முதலமைச்சர் பழனிசாமியை பின்தொடரும் ஒரு மில்லியன் பேர்!

முதலைம்மைச்சர் பழனிசாமி

இன்று முதலமைச்சரின் ட்விட்டர் கணக்கில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டுள்ளது.

  • Share this:
சமூக வலைதளங்களை பயன்படுத்தும் அரசியல்வாதிகளின் பட்டியலில் முதலமைச்சர் பழனிசாமியும் ஆக்டிவாக இருக்கிறார். அவரை ட்விட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை தற்போது பத்து லட்சத்தை கடந்து விட்டது. 

கொரோனா நோய்த்தொற்று காலங்களில் பொது மக்களின்  கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ட்விட்டர் கணக்கை தீவிரமாக பயன்படுத்தி வந்தார்.

பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு ட்விட்டர் வாயிலாக கொண்டு வரும்போது அதற்கு உடனடி தீர்வு காண அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். இதனால் பொதுமக்கள் பலரும் அவர்களுடைய கோரிக்கைகளை ட்விட்டர் வாயிலாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரத் தொடங்கினர்.

ட்விட்டர் கணக்கு மூலம் ஆபத்தான நிலையில் இருப்பவர்களையும் உதவி கிடைக்காத இடத்தில் இருப்பவர்களையும் வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களையும் மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் தமிழக முதலமைச்சரால் மேற்கொள்ளப்பட்டது.


அதேபோல அரசின் பல்வேறு திட்டங்களையும் செயல்பாடுகளையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டு வருகிறார். இதன் மூலமாக அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்று முதலமைச்சரின் ட்விட்டர் கணக்கில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Yuvaraj V
First published: