• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • 11th Gen Intel Core: 11வது ஜெனரேஷன் இன்டெல்கோர் லேப்டாப் ஏன் அவசியம்? 5 காரணங்கள்!

11th Gen Intel Core: 11வது ஜெனரேஷன் இன்டெல்கோர் லேப்டாப் ஏன் அவசியம்? 5 காரணங்கள்!

11வது ஜெனரேஷன் இன்டெல்கோர் லேப்டாப்

11வது ஜெனரேஷன் இன்டெல்கோர் லேப்டாப்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இன்டெல் கோர் லேப்டாப்பை பொறுத்த வரை மங்கலான புகைப்படங்களை, தெளிவாக மாற்றுவதற்கும், புகைப்படங்களில் இருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்குவதில் இருந்து குழு அழைப்புகளின்போது எழும் இரைச்சல்களை உடனடியாக குறைப்பது வரை, வேகமாக செயலாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
நம்மைச் சுற்றிய உலகம் வேகமாக வளரும்போது அதற்கேற்ப நாமும் அப்டேட்டாக மாறிக்கொள்வது அவசியம். பணிகளை வேகமாகவும், ஸ்மார்ட்டாகவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்வது எப்படி? என கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் மீது இருக்கும் எதிர்பார்ப்புக்கு இணையாக வேகமாக பணியாற்ற விரும்பினால், உங்களிடம் உயர்ந்த செயல்திறன் மிக்க லேப்டாப்கள் இருக்க வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 11வது ஜெனரேஷன் இன்டெல்கோர் லேப்டாப்கள், உங்களுக்கான வேகத்தையும், ஒத்துழைப்பையும் கொடுப்பதாக கூறப்படுகிறது. அவற்றின் சிறபம்சங்கள் என்ன? என்பதை இங்கு பார்க்கலாம்.

1. செயல்திறன்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இன்டெல் கோர் லேப்டாப்பை பொறுத்த வரை மங்கலான புகைப்படங்களை, தெளிவாக மாற்றுவதற்கும், புகைப்படங்களில் இருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்குவதில் இருந்து குழு அழைப்புகளின்போது எழும் இரைச்சல்களை உடனடியாக குறைப்பது வரை, வேகமாக செயலாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 11வது இன்டெல்கோர் அடிப்படையில் இயக்கும் லேப்டாப்களின் AI -களின் ஸ்மார்ட் செயல்திறன் இதனை சாத்தியப்படுத்துகின்றன. மைக்ரோசாப்ட் ஆபீஸ், கூகுள் குரோம், ஜூம் செயலிகள் ஆகியவற்றை வேகமாக பயன்படுத்துவதற்கும், உடனடியாக ரிப்ளே கொடுப்பதற்கும் ஏற்ப பாஸ்டாக 11வது தலைமுறை இன்டெல்கோர் லேப்டாப்களின் செயல்பாடு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2. கிராபிக்ஸ் & லைட் செட்டப்ஸ்

11வது ஜெனரேஷன் இன்டெல்கோருடன் இன்டகிரேட்டேட் ஜி.பி.யூ பவுர்புல்லாக இணைக்கப்பட்டிருக்கிறது. அவற்றுடன் இன்டெல் ஐரிஸஃ எக்ஸ் கிராபிக்ஸூம் சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் வீடியோ கேம் மற்றும் ஸ்டீரிம் பாப்புலர் டைட்டில்ஸ் 1080 பிமற்றும் 60 எப்.பி.எஸ் படைப்பு பணிப்பாய்வுகளில் நேரத்தை மிச்சப்படுத்தலாம். மேலும், 4K HDR தரத்தில் ஒரே நேரத்தில் நான்கு டிஸ்பிளேக்களை ரன் செய்ய முடியும்

3. ஸ்டீரிம் கனெக்டிவிட்டி

இணையதளங்கங்களை பயன்படுத்தும்போது மிகவும் வேகமான கனெக்டிவிட்டி வேண்டும் என நினைப்பவர்கள் 11வது ஜெனரேஷன் இன்டெல்கோர் அடிப்படையில் இயக்குஃ லேப்டாப்பை தாரளமாக தேர்ந்தெடுக்கலாம். இந்த லேப்டாப்களில் இருக்கும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் மின்னல் வேக ஜிகாபைட் வைஃபை வேகத்தையும், போதுமான சிங்கிள் இணைப்பு கேபிள் கனெக்ஷனையும் கொடுக்கின்றன. மின்னல் வேகத்தில் தகவல்கள் மற்றும் டேட்டாக்களை பகிர்ந்து கொள்ள முடியும். வைஃபை வசதியை பயன்படுத்தி சிறந்த வீடியோ கான்பரன்சிங் அனுபவத்தையும், ரியல் டைம் கேம்ஸ், லேட்டஸ்ட் திரைப்படங்களை ஸ்டீரிமிங் செய்யலாம்.

Also read... ஆக்ஸிஜன் மானிட்டர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் ஜியோமி வாட்ச் - விலை எவ்வளவு தெரியுமா?

4. அல்ட்ராபோர்ட்டபிள் கேமிங்

சாதாரண லேப்டாப்களில் நேர்த்தியான மற்றும் உயர்தர கிராபிக்ஸ் வசதி கொண்ட கேமிங்கை ரியலாக விளையாடக்கூடிய அனுபவம் கிடைக்கும் என்று என்றாவது நினைத்திருக்கிறீர்களா?. 11வது ஜெனரேஷன் இன்டல்கோர் கொண்ட லேப்டாப்களில் இருக்கும் கிராப்க்ஸ் உள்ளிட்டவை நீங்கள் இதுவரை கற்பனை செய்து பார்க்காததைக் கூட நிஜமாக்கியிருக்கின்றனர். பில்லியன் கணக்கான வண்ணங்கள் கொண்ட காட்சிகள் கொண்ட கேமிங்கை அதன் ரியாலிட்டி மாறாமல் விளையாட முடியும். உயர்தர ஹெச்.டியில் விளையாடும்போது, அனுபவம் புதியதாக இருக்கும்.

5. நீண்ட நேர சார்ஜிங்

லேப்டாப்களில் இருக்கும் ஒரு பிரச்சனை குறைவான நேரத்தில் சார்ஜிங் விரைவாக காலியாகிவிடும். இதனால், எப்போது லேப்டாப் பயன்படுத்தும்போது குறிப்பிட்ட நேரத்துக்கு இடைவெளியில் சார்ஜிங் கனெக்டிங் செய்ய வேண்டும். ஆனால், 11வது ஜெனரேஷன் இன்டல்கோர் லேப்டாப்களில் குறைவான நேரத்தில் விரைவாக சார்ஜ் செய்ய முடியும். மேலும், சார்ஜ் செய்த லேப்டாப்களை நீண்ட நேரத்துக்கு பயன்படுத்தலாம். குறைவான சார்ஜ் இருக்கும்போது பிரைட் ஸ்கிரீன் இருக்கும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: