ஸ்மார்ட் ஃபோன்களில் நமக்கு வரும் இடைவிடாத நோட்டிஃபிகேஷன்களை, பெரும்பாலான நேரங்களில் நம்மால் புறக்கணிக்க முடியாமல் போகிறது. நோட்டிஃபிகேஷன் அலெர்ட் சத்தம் கேட்டவுடன் நாம் செய்து கொண்டிருக்கும் வேலைகளை சற்று நிறுத்தி விட்டு என்ன வந்திருக்கிறது என்பதை நோட்டமிடுவோம். இருப்பினும் அலுவலக வேலை அல்லது முக்கிய அவசர பணிகளை மேற்கொள்ள கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, நம்மை திசை திருப்பும் வகையில் வரும் மொபைல் நோட்டிஃபிகேஷன்கள் காரணமாக வேலைகளை செய்து முடிப்பதில் தாமதம் அல்லது தசவறுகள் நிகழலாம்.
மேலும் அலுவலகத்தில் மொபைலை அவ்வப்போது எடுத்து பார்த்து கொண்டிருப்பது தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும். இந்த சிக்கலை தீர்ப்பதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் "Your Phone" சாஃப்ட்வேர் எளிய வழியில் உதவுகிறது. விண்டோஸ் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் யூஸர்கள் தங்கள் மொபைல்களில் இருந்து ரியல்-டைம் அலெர்ட்களை பெற இந்த சாஃப்ட்வேர் அனுமதிக்கிறது. தங்கள் மொபைலில் வாய்ஸ் கால் அல்லது மெசேஜ்களை பெறும் போது யூஸர்களுக்கு அது குறித்த அலெர்ட்களை காண்பிக்கும். நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் உங்கள் மொபைல் நோட்டிஃபிகேஷன்களை எவ்வாறு தோன்ற செய்வது என்பதை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
விண்டோஸ் 10 லேட்டஸ்ட் வெர்ஷன் கொண்ட சிஸ்டம்களில் Your Phone சாஃப்ட்வேர் தற்போது ஆக்டிவாக இருக்கிறது. இது விண்டோஸ் சிஸ்டமுடன் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களை கனெக்ட் செய்ய அனுமதிக்கிறது. நீங்கள் விண்டோஸ் 10 ஏப்ரல் 2018 வெர்ஷன் அல்லது அதற்குப் பிறகு அப்கிரேட் செய்திருந்தால் Your Phone App தானாகவே நிறுவப்பட்டிருக்கும். இல்லை என்றால் மைக்ரோசாப்ட் ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதே போல உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து நோட்டிஃபிகேஷன்களை பெற, உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஸ்மார்ட்போன் கம்பேனியன் (smartphone companion) இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும். Your Phone Companion app-ஐ கூகுள் ப்ளேவில் இருந்தும் டவுன்லோட் செய்யலாம்.
* உங்கள் PC-யில் Your Phone app-ஐ கிளிக் செய்து கொள்ளவும். ஆண்ட்ராய்டு பாக்சில் கிளிக் செய்து பின்னர் Continue பட்டனை கிளிக் செய்யவும்.
* இப்போது உங்கள்
ஆண்ட்ராய்டு ஃபோனுக்கான Your Phone Companion ஆப்-ஐ டவுன்லோட் செய்யக்கூடிய ஒரு URL தோன்றும் ஒரு ஸ்கிரீனை இப்போது காணலாம். ஆனால் நீங்கள் நீங்கள் ஏற்கனவே உங்கள் தொலைபேசியில் Your Phone Companion-ஐ டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்திருந்தால் ‘ஆம், நான் Your Phone Companion-ஐ டவுன்லோட் செய்து முடித்துவிட்டேன்’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
* உங்கள் விண்டோஸ் சாதனத்தில் உள்ள Your Phone என்ற App உங்கள் விண்டோஸ் சாதனத்துடன் மேனுவலாக அல்லது QR குறியீடு மூலம் உங்கள் தொலைபேசியை இணைப்பதற்கான ஆப்ஷன்களை வழங்கும். QR குறியீட்டை ஓபன் செய்யும் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
* இப்போது, உங்கள் மொபைலில் Your Phone Companion ஆப்-ஐ துவக்கி, தொடரவும் என்பதை அழுத்தவும். பின்னர் அந்த ஆப் உங்கள் மொபைலில் கேட்கும் பெர்மிஷன்களை ஓகே செய்து பின்னர் Continue-வை அழுத்தவும்.
Also read... ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை - ரூ.20,000க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!
* நீங்கள் எந்த அலெர்ட்டையும் மிஸ் செய்ய விரும்பவில்லை என்றால் குறிப்பிட்ட இந்த சாஃப்ட்வேரை பேக்ரவுண்டில் ரன் செய்யலாம். இருப்பினும் இந்த செயல் உங்கள் தொலைபேசியின் பேட்டரி ஆயுளைக் குறைக்க கூடும். தொலைபேசியில் Done என்பதை அழுத்தவும். பின்னர் உங்கள் கணினியில் Start என்பதை அழுத்தவும்.
நீங்கள் பெற விரும்பும் அலெர்ட்ஸை தேர்வு செய்யவும். நீங்கள் அலெர்ட்ஸ்களை பெற துவங்கியதும், எந்த App-களிலிருந்து நோட்டிஃபிகேஷன்களை பெற விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்.
* உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் Your Phone app-ல் காணப்படும் Notification-களுக்கு செல்லவும். அதில் Customize என்ற ஆப்ஷனை தேர்வு செய்த பின்னர் செட்டிங்ஸ் ஆப்ஷன் காட்டப்படும்.
* அங்கு எந்தெந்த App-களில் இருந்து நோட்டிஃபிகேஷன்களை பெற வேண்டும் என்பதைத் தேர்வுசெய்க (which apps I get notifications fro) என்பதன் கீழ், உங்கள் கணினியில் அலெர்ட்ஸ்களை வழங்கும் அனைத்து App-களின் பட்டியலையும் நீங்கள் காணலாம்.
* இந்த பட்டியலில் இருக்கும் எந்தவொரு App-லிருந்தும் நோட்டிஃபிகேஷன்களை பெறுலாம் அல்லது பிளாக் செய்யலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.