10,000 ரூபாய்க்குள் அடங்கும் டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன்கள்

news18
Updated: September 4, 2018, 7:56 PM IST
10,000 ரூபாய்க்குள் அடங்கும் டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன்கள்
ரியல்மி2.
news18
Updated: September 4, 2018, 7:56 PM IST
வளர்ந்துவரும் இந்திய மொபைல்ஃபோன் சந்தையில் ஹானர், ரியல்மி, ஸியோமி ஆகிய நிறுவனங்கள், பட்ஜெட் ஸ்மார்ஃபோன்களை அறிமுகப்படுத்தியவண்ணம் உள்ளன. 10000 ரூபாய்க்குள் உள்ள பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன்களை உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறது நியூஸ் 18.

ஹானர் 7எஸ்:

ஹவாயின் கிளை நிறுவனமான ஹானர் தன்னுடைய லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான ஹானர் 7எஸ் ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடைய விலை ரூ. 6,999/-சிறப்பம்சங்கள்:
5.45 இன்ச் ஹெச்டி(720x1440 பிக்ஸல்) டிஎஃப்டி ஃபுல் வியூவ் டிஸ்பிளே கொண்ட ஹானர் 7எஸ், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டது. இது ‘குவாட்கோர் மீடியாடெக் எம்டி6739’ இயங்குதளத்தில் செயல்படுகிறது. இது 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்னர் ஸ்டோரேஜ் கொண்டது. மேலும் 256ஜிபி வரை எக்ஸ்பேண்டேபிள் மெமரி வசதியும் உள்ளது.

டூயல் சிம் வசதிகொண்ட ஹானர் 7-ன் கேமராவை பொறுத்தவரை, பின்பக்கம் ஆட்டோ ஃபோக்கஸ் 13 மெகாபிக்ஸலும், முன்பக்கம் 5 மெகாபிக்ஸலும் கொண்டது. ஹானர் 7 எஸ்-ல் ஃபேஸ் அன்லாக் வசதியும் உள்ளது.
Loading...
ரியல்மி 2:
ரியல்மி 2-ன் விலை ரூ.8,990/- ஸ்டைலிஷான லுக் மற்றும் ட்ரெண்டி வசதிகள் இதன் முக்கிய அம்சங்கள்.


சிறப்பம்சங்கள்:
6.2 இன்ச் ஹெச்டி(720x1520 பிக்ஸல்) டிஸ்பிளே கொண்ட ரியல்மி2, 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டது. இது ‘குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ் ஓ சி’ இயங்குதளத்தில் செயல்படுகிறது. இதனுடைய ரேம் 3ஜிபி/4ஜிபி மற்றும் 32ஜிபி/64ஜிபி இன்னர் ஸ்டோரேஜ் வசதி கொண்டது. மேலும் 256ஜிபி வரை எக்ஸ்பேண்டேபிள் மெமரி வசதியும் இதில் உள்ளது.

கேமராவை பொறுத்தவரை பின்பக்கம் 3 மெகாபிக்ஸலில் இரட்டை கேமராக்கள் உள்ளன, முன்பக்கம் 8 மெகாபிக்ஸல் உள்ள கேமரா வசதியும் உள்ளது. ரியல்மி 2-ல் அல் பியூட்டிஃபிக்கேஷன் 2.0, ஃபரண்ட் ஹெச்டிஆர் கேமரா மற்றும் பொக்கே மோட் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

ஸியோமி ரெட்மி ஒய்2:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி ஒய் 2-ன் விலை ரூ.9,999/-. இந்த போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூபாய் 12,999/-


சிறப்பம்சங்கள்:
5.99 இன்ச் ஹெச்டி(720x1520 பிக்ஸல்) டிஸ்பிளே கொண்ட ரெட்மி ஒய்2, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டது. இது ஸ்னாப்டிராகன் 625 இயங்குதளத்தில் செயல்படுகிறது.

இந்த பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன் 12 மெகாபிக்ஸல் மற்றும் 5 மெகாபிக்ஸல் இரட்டை பின்பக்க கேமரா கோண்டது. முன்பக்கம் 16 மெகாபிக்ஸலுடன் கூடிய அல் போர்டிரெய்ட் மோட் மற்றும் அல் ஸ்மார்ட் பியூட்டி மோட் வசதிகளும் இந்த ஸ்மார்ட்ஃபோனில் உள்ளன.

ஹானர் 7சி:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹானர்7சி-ன் விலை ரூ.9,999/-. இந்த போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூபாய் 11,999/-.

சிறப்பம்சங்கள்:

5.99 இன்ச் ஹெச்டி(1440x720 பிக்ஸல்) டிஸ்பிளே கொண்ட ஹானர் 7சி, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ் ஓ சி இயங்குதளத்தில் செயல்படுகிறது. கேமராவை பொறுத்தவரை பின்பக்கம் 13 மெகா பிக்ஸலும், முன்பக்கம் 8 மெகாபிக்ஸலும் கொண்டது.

ரியல்மி 1:
ரியல்மி 1 ஸ்மார்ட்ஃபோன் டைமண்ட் ஃபினிஷிங் கொண்ட ஃபைபர் பாடியால் வடிமைக்கப்பட்டுள்ளது.


சிறப்பம்சங்கள்:
6 இன்ச் ஃபுல் ஹெச்டி(2160x1080 பிக்ஸல்) டிஸ்பிளே கொண்ட ஹானர் 7சி, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டது. இது மீடியாடெக் எம்டி6771 எஸ்ஓசி இயங்குதளத்தில் செயல்படுகிறது. கேமராவை பொறுத்தவரை பின்பக்கம் 13 மெகா பிக்ஸலும், முன்பக்கம் 8 மெகாபிக்ஸலும் கொண்டது. ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ரியல்மி 1-ல் ஃபிங்கர் பிரிண்ட் வசதி இல்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.
First published: September 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

But the job is not done yet!
vote for the deserving condidate
this year

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626