என்னென்ன தேடுறாங்க பாருயா..! இந்தியாவில் 2022-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்கள்..!
என்னென்ன தேடுறாங்க பாருயா..! இந்தியாவில் 2022-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்கள்..!
மாதிரிப்படம்
நமக்கு தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள நினைக்கும் போது அல்லது யாராவது பதிலை தெரிந்து கொள்ள நினைக்கும் கேள்விகளை கேட்கும்போது நம்மில் பெரும்பாலானோருடைய பதில் இதோ ஒரு நிமிடம் கூகுள் செய்கிறேன் என்பதாக இருக்கிறது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான யூஸர்களால் ஒருநாளில் அதிகம் பயன்படுத்தப்படும் முன்னணி சர்ச் என்ஜினாக இருக்கிறது கூகுள். இன்டர்நெட்டில் எத்தனை சர்ச் என்ஜின்கள் இருந்தாலும், கூகுள் மட்டுமே மிகவும் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் வருடா வருடம் இயர் இன் சர்ச் அறிக்கையை வெளியிடும் கூகுள் நிறுவனம் சமீபத்தில் தனது "இயர் இன் சர்ச் 2022" அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இயர் இன் சர்ச் 2022 (Year in Search 2022) பட்டியல் வெவ்வேறு நாடுகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடப்பாண்டு இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் மற்றும் ட்ரெண்டிங் தலைப்புகளை கூகுள் பிரிவு வாரியாக வெளியிட்டுள்ளது. கூகுளின் இந்த அறிக்கை இந்திய யூஸர்கள் இந்த ஆண்டு எதை கூகுளில் அதிகம் சர்ச் செய்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. கூகுள் இயர் இன் சர்ச் 2022 இந்தியா அறிக்கையின் படி இந்த ஆண்டு சர்ச்சஸ்களில் IPL சிறந்த டிரெண்டிங் சர்ச்சாக இருந்தது. இதனை தொடர்ந்து CoWIN மற்றும் FIFA உலக கோப்பை அடுத்தடுத்த இடத்தை பிடித்தன.
இந்தியாவில் 2022-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்கள்
what is பிரிவில் அதிகம் தேடப்பட்ட டாப்பிக் : ஒரு விஷயம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள உதவும் what is பிரிவில், இந்திய ராணுவத்தில் இளைஞர்களை சேர்ப்பதற்கான மத்திய அரசின் திட்டமான அக்னிபாத் திட்டம் என்றால் என்ன என்பது அதிகம் தேடப்பட்டுள்ளது.
அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் : பிளாக்பஸ்டர் திரைப்படமான கேஜிஎஃப் 2 மற்றும் பிரம்மாஸ்திரா உள்ளிட்ட திரைப்படங்கள் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் பட்டியலில் டாப்பில் உள்ளன. உலகளவில் பிரபலமான திரைப்படத் தேடல்களின் பட்டியலிலும் இவை இடம்பெற்றுள்ளன.
எப்படி செய்வது அதாவது How to பிரிவில் அதிகம் தேடப்பட்ட டாப்பிக் : தடுப்பூசி சான்றிதழை எவ்வாறு டவுன்லோட் செய்வது மற்றும் பி.டி.ஆர்.சி சலானை (professional tax registration certificate) எப்படி டவுன்லோட் செய்வது உள்ளிட்ட டாப்பிக்ஸ் அதிகம் தேடப்பட்டுள்ளன.
விளையாட்டு பிரிவில் அதிகம் தேடப்பட்ட டாப்பிக் : டி20 உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடர் சார்ந்த தேடல்கள் கூகுளில் உச்சத்தில் இருந்த அதே நேரம் இந்தியாவில் ட்ரெண்டிங் சர்ச் டாப்பிக்காக IPL இருந்தது. இந்தியாவில் ஒட்டுமொத்த 2022 டிரெண்டிங் தேடல் முடிவுகளில் முதலிடத்தைப் பிடித்து மற்றும் நாட்டில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு நிகழ்வாகவும் IPL இருந்தது.
செய்தி நிகழ்வுகளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 செய்திகள் : 1. லதா மங்கேஷ்கர் தேர்ச்சி, 2. சித்து மூஸ் வாலா தேர்ச்சி, 3. ரஷ்யா உக்ரைன் போர், 4. உ.பி தேர்தல் முடிவுகள், 5. இந்தியாவில் கோவிட்-19 வழக்குகள், 6. ஷேன் வார்ன் தேர்ச்சி, 7. ராணி எலிசபெத் கடந்து செல்கிறார், 8. கேகே கடந்து செல்கிறார், 9. ஹர் கர் திரங்கா, 10. பாப்பி லஹிரி கடந்து செல்கிறார்
அதிகம் தேடப்பட்ட நபர்கள் : 2022-ல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் பாஜக-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா முதல் இடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் உள்ளனர்.
அதிகம் தேடப்பட்ட ரெசிபி : பனீர் பசன்டா மற்றும் மோடக் (கொழுக்கட்டை) ஆகியவை இந்த ஆண்டு கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ரெசிபிக்கள் ஆகும்.
Near me பிரிவில் அதிகம் தேடப்பட்ட டாப்பிக் : இந்த பிரிவில் Covid vaccine அதிகம் தேடப்பட்ட டாப்பிக் ஆகும். இதனை தொடர்ந்து Swimming pool near me இரண்டாம் இடத்திலும், Water park near me மூன்றாம் இடத்திலும் உள்ளன.
அதிகம் தேடப்பட்ட பாடல்கள் : பிரபல பாடகர் Aditya A-வின் இண்டி-பாப் பாடலான 'சாந்த் பாலியன்' மற்றும் புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவல்லி உள்ளிட்ட பாடல்கள் இந்திய அளவில் மட்டுமல்ல உலகளாவிய தேடல்களில் மிகவும் பிரபலமான டியூன்களில் இடம்பெற்றுள்ளன.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.