Home /News /technology /

உங்கள் ஐபோன் ஸ்டோரேஜ் பிரச்சனையை தீர்ப்பதற்கான டிப்ஸ் & டிரிக்ஸ்!

உங்கள் ஐபோன் ஸ்டோரேஜ் பிரச்சனையை தீர்ப்பதற்கான டிப்ஸ் & டிரிக்ஸ்!


உங்கள் ஐபோன் ஸ்டோரேஜ்

உங்கள் ஐபோன் ஸ்டோரேஜ்

உலகம் முழுவதும் ஐபோன் பயன்படுத்துபவர்கள் ஸ்டோரேஜ் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். உங்கள் ஐபோன் ஸ்டோரேஜ் பிரச்சனையை தீர்ப்பதற்கான டிப்ஸ் & டிரிக்ஸ் இங்கே.

ஐபோன் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே சட்டென்று “storage almost full” என்பது தோன்றுவது நிச்சயமாகக் கடுப்பாக இருக்கும். இந்த ஸ்டோரேஜ் பிரச்சனை உங்களுக்கு மட்டும் தோன்றுவது இல்லை. உலகம் முழுவதும் ஐபோன் பயன்படுத்துபவர்கள் ஸ்டோரேஜ் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். உங்கள் ஐபோனின் ஸ்டோரேஜ் ஃபுல் என்று எச்சரிக்கை செய்தி உங்கள் போனின் வேகத்தை குறைப்பதோடு, போனில் உள்ள ஆப்ஸ்களின் செயல்பாடுகளை குறைக்கும்.

மேலும், ஸ்டோரேஜ் இல்லை என்னும் போது, உங்களுக்குத் தேவைப்படும் ஆப்ஸ்களை அல்லது மீடியா கோப்புகளை டவுன்லோடு செய்ய முடியாது. உங்கள் ஐபோன் ஸ்டோரேஜ் பிரச்சனையை தீர்ப்பதற்கான டிப்ஸ் & டிரிக்ஸ் இங்கே.

ஐபோன் ஸ்டோரேஜ் பிரச்சனைகள் தீர்ப்பதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, தேவையற்ற ஆப்ஸ், புகைப்படங்கள், வீடியோக்கள், இசை, கோப்புகளை நீக்குவதாகும். ஆனால், நீங்கள் உங்கள் மீடியா கோப்புகளை நீக்காமலேயே “System Data” என்ற ஆப்ஷனைப் பயன்படுத்தி ஸ்டோரேஜ் பிரச்சனையைத் தீர்க்கலாம்.

உங்கள் ஐபோனில் சிஸ்டம் டேட்டாவை எப்படி செக் செய்வது?

உங்கள் ஐபோனில் சிஸ்டம் டேட்டாவை செக் செய்வதற்கு, உங்கள் சாதனத்தில் settings (செட்டிங்ஸ்) என்பதற்குச் செல்லுங்கள். பின்னர், General என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, உங்கள் ஐபோனின் ஸ்டோரேஜூக்கு செல்லவும்.

உங்கள் மொபைல் திரையின் மேற்புறத்தில் ஒரு கிராஃப் இருக்கும். உங்கள் மொபைலில் எவ்வளவு ஸ்பேஸ் / ஸ்டோரேஜ் மிச்சம் இருக்கிறது என்பது அந்த கிராஃபில் காணலாம். அந்த கிராஃப் உங்களுக