சகலகலா பூச்சாண்டி vs உஷார் யூசர்ஸ் : NET-அ உஷாரா USE பண்ணுங்க...

சகலகலா பூச்சாண்டி vs உஷார் யூசர்ஸ் : NET-அ உஷாரா USE பண்ணுங்க...
  • Share this:
சைபர் குற்றங்களை தடுப்பதற்காக சென்னை போலீசார் விழிப்புணர்வு பிரசார வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இணையதளங்களில் குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்கும் பொருட்டு, விழிப்புணர்வு பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்காக சென்னை போலீசார் சகலகலா பூச்சாண்டி vs உஷார் யூசர்ஸ் என்ற பெயரில் குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளனர். இந்த குறும்படத்தின் சி.டி. வெளியீட்டு விழா நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.

அப்போது, குறும்பட சிடியை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களைவிட மிகவும் அபாயகரமான குற்றமாக இணையதள குற்றங்கள் உள்ளதாகவும், இந்த குற்றங்களை தடுப்பதற்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த குறும்படம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.


வீடியோ:
First published: August 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்