டிக் டாக் செயலி விரைவில் தடை செய்யப்படும்: தமிழக அரசு உறுதி

News18 Tamil
Updated: July 18, 2019, 8:13 PM IST
டிக் டாக் செயலி விரைவில் தடை செய்யப்படும்: தமிழக அரசு உறுதி
டிக் டாக்
News18 Tamil
Updated: July 18, 2019, 8:13 PM IST
தமிழகத்தில் டிக்-டாக் செயலியைஅரசு உறுதியாக தடைசெய்யும் என்று தகவல் தொழில்நுட்பத் துறைஅமைச்சர் மணிகண்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மணிகண்டன், கீழ்கண்டவாறு தெரிவித்தார்.

”ஒரு செயலியை நீக்குவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அது தொடர்பான குழு டெல்லியில் உள்ளது. அந்த அமைப்பின் மூலமாக தான் செயலியை நீக்க முடியும்.  தமிழ்நாட்டிற்கு நோடல் அதிகாரியை நியமித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு செயலியை விலக்குவது, நீக்குவது என்றால் அவர்களுக்கு கருத்துரு அனுப்பி, பின்னர்தான் அவர்கள் நீக்கம் செய்வார்கள்.


11 பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.  அதுதொடர்பான வழக்கில் சில நிபந்தனைகளை அளித்தது நீதிமன்றம். தமிழர்களுடைய கலாசாரம் பாதிக்காத வகையில் செயல்படுத்துவோம் என்று அந்நிறுவனம் சொன்னதினால் தடை நீதிமன்றம் மூலம் நீக்கப்பட்டிருக்கிறது.

செய்தித்தாள்களில் தொடர்ந்து பலர் இறந்து விட்டதாக செய்திகள் வருகிறது. தவறான விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதாக தான் செய்திகள் வருகின்றன. மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பி அதனை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்”

இவ்வாறு அமைச்சர் மணிகண்டன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

Loading...

See Also:
First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...