பணம் புழங்கும் இடமாக மாறிவிட்ட யூபிஐ பரிவர்த்தனைகளில் மோசடி நடக்கவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே நாம் அதனை கவனமாக கையாள வேண்டும்.
யுபிஐ (UPI) என்றால் என்ன?
வங்கி பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்வதற்கு வசதியாகப் பல்வேறு முயற்சிகள் நீண்ட ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியமானது தான் இந்த UPI. அதாவது, ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு. யுபிஐ (UPI) என்றால் யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (Unified Payment Interface (UPI)).
ஒருவரின் மொபைல் போன் வழியாக ஒரு பேங்க் அக்கவுன்ட்டிலிருந்து இன்னொரு பேங்க் உடனடியாக பணத்தை மாற்ற UPI அனுமதிக்கிறது. மொபைல் சாதனங்களில் மட்டுமே ஆப்ஸின் மூலம் பணம் செலுத்த முடியும். யுபிஐ வழியாக பணப் பரிமாற்றம் 24x7 அடிப்படையில் செயல்படுகிறது.
யுபிஐ (UPI) பயன்படுத்த, நீங்கள் ஒரு பேங்க் அக்கவுன்ட் (Bank account) வைத்திருக்க வேண்டும், அதாவது, யுபிஐ (UPI) வசதியைப் பயன்படுத்த உங்கள் பேங்க் உங்களை அனுமதிக்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), எச்.டி.எஃப்.சி பேங்க் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் (State Bank of India (SBI), HDFC Bank, and ICICI Bank) போன்ற பேங்க்களில் பேங்க் அக்கவுன்ட்டை வைத்திருக்க வேண்டும். உங்கள் பேங்க் யுபிஐ பேமெண்ட்டுகளை சப்போர்ட் செய்கிறதா, என்பதை நீங்கள் செக் செய்து பார்த்தவுடன், உங்கள் ஸ்மார்ட்போனில் யுபிஐ சப்போர்ட் ஆப்ஸைப் டவுன்லோட் செய்ய வேண்டும். யுபிஐ மூலம் பணம் செலுத்த பொதுவாக பயன்படுத்தப்படும் ஆப்ஸ்களில் BHIM முக்கியமானது, இது NPCI ஆல் உருவாக்கப்பட்டது, மேலும் சில தனியார் ஆப்ஸ்களிளும் இத்தகைய பேமெண்ட்டுகளை நீங்கள் மேற்கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக பேடிஎம், ஃபோன்பே, கூகுள் பே, அமேசான் பே (Paytm, PhonePe, Google Pay, Amazon Pay) போன்றவை மக்களிடையே பிரபலமானவை. வெரிஃபிகேஷனுக்காக உங்கள் மொபைல் எண்ணை உங்கள் பேங்க் அக்கவுன்ட்டில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பதை முதலில் நினைவில் கொள்க.
QR Code
இந்த யுபிஐ பரிவர்த்தனைகளை எளிதாக்க பயன்படுத்தப்படுவது அந்த செயலியில் உள்ள QR Code தான். இந்த QR Code என்பது உங்கள் யூபிஐ செயல்பாடுகளில் மொத்த விஷயத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒன்று. உங்கள் பணப்பெட்டியின் சாவி என வைத்துக்கொள்ளுங்கள். அதனால்தான்QR Code விவகாரத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். UPIல் முக்கிய ஆப்ஷனாக உள்ள QR ஸ்கேனை பணத்தை செலுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும். பணத்தை பெற QR ஸ்கேன் செய்ய தேவையில்லை. பணம் வேண்டுமென்றால் இந்த QR கோடை ஸ்கேன செய்யவும் என யாராவது சொன்னால் நாம் உஷாராக வேண்டும். நீங்கள் செய்யும் ஸ்கேனை வைத்து உங்கள் அக்கவுண்ட் பணத்தை மொத்தமாக எடுக்கவும் வாய்ப்புள்ளது.
UPI பரிவர்த்தனைகள் செய்பவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய மேலும் சில விஷயங்கள்:
உங்கள் அக்கவுண்டில் இருந்து பணத்தை மற்றொருவருக்கு அனுப்ப மட்டுமே UPI பின்னை பதிவிட வேண்டும். மற்றொருவரிடம் இருந்து பணத்தை பெற UPI பின்னை பதிவிட வேண்டியதில்லை
யாருக்காவது பணத்தை செலுத்துகிறீர்கள் என்றால் அவரின் பெயரை சரிபார்த்து பின்னர் அனுப்பவும். பெயரை உறுதி செய்யாமல் மற்றவருக்கு பணம் அனுப்புவது ஆபத்தானது
UPI பின்னை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதனை வேறு யாருடனும் பகிர கூடாது
தெரியாத அல்லது அறிமுகம் இல்லாத நபர் கேட்கும்போது நம்முடைய UPI ஐ ஷேர் செய்வது அல்லது தேவையற்ற ஆப்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏதேனும் ஆப்களை இன்ஸ்டால் செய்யுமாறு நமது போனுக்கு எதாவது sms வந்தால் அதனை தவிர்க்க வேண்டும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: UPI