• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • வீட்டில் அளவுக்கு அதிகமான தொழிநுட்ப சாதனங்கள் இருப்பது நல்லதல்ல.. ஏன் தெரியுமா?

வீட்டில் அளவுக்கு அதிகமான தொழிநுட்ப சாதனங்கள் இருப்பது நல்லதல்ல.. ஏன் தெரியுமா?

காட்சிப் படம்

காட்சிப் படம்

ஸ்மார்ட் ரோபோக்கள் மற்றும் இணைக்கப்பட்ட உபகரணங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் தைவான் போன்ற இடங்களில், ஹேக்கர்கள் அங்குள்ள பல மெஷின்களை ஹேக் செய்து வருகின்றனர். 

  • Share this:
இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் உங்கள் காபி மெஷின்,  வாஷிங் மெஷின், குளிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் போன்ற பல விஷயங்களை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செய்யக்கூடும் இதன்மூலம் நீங்கள் படுக்கையிலிருந்து எழுவதற்கு முன்பே உங்களின் பல வேலைகளை இந்த AI செய்து முடித்து விடும். இதனால் நமக்கு அதிக ஆபத்துக்கள் ஏற்படுமா? அதைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள். உங்கள் காபிமேக்கர் ஸ்மார்ட்டாக இருந்தால், அது ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் சரியான அளவு காபியை உங்களுக்காக சுடச் சுட போட்டுத்தரும். 

ஆனால் சில நாட்கள் நீங்கள் நீண்ட நேரம் தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள் அல்லது சீக்கிரம் எழுந்துவிட்டிர்கள் அல்லது வீட்டில் இல்லாத நாட்களில் நிலைமை என்னாகும். அப்போது ஒவ்வொருமுறையும் நீங்கள் சிஸ்டத்தை நிறுத்த வேண்டும் அல்லது டாஸ்குகளை மாற்ற வேண்டும். இல்லையென்றால் காபி மெஷின் தனது அன்றாட வேலையை வழக்கம் போல் செய்யும். சில நேரங்களில் டெக்னிகள் பால்ட் ஏற்பட்டு காபி மெஷின் கொதித்து தரையில் கொட்டக்கூடும். இதில் யோசிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ஆட்டோமேட்டிக் செயல்பாட்டால் உங்களின் அன்பு குழந்தை அல்லது பெட்டிற்கு ஏதேனும் அடிபடலாம் அல்லது காயமாகலாம். 

புதிய AI அமைப்புகளை பற்றி 1950 ஆம் ஆண்டு, ரே பிராட்பரி எழுதிய  சிறுகதையான ‘There Will Come Soft Rains’ என்ற சித்தரிக்கப்பட்ட ‘ஸ்மார்ட் ஹோம்’ ஐ ஒத்திருக்கிறது. இதில் கருப்பொருள் என்னவென்றால் அணுசக்தி பயன்பாட்டின் விளைவாக மனிதகுலத்தின் துன்பத்தைப் பற்றியது ஆனாலும் கூட இந்த கதையில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 2026 ஆம் ஆண்டில் ஒரு ஸ்மார்ட் ஹோம் இருந்தால் அங்கு எந்த மனித உதவியும் தேவையில்லை என்பதாகும்.

இந்த ஸ்மார்ட் ஹவுஸ் ஆனது உணவு சமைப்பது, உணவுகளை சுத்தம் செய்வது, எந்த மனித இடையீடும் இல்லாமல் கதகதப்பான படுக்கைகளை உருவாக்குவது என எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படும். உங்கள் வீட்டில் ஒருத்தர்கூட இல்லையென்றாலும் இந்த ஸ்மார்ட் ஹவுஸ் மெஷின்கள் தனது அன்றாட பணிகளைச் செய்கிறது. சுமார் 71 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கதை முதன்முதலில் வெளியிடப்பட்டபோது, இதுபோன்ற தொழில்நுட்பம் எப்போதுமே வராது ஆனால் கேட்பதற்கு நன்றாக உள்ளதாக நினைத்தனர். ஆனால் இப்போது உண்மை நிலையை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. 

ஸ்மார்ட் மெஷின்களுடன் முழுமையாக இணைக்கப்பட்ட வீட்டின் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம், அதற்காக இந்த மெஷின்கள் கூடவே கூடாதென்று சொல்லவில்லை. எவற்றிற்கெல்லாம் தேவை எதெற்கெல்லாம் வேண்டாம் என்பதை நீங்கள் தான் முடிவெடுக்கவேண்டும். உதாரணமாக ஸ்மார்ட் கதவை பற்றி பார்த்தோமானால், AI ஆனது நம் முகத்தின் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி, இதற்கு முன்னர் நாம் ப்ரோக்ராம் செய்திருந்த தரவுகளின் அடிப்படையில் நாம் சரியான இன்புட்டை அளித்தால் கதவு தானாகவே திறக்கும். எனவே, இந்த செயலுக்கு வேலையாட்களோ அல்லது வீட்டில் இருப்பவர்களோ வந்து கதவை திறக்கவேண்டுமென்பதல்ல. 

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகள் AI தலைமையிலான முக அங்கீகார தொழில்நுட்பம் மோசமானதல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. 

