 14 3000 :

தரமான செயல்திறனை கொண்ட லேப்டாப்பை வாங்க விரும்புவோருக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த டெல் இன்ஸ்பைரன் 14 3000 மாடல் லேப்டாப். 11th Gen இன்டெல் கோர் i3 புராசஸர், 8GB 3200MHz RAM, 512GB M.2 SSD ஸ்டோரேஜ், UHD கிராபிக்ஸ் மற்றும் 14 இன்ச் FHD ஆன்ட்டி கிளார் டிஸ்பிளே போன்ற சிறப்பம்சங்களுடன் இந்த லேப்டாப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் MS Office 2019 இன்ஸ்டால் செய்து வருகிறது. இதன் விலை ரூ.48,990 ஆகும்.

Also read... 2 மில்லியன் இந்தியர்களின் அக்கவுண்ட்டை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம் - காரணம் என்ன?

லெனோவா திங்க்பேட் E14 :

ஐ.டி துறையில் வேலை செய்வோருக்கு ஏற்ற லேப்டாப் என்றே இதை சொல்லலாம். சிறப்பான செயல்திறனுக்கு 11th Gen கோர் i3 புராசஸர், விண்டோஸ் 11 ஓஎஸ், 8GB 3200MHz RAM, 256GB M.2 SSD ஸ்டோரேஜ், 1080p 14 இன்ச் டிஸ்பிளே, 8 மணி நேர பேட்டரி பேக் அப் போன்ற வசதிகளுடன் இந்த லேப்டாப் விற்கப்படுகிறது. இந்த லெனோவா திங்க்பேட் E14 லேப்டாப்பின் விலை ரூ.49,990 ஆகும்.

அசஸ் விவோபுக் 15 OLED K513 :

நீங்கள் படங்கள் அதிகம் பார்ப்பவர் என்றால் இந்த அசஸ் விவோபுக் 15 OLED K513 சிறந்த தேர்வாகும். இதன் விலை ரூ.46,990ல் இருந்து தொடங்குகிறது. 15.6 இன்ச் OLED டிஸ்பிளே, இன்டெல் UHD கிராபிக்ஸ் சஉடன் 11th Gen கோர் i3 புராசஸர், 8GB RAM, 256GB M.2 SSD ஸ்டோரேஜ் இதில் தரப்பட்டுள்ளது. மேலும் விண்டோஸ் 11 ஓஎஸ் விரைவில் அப்டேட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் உங்களுக்கு ஏற்ற லேப்டாப்பை, இந்த பண்டிகை காலங்களில் அதிக தள்ளுபடியில் வாங்குங்கள்!.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: