ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

குளிர்காலத்தை சமாளிக்க பயன்படும் டாப் 5 கேட்ஜெட்ஸ்!

குளிர்காலத்தை சமாளிக்க பயன்படும் டாப் 5 கேட்ஜெட்ஸ்!

டாப் 5 கேட்ஜெட்ஸ்

டாப் 5 கேட்ஜெட்ஸ்

குளிர்காலத்தில் உங்களை கதகதப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள மின் சாதனங்கள் பெரும் பங்குவகின்றன. அதில் சிறந்த 5 முக்கிய சாதனங்கள் பற்றி இதில் காணலாம்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குளிர்காலத்தில் படுக்கையில் இருந்து எழுந்திருப்பது என்பது அனைவருக்கும் ஒரு சோம்பலான விஷயம். அதுவும் கடுமையான குளிர்காலங்களில் எழுந்து வீட்டினுள் எழுந்து நடமாடுவதும், சமயலறையில் உணவு தயாரிப்பதும் கூட சவாலான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் குளிர்காலம் மட்டும் அல்லாமல் மற்ற சாதாரண காலங்களிலும் நமக்கு பெரும் உதவிகரமாக இருக்கும் கேட்ஜெட் சாதனங்களை பற்றியும் அதன் பயன்கள் மற்றும் விலை நிலவரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பஜாஜ் மெஜஸ்டி RX11 ஹீட் கன்வெக்டர் ரூம் ஹீட்டர்:

குளிர்காலம் ஆரம்பித்தவுடன் நமக்கு ஒரு ஹீட்டர் இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும். அறையின் வெப்பநிலையை சாதாரணமாக வைத்திருக்க, மக்கள் ரூம் ஹீட்டர்களை (Room heater) இப்போது அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். நீங்களே சிறந்த தரமான ரூம் ஹீட்டரைப் பெற விரும்பினால், இந்த பஜார் ரூம் ஹீட்டரை பயன்படுத்திப்பாருங்கள். பஜாஜ் மெஜஸ்டி RX11 ஹீட் கன்வெக்டர் ரூம் ஹீட்டர் என்பது நமது அறையில் வெப்பத்தை பாதுகாக்க கூடிய ஆட்டோமேட்டிக் கட்-ஆஃப் அம்சத்தின் வடிவத்தில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட சாதனமாகும்.

இச்சாதனம், குளிர்காலத்தில் உங்களை சூடாக வைத்திருக்க உதவுகிறது. இந்த சாதனம் (டூ இன் ஒன்) செயல்பாடுகள் கொண்டிருப்பதால், குளிர்காலத்தில் ஹீட்டராகவும், கோடையில் மின் விசிறி போன்ற காற்றின் அனுபவத்தை பெறலாம். இந்த மாடலில் வெப்பத்தை கூட்டவும் குறைக்கவும் வகையிலும் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, இது தெர்மோஸ்டாட், ஆட்டோ தெர்மல் கட்அவுட் மற்றும் பாதுகாப்பு சுவிட்ச் உடன் டிரிபிள் பாதுகாப்பு உத்தரவாதத்தைக் கொண்டுள்ளது. ரூபாய் 2 ஆயிரத்து 50 ரூபாய்க்கு விற்பனையாகும் ஹீட்டர் குரோமா அமேசான் மற்றும் விஜய் விற்பனை தளங்களில் கிடைக்கிறது.

எலக்ட்ரிக் கெட்டில் (பிரெஸ்டீஜ் பிகேஎஸ்எஸ் 1.0):

குளிர்காலங்களில் வெண்ணீர், காபி/டீ, சூடான சாக்லேட் சுவையான சூப் வகைகளை உடனடியாக சூடாக தயாரிக்க இந்த Prestige PKSS 1.0 1350-Watt Electric Kettle உதவும். இது ரூ.1560-க்கு விற்பனையாகிறது. இதன் உறுதியான மற்றும் நீடித்த கைப்பிடிகள் மிகவும் எளிதாக கையாள உதவும். கெட்டிலை எடுத்துச் செல்லும்போதும் தூக்கும்போதும் வசதியாக இருக்கும். ஆட்டோமெட்டிக் கட்-ஆஃப், சிங்கிள்-டச் மூடி போன்ற தனித்துவமான வடிவமைப்புகளுடன் இந்த கெட்டில் அமைந்துள்ளது.  அதன் ஸ்விவல் பவர் பேஸ், விரும்பிய குடம் கைப்பிடி நிலையுடன் எந்த திசையிலும் அதைச் செருக அனுமதிக்கிறது.

ராகோல்ட் ஆண்ட்ரிஸ்(Racold Andris) ஸ்லிம் கீசர்:

உங்கள் வீட்டில் சூடான நீரின் தேவை அதிகமாக இருந்தால், அதிக சேமிப்பு திறன் கொண்ட கீசர்களில் இதுவும் ஒன்று இது தற்போது மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது என்பதால் இன்றே நீங்கள் உங்களுக்கு ஏற்ற ஒன்றை ஆர்டர் செய்து வாங்கலாம். ரூ. 9,755-க்கு விற்பனையாகும் Racold Andris ஸ்லிம் சேமிப்பு நீர் ஹீட்டர் அதன் காம்பாக்ட் வடிவமைப்பு வீட்டில் உள்ள இடத்தை சேமிக்கும் விதமாக அமைந்துள்ளது. அழகான இத்தாலிய வடிவமைப்பில் கிடைக்கும், இந்த கீசர் 25% வேகமான வெப்பத்தை உறுதிசெய்ய உயர்-பவர் ஹீட்டிங் உறுப்புடன் வருகிறது. இந்த கீசர் மற்ற கீசர்களை விட 10% அதிக சூடான நீரை உற்பத்தி செய்கிறது. டைட்டானியம் பிளஸ் தொழில்நுட்பத்தால் ஆன இந்த கீசரில் டைட்டானியம் எனாமல் பூச்சு மற்றும் வெப்பமூட்டும் பகுதிகளுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட டைட்டானியம் ஸ்டீல் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. 20-லிட்டர் டேங்க் சேமிப்பு தன்மையுடன் வரும் சிறிய கீசர், சிறிய வீடுகளுக்கு ஏற்றதாகும்.

பிலிப்ஸ் ஏர் பிரையர் (Philips air fryer): 

உடல் எடையை குறைக்க விரும்பாதவர்கள், எடையை பராமரிக்கும் நபர்கள் பொறித்த உணவுகளை தவிர்ப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளை சமைத்து சாப்பிட ஏர் பிரையர் எனப்படும் கிட்சன் சாதனம் பயன்படுகிறது. இது மைக்ரோவேவ் ஓவன்களைப் போல் செயல்படக்கூடியது. அதாவது மைக்ரோவேவ்களை கொண்டு அவன்களில் உணவு சமைக்கப்படுவதைப் போல, ஏர் பிரையரில் சூடான காற்றைக் கொண்டு உணவு சமைக்கப்படுகிறது.

டீப் ப்ரை உணவுகளை சமைக்க அதிக அளவிலான எண்ணெய்யை மிகவும் அதிகமான கொதிநிலையில் சூடாக்க வேண்டியிருக்கும். அது வீட்டின் சமையலறையில் ஆபத்தானது, ஏனெனில் சூடான எண்ணெய் கீழே சிந்தலாம், தெறிக்கலாம் அல்லது அதிக வெப்பம் காரணமாக தீப்பிடிக்கலாம்.ஆனால் ஏர் பிரையர்களில் இதுபோல் எந்த விதமான பிரச்சனைகளும் கிடையாது. ஏர் பிரையர் வாங்கும் பெரும்பாலான மக்களுக்கு ஆரோக்கியமான சமையலுக்கு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. சமையல் செயல்பாட்டில் மிகக் குறைந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால், ஆரோக்கியமற்ற வறுத்த உணவுகளை ஆரோக்கியமானதாக மாற்ற உதவுகிறது. டீப் ப்ரை செய்யப்பட்ட உணவுகளில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளன. எனவே அத்தகைய உணவுகளை ஏர் பிரையரில் சமைக்கும்போது அவற்றை மாற்றுவது கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது.

Also Read : கூகுள் கிளவுடில் உள்ள பிழையை சுட்டிக்காட்டி 18 லட்சம் பரிசு வென்ற 2 இந்திய ஹேக்கர்கள்!

இதன் மூலம் பிரெஞ்ச் பிரைஸ் முதல் ப்ரைடு சிக்கன் வரை பல வகையான உணவு வகைகளையும் சமைக்கலாம். ஏர் பிரையர்கள் இந்த நாட்களில் மிகவும் பிரபலமாக உள்ளன. அதன் உயர்ந்த பொறியியல் மற்றும் செயல்திறன் காரணமாக சந்தேகத்திற்கு இடமின்றி சமையலை மிகவும் எளிமையான மற்றும் குறைந்த எண்ணெய் கொண்டதாக தயார் செய்கிறது இந்த பிலிப்ஸ் ஏர் பிரையர்.

ஏர் பிரையர் ரேபிட் ஏர் டெக்னாலஜி ஒரு தனித்துவமான நட்சத்திர மீன் வடிவமைப்பைக் கொண்டு சூடான காற்றைச் சுழற்றி, எண்ணெய் சேர்க்காமல் சுவையான உணவுகளை உருவாக்குகிறது. இதில் இரண்டு முக்கிய கைப்பிடிகள், டைமர்கள் மற்றும் வெப்பநிலை கட்டுப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ. 7 ஆயிரத்து 314-க்கு விற்பனை செய்யப்படும் இந்த பிலிப்ஸ் ஏர் பிரையர் அமேசான், விஜய் சேல்ஸ் மற்றும் குரோமா தளங்களில் கிடைக்கிறது.

டைசன் காற்று சுத்திகரிப்பான் (Dyson HP07 Hot Cool Air Purifier):

காற்று சுத்திகரிப்பு என்பது உங்கள் வீட்டில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வீட்டு உபயோகப் பொருளாகும். நீங்கள் ஒவ்வாமை, ஆஸ்துமா அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது சுவாசத்தை எளிதாக்குகிறது. அமேசான், விஜய் சேல்ஸ் மற்றும் குரோமாவில் கிடைக்கும் இந்த ஏர் பியூரீபையரின் விலை ரூ. 56,900 ஆகும். Dyson's HP07 Hot Cool Air Purifier ஆனது மேம்பட்ட HEPA H13 காற்றை தூய்மைபடுத்தி அனுப்பும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த காற்று சுத்திகரிப்பான் முழு அறையையும் சுத்திகரிக்க சக்தி வாய்ந்த காற்று பெருக்கி தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

First published:

Tags: Gadgets, Winter, Winter Health Tips