• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • நம் வாழ்வை மாற்றவரும் 5 டாப் தொழில்நுட்பங்கள்..!

நம் வாழ்வை மாற்றவரும் 5 டாப் தொழில்நுட்பங்கள்..!

(Image: AFP Relaxnews)

(Image: AFP Relaxnews)

ஒரு கணினி 10 ஆயிரம் ஆண்டுகளில் செய்யும் ஒரு வேலையை க்வான்டம் கம்ப்யூட்டிங் மூலம் ஒரு சின்ன சிப் வெறும் 200 விநாடிகளில் செய்து முடித்துவிடும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கால ஓட்டத்தில் தொழில்நுட்பங்களின் அதிரடி வரவுகள் நம் அன்றாட வாழ்வை மாற்றி அமைத்து வருகின்றன.

    ஒருபுறம் எம்பி3, ஸ்கேனர், சிடி, தொலைநகல் (fax) எனப் பல மாயமாகி வருகின்றன. மற்றொருபுறம் செயற்கை நுண்ணறிவு, எம் எல், IoT, ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ், 5ஜி என தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் அபரிமிதமாக உள்ளது.

    அடுத்த பத்தாண்டுகளில் நம் வாழ்வையே மாற்றி அமைக்க வரும் டாப் 5 தொழில்நுட்பங்களை இங்கு காணலாம்.

    1. க்வான்டம் கம்ப்யூட்டிங் (Quantum computing):

    ஒரு கணினி 10 ஆயிரம் ஆண்டுகளில் செய்யும் ஒரு வேலையை க்வான்டம் கம்ப்யூட்டிங் மூலம் ஒரு சின்ன சிப் வெறும் 200 விநாடிகளில் செய்து முடித்துவிடும். இந்தத் தொழில்நுட்பம் மருத்துவம், ஆற்றல், சுற்றுச்சூழல், ஸ்மார்ட் பொருட்கள் ஆகிய பிரிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    2. தானியங்கி எலெக்ட்ரிக் கார்கள் (Automatic Electric Car):

    உலக அளவில் கனெக்டட் கார்களுக்கான வரவேற்பு ஆண்டுக்கு 27.5 சதவிகித வளர்ச்சியில் உள்ளது. இத்துறையில் முன்னோடியாக டெஸ்லா நிறுவனம் அமைத்துக்கொடுத்த பாதை அடுத்த பத்தாண்டுகளின் ஆட்டோமொபைல் துறையையே மாற்றுப் பாதையில் அழைத்துச் செல்லும்.

    3. 5ஜி கனெக்டட் வீடுகள் (5G Connected Home):

    வருகிற 2025-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 75 பில்லியன் IoT சாதனங்கள் நிரம்ப உள்ளன. இந்தத் தொழில்நுட்பம் நமது அன்றாட வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும். விநாடிகளில் ஹெச்டி தரத்தில் ஒரு முழு படத்தையே உங்களால் டவுன்லோடு செய்யமுடியும். இன்றைய இணைய வேகத்தைவிட 100 மடங்கு அதிக வேகம் கிடைக்கும். உங்கள் இல்லத்தில் உள்ள அத்தனை சாதனங்களையும் உங்களது விரல் நுனியில் இயக்கலாம்.

    4. குரல் (Voice Technology):

    தற்போதே வாய்ஸ் தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அத்தனை சாதனங்களையும் உங்கள் குரலால் கட்டுப்படுத்தலாம். அல்கெசா, கூகுள் ஹோம், சிரி என அத்தனைக்கும் வாய்ஸ் தொழில்நுட்பம்தான் அடிப்படை.

    5. இன்டெர்நெட் டிவி (Internet TV)

    OTT தளங்கள் (நெட்ஃப்ளிக்ஸ் போன்றன) ஒன்றில் இந்தியர் ஒருவர் சராசரியாக நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் செலவிடுகிறாராம். இனி ஸ்மார்ட்போனிலேயே அத்தனையையும் பார்க்கலாம். 2022-ல் இன்டெர்நெட் ட்ராபிக் 77 சதவிகிதம் அதிகரிக்குமாம். ஸ்மார்ட் டிவி, கனெக்டட் டிவி, செட் டாப் பாக்ஸ் எல்லாம் வழக்கொழிந்து இன்டெர்நெட் டிவி நம்மை ஆளும்.

    மேலும் பார்க்க: 2020-ல் கலக்க வரும் டாப் கார்கள்... ஒரு பார்வை!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: