ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ஆன்லைன் அச்சுறுத்தல்களால் பயமா? பாதுகாக்க அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட கூகுள்

ஆன்லைன் அச்சுறுத்தல்களால் பயமா? பாதுகாக்க அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட கூகுள்

மாதிரி படம்

மாதிரி படம்

தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள் நிறுவனத்திற்கு 2022 ஒரு பிஸியான ஆண்டாக உள்ளது. சமீபத்தில் பிக்சல் 7 சீரிஸை  அறிமுகப்படுத்திய கையோடு நிறுவனம் பல அப்டேட்ஸ்களை அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள் நிறுவனத்திற்கு 2022 ஒரு பிஸியான ஆண்டாக உள்ளது. சமீபத்தில் பிக்சல் 7 சீரிஸை அறிமுகப்படுத்திய கையோடு நிறுவனம் பல அப்டேட்ஸ்களை அறிவித்துள்ளது.

அந்த வகையில் ஆன்லைன் அச்சுறுத்தல்களிலிருந்து சிறந்த பாதுகாப்பு வழங்க ஆண்ட்ராய்டு மற்றும் குரோம் ஆகிய இரண்டிற்கும் Passkey சப்போர்ட்டை வெளியிடுவதாக கூகுள் சமீபத்தில் அறிவித்தது. யூஸர்களுக்கான இறுதி வெளியீட்டிற்கு முன்னதாக, ஆண்ட்ராய்டு மற்றும் குரோம் டெவலப்பர்களுக்கான Passkey சப்போர்ட்டை வெளியிடுவதாக கூகுள் அறிவித்துள்ளது.

தற்போது டெவலப்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு மற்றும் குரோமிற்கான இந்த புதிய Google Passkey அம்சம் பாஸ்வேர்ட் அங்கீகாரத்தை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் பாஸ்வேர்ட்ஸ் போன்ற மரபு அங்கீகார வழிமுறைகளை மாற்றுவதை நோக்கமாக கொண்டது. Passkeys-களை மீண்டும் பயன்படுத்த முடியாது, சர்வர் மூலம் கசியாது, மேலும் ஃபிஷிங் தாக்குதல்களிலிருந்து யூஸர்களை பாதுகாக்கும் என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது.

ஜிமெயில், பேஸ்புக், குரோம் என எந்த வெப்சைட்டாக இருந்தாலும் அதில் நம் அக்கவுன்டிற்கான யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடுவது அல்லது saved password-ஐ பயன்படுத்துவது ஆகியவற்றால் இனி இந்த பிரச்சனை இருக்காது. அதாவது ஒவ்வொரு முறையும் யூஸர் நேம் & பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது.

Passkey அங்கீகாரத்திற்கு கைரேகை அல்லது ஃபேஸ் ஆதன்டிகேஷன் போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரம் தேவை. இவைத் தவிர அணுகலுக்காக ஆண்ட்ராய்டுகளில் பயன்படுத்தப்படும் PIN அல்லது ஸ்வைப் செய்யும் பேட்டர்ன்களைக் கூட யூஸர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு ஏதுவாக Passkey-கள் வெவ்வேறு ஆப்ரேட்டிங் சிஸ்டம்ஸ் மற்றும் பிரவுசர்களில் கட்டமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் sign in செய்யும் போது உங்கள் அடையாளத்தை அங்கீகரிக்க பின்வரும் வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

Google Passkey-யை பயன்படுத்தி Google android அல்லது Google Chrome-ல் யூஸர்கள் எவ்வாறு உள்நுழையலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

ஒவ்வொரு முறையும் நாம் கணினி, லேப்டாப் அல்லது ஸ்மார்ட் போன்களில் அக்கவுண்ட் லாகின் செய்யும் போது, நமது மொபைலில் ஃபிங்கர் பிரிண்ட் வைக்கும்படி அல்லது முகத்தை காட்டும்படி திரையில் தோன்றும். சென்சாரில் ஃபிங்கர் பிரிண்ட் வைத்தவுடன் அல்லது முகத்தை காட்டியவுடன் லாகின் ஆகிவிடும்.

ஆண்டிராய்டில் Google வழியே ஒரு தளத்தில் லாகின் செய்வது எப்படி?

- மொபைலில் Google பிரவுசரை ஓபன் செய்து sign in செய்ய விரும்பும் அக்கவுண்ட்டை தேர்ந்தெடுக்கவும்

- இப்போது பாஸ்வேர்டுக்கு பதிலாக கேட்கப்படும் ஃபிங்கர் பிரின்ட் , ஃபேஸ் ஐடி அல்லது ஸ்க்ரீன் லாக் கொண்டு அதை அங்கீகரிக்கவும்

- passkey அக்கவுண்ட் தகவலை உறுதி செய்து மேற்கண்ட ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி இறுதியான அங்கீகாரத்தை முடிக்கவும்

Passkey கொண்டு கம்ப்யூட்டரில் பிரவுசர் மூலம் வெப்சைட்டில் எப்படி sign in செய்யலாம்.?

Mac-ல் Safari-ஐ பயன்படுத்தி ஒரு ஆண்ட்ராய்டு யூஸர் Passkey இயக்கப்பட்ட வலைதளத்தில் உள்நுழைய முடியும். குரோம் யூஸர் தனது iOS டிவைஸ் அல்லது Google Chrome கிளவுட்டில் சேமிக்கப்பட்ட passkey-யை பயன்படுத்தி Windows-ல் லாகின் செய்யலாம்.

Read More: இனி பாஸ்வோர்ட் இல்லாமல் உள்நுழையலாம்: கூகுளின் புதிய அம்சம் அறிமுகம்!

 கூகுள் பாஸ்வேர்டு மேனேஜர் மூலம் passkey-களை யூஸர்கள் எளிதாக நிர்வகிக்கலாம். நீங்கள் இதை வலைத்தளங்கள் மற்றும் ஆப்ஸ்களுக்கு பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல், Windows, macOS மற்றும் iOS மற்றும் ChromeOS ஆகியவற்றுடன் பயன்படுத்தவும் இணக்கமானது.

First published:

Tags: Android, Google, Google Chrome