காகேசிய முகங்களுடன் (Caucasian faces) ஆப்பிரிக்க-அமெரிக்க மற்றும் ஆசிய முகங்களை ஒப்பிடும்போது, அடையாளம் காண்பதில் முக அங்கீகார வழிமுறைகள் மிகக் குறைவான துல்லியமானவை என்றும் 2019 வெளியிடப்பட்ட அமெரிக்க ஆய்வு ஒன்று கூறியிருந்தது.  ஆழமாக யோசிக்க வேண்டியது என்னவென்றால் நீங்கள் வெளியூர் சென்றுள்ளபோது, ஒரு பணியாளர், உறவினர் அல்லது உங்களுக்கு கொஞ்சம் நெருக்கமானவராக இருப்பவர்களை தவிர வேறு யாரேனும் வீட்டிற்குள் வந்தால் நன்றாக இருக்குமா? அதே இந்த முக அங்கீகாரம் தொழில்நுட்பம் இருந்தால் அதற்கு சாத்தியம் இருக்காது. 

ஆனால் இந்த AI முறை தோல்வி அடைந்தால் மட்டுமே தெரியாத நபர்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து ஆபத்துகளை ஏற்படுத்தமுடியும். வீட்டினுள், சில நேரங்களில் ஸ்மார்ட் மெஷின்கள் குறிப்பாக குழந்தைகள் அல்லது வயதானவர்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும். உதாரணத்திற்கு குழந்தை, மெஷின் அருகே வந்து எதையாவது அழுத்திவிட்டால் இதற்கு AI ரிப்பேராகலாம் அல்லது வேறு ஏதேனும் செயல்களை செய்யலாம். குழந்தையோ அல்லது வேறு யாரோ சும்மா தொட்டு பார்க்கிறேன் என்றபேரில் திடிரென்று வாஷிங் மெஷின் ப்ரோக்கிராமை எளிதாக மாற்றலாம். இதன்மூலம் குறிப்பிட்ட நபர் அல்லது குழந்தை மெஷினுக்குள் மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்படலாம். 

கெய்சர்களில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பாத் டப்களிலும் இதேபோன்ற ஆபத்து உள்ளது, உதாரணமாக இப்போதுள்ள கிளைமேட்டிற்கு இவளவு சூடு தண்ணீர் போதும் என்று நீங்கள் வைக்கலாம். வீட்டிற்கு புதிதாக வருபவர் இதை அறியாமல் எதை எதையோ அழுத்தி அந்த மெஷினை ஒரு வழிபடுத்தக்கூடும்.

இந்த மெஷின்களை வடிவமைக்கும் நிறுவனங்கள் இந்த அபாயங்களை நன்கு அறிவார்கள். வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவதையும், அனைத்து சாதனங்களுக்கும் கையேடு பணிநிறுத்தம் செயல்பாடுகளை இயக்குவதையும் அவர்கள் நியாயப்படுத்துவார்கள். 

ஆனால் கேள்வி என்னவென்றால், AI என்பது வாழ்க்கையை எளிமையாக்க வேண்டுமென்றால், ஒருவர் ஏன் கையேட்டை படிக்க வேண்டும்? மேலும், இந்த மெஷின்களிலிருந்து அனைத்து தரவையும் யார் சேகரிக்கின்றனர், அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான அச்சங்கள் உள்ளன. ஒரு ஹேக்கர் இந்தத் தரவை அணுகி, உங்கள் சிஸ்டத்தில் ஃபிஷிங் தாக்குதல்கள் அல்லது ஹேக்குகளில் ஈடுபட்டால் அடர்த்தியா உங்கள் நிலை என்ன ஆகும்? ஸ்மார்ட் ரோபோக்கள் மற்றும் இணைக்கப்பட்ட உபகரணங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் தைவான் போன்ற இடங்களில், ஹேக்கர்கள் சிஸ்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அங்குள்ள பல மெஷின்களை ஹேக் செய்து வருகின்றனர். 

 

இப்போது அங்கு இதுபோன்ற சிக்கல்கள் பொதுவானதாக மாறி  வருகின்றது. இதனால் ஒருவரின் வீட்டை முழுமையாக ஸ்மார்ட் ஆக்குவது ஆபத்தாக இருக்கலாம். இதை பற்றி தெரியாத வாடிக்கையாளர்கள் தான் தங்கள் வீடுகளையும் மற்ற உபகரணங்களையும் மார்க்கெட் போக்கு மற்றும் பணம் இருப்பதால் AIக்கு மாறி வருகின்றனர். உண்மையில் தவறான அணுகுமுறை. இவைகள் ஒருபுறமிருந்தாலும், சில AI பயன்கள் நமக்கு உதவியாக இருக்கும். குறிப்பாக மொபைல் சென்சார்களைப் பயன்படுத்தி லைட்ஸ் அல்லது பேன்களை ஆன் / ஆஃப் செய்வது, குளிர்சாதன பெட்டியை கண்ட்ரோல் செய்வது வீட்டை சுற்றி இருக்கும் கேமராக்கள், ஏசி வெப்பநிலையை மாற்றுதல் போன்றவை உண்மையில் வரப்பிரசாதம் தான். ஆனாலும் கூட இது போன்ற AI தயாரிப்புகளில் டேன்ஜரும் மறைந்துள்ளதை ஒரு கணம் யோசித்து விட்டு செயல்படுவது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: