மைக்ரோசாப்ட் நிறுவனம் அக்டோபர் 2021 முதல் விண்டோஸ் 11-யை அறிமுகப்படுத்தியது. குறிப்பாக விண்டோஸ் 10 யூஸர்கள் விண்டோஸ் 11-ஐ எவ்வித கட்டணமும் இன்றி அப்டேட் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது.
இது முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட யூஸர் இன்டர்ஃபேஸ் , புதிய உற்பத்தித்திறன் கருவிகள் மற்றும் அனைத்து யூஸர்களுக்கும் தடையற்ற அனுபவத்தை உருவாக்கும் சிறந்த அம்சங்களை உறுதியளித்தது. ஆனால் இந்த வசதிகள் அனைத்தும் புதிய சாதனங்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. 2022ம் ஆண்டின் இடைப்பட்ட பகுதியில் அனைத்து சாதனங்களுக்குமான அப்டேட் வெளியாகும் என மைக்ரோசாப் நிறுவனம் அறிவித்திருந்தது. இதனால் பலரும் இதுவரை விண்டோஸ் 11 அப்டேட்டை பெறவில்லை.
இதனிடையே, நீங்கள் உண்மையில் பயன்படுத்த வேண்டிய Windows 11-ல் உள்ள டாப் 5 அம்சங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். அவை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்...
1. விண்டோஸில் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள்:
விண்டோஸ் யூஸர்கள் நீண்ட காலமாக கேட்டுக்கொண்டிருந்த அம்சங்களில் இதுவும் ஒன்று. விண்டோஸ் 10-யில் இந்த அம்சம் கிடைக்கும் என எதிர்பார்த்த பல யூஸர்களுக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏமாற்றத்தை பரிசாக அளித்தது. ஆனால் விண்டோஸ் 11 விவகாரத்தில் தனது யூஸர்களை ஏமாற்ற விரும்பாத மைக்ரோசாப்ட் நிறுவனம், உங்கள் கம்யூட்டரில் நேரடியாக ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து பயன்படுத்தி கொள்ளும் வசதியை கொடுத்துள்ளது.
இந்த அம்சத்தைப் பயன்படுத்த, நீங்கள் மைக்ரோசாப்ட் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப் ஸ்டோரை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் விண்டோஸ் 11-ல் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை பயன்படுத்தலாம்.
2. விட்ஜெட் மேனியா:
விண்டோஸ் 10-ல் உள்ள 'news and interest' அம்சத்தைப் போலவே, விட்ஜெட்டுகள் தனிப்பயனாக்கக்கூடிய சிறிய ஆப்கள் மற்றும் செய்திகள், வானிலை, காலண்டர், டுடூ லிஸ்ட் போன்ற பல உடனடி தகவல்களைக் கொண்ட பயன்பாடுகள் இடம் பெற்றும். Windows 11 விட்ஜெட்களுக்கு அவற்றிற்கு என தனி இடம் வழங்கியுள்ளது. அந்த சிங்கிள் பேனல் மூலமாக நீங்கள் அனைத்து விட்ஜெட்களையும் ஒன்றாக சரிபார்த்துக் கொள்ள முடியும்.
3. ஒருங்கிணைந்த குழுக்கள்:
டாப் 5 விண்டோஸ் 11 அம்சங்களில் மூன்றாவது இடம் பிடிப்பது மைக்ரோசாப்டின் வீடியோ அரட்டை இயங்குதள குழுக்களுக்கான (Video Chat Platform team) ஒருங்கிணைப்பாகும். டாஸ்க் பாரில் உள்ள மெனு அல்லது டெக்ஸ்ட், வாய்ஸ் அல்லது வீடியோ அழைப்பு மூலமாக விரைவான அணுகலை பெற முடியும்.
Also read... Google Pay-ல் ஏற்படும் பேமெண்ட் சிக்கல்களை சரி செய்வது எப்படி?
4. விர்ச்சுவல் டெஸ்க்டாப் விண்டோஸ் 11:
விர்ச்சுவல் டெஸ்க்டாப் மூலமாக நீங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட விஷயத்திற்காக தனித்தனி டெஸ்க்டாப்புகளை பயன்படுத்த விண்டோஸ் 11 அனுமதிக்கிறது. ஒவ்வொரு டெக்ஸ்டாப்புகளையும் வால்பேப்பர்கள், பயன்பாடுகள் மற்றும் விட்ஜெட்டுகளைப் பயன்படுத்தி யூஸர்கள் தங்களது தனிப்பயனாக்கப்பட்ட மெய்நிகர் டெக்ஸ்டாப்புகளை (Virtual desktops) உருவாக்கிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
5. . ஸ்னாப் லேஅவுட்:
விண்டோஸ் 11 டாப் 5 அம்சங்களில் கடைசியாக இடம் பெற்றுள்ளது ஸ்னாப் லேஅவுட் ஆகும். வேலை செய்யும் போது, ஒரே நேரத்தில் பல windows-களை திறப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. Windows 11 அதற்கான தீர்வைக் கொண்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் பல windows-களை திறக்கும் போது, அதனை ஒரு குழுவாக சேமிக்கும். இதன் மூலம் பயன்பாடுகளுக்கு இடையில் வேலை செய்ய பல windows-களை கையாளும் போது தேவையில்லாத சிக்கல் ஏற்பாடது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Technology