• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த LinkedIn - ஒருவாரம் விடுமுறை!

ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த LinkedIn - ஒருவாரம் விடுமுறை!

LinkedIn

LinkedIn

ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் லிங்கெடின் நிறுவனத்தின் பணியாற்றும் 15,900 ஊழியர்களுக்கு ஒரு வாரம் விடுமுறையை கொடுத்து அசத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு சொந்தமான லிங்கெடின் நிறுவனம், ஊழியர்கள் புத்துணர்ச்சி பெறுவதற்காக ஊதியத்துடன் ஒருவாரம் விடுமுறை கொடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு உலகளவில் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. 2வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவிடலாம் என கருதிய மக்களுக்கு, 2வது அலை பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. குறிப்பாக, முதல் அலையில் பரவிய கொரோனா தற்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு மெதுவாக குறையத் தொடங்கியதால், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று வேலை செய்யத் தொடங்கினர். ஒரு சில பெரு நிறுவனங்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை தொடர்ந்து கடைபிடித்து வந்தன. காரணம் கொரோனா அலை மீண்டும் பரவி வருவதை கருத்தில் கொண்டு ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தினர். ஆனால், வீட்டில் இருந்து வேலை செய்யும்போது ஊழியர்களுக்கு மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பதாக ஆய்வுகள் வெளியாகின. அதில், ஊழியர்களுக்கு புத்துணர்ச்சி தேவைப்படுவதாகவும், எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே அதிக நேரம் வேலைப் பார்ப்பதால், மனச்சோர்வை சந்திப்பதாகவும் கூறப்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்ட உலகளவில் வேலைவாய்ப்பு தகவல்களை முன்னணியில் கொடுக்கும் லிங்கெடின் (LinkedIn) நிறுவனம், தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்துள்ளது. அதாவது, ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் லிங்கெடின் நிறுவனத்தின் பணியாற்றும் 15,900 ஊழியர்களுக்கு ஒரு வாரம் விடுமுறையை கொடுத்து அசத்தியுள்ளது. வழக்கமான நடைமுறையில் இருந்து ஒரு மாற்றத்தை சந்திக்கவும், மனதளவில் புத்துணர்ச்சி பெறுவதற்கும், தங்களை Refresh செய்து கொள்வதற்கும், ஊழியர்களுக்கு இந்த விடுமுறையை லிங்கெடின் அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய லிங்கெடின் தலைமை செயல் அதிகாரிகளுள் ஒருவரான டியூலா ஹான்சன் (Teuila Hanson), "லிங்கெடின் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மதிப்பு மிக்க ஒன்றை கொடுக்க விரும்பினோம். அனைவரும் கூட்டாக விலகிச் செல்ல வேண்டிய நேரம் இது என்பதால், எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு ஒருவாரம் விடுமுறை கொடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தார். மேலும், முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என தெரிவித்த டியூலா ஹான்சன், அவர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை பின்வரும் நாட்களில் கொடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

Also read... வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் - சாட் பாக்சில் வரவுள்ள சிறப்பம்சம் என்ன தெரியுமா?

இந்த ஒருவாரம் விடுமுறை எதற்காக என்பது குறித்து விளக்கிய டியூலா ஹான்சன், " கொரோனா காலத்தில் ஊழியர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை ஆய்வின் மூலம் உணர்ந்து கொண்டோம். இதனை மாற்ற வேண்டும் என முடிவு செய்து, அதன்படி Lift Up என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்தோம். இந்த வார விடுமுறையில் ஊழியர்களுக்கு எந்த மீட்டிங்கும் இருக்காது, தங்களுடைய மன நலத்தை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் கொடுக்கப்படும், வழக்கமான நடைமுறையில் இருந்து விலகி புத்துணர்ச்சியுடன் சிந்திக்க வைக்கும் வகையிலான பயிற்சிகளும் கொடுக்கப்படும்", எனத் தெரிவித்தார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு சொந்தமான லிங்கெடின் நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. செப்டம்பர் மாதம் வரை இதே நிலையை தொடரலாம் என கருதியிருந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், Work From Home மேலும் தொடர லிங்கெடின் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு லிங்கெடின் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது. தற்போது உலகளவில் இருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் சம்பந்தமான தகவல்களை வழங்குவதில் அந்த நிறுவனம் முன்னணியில் உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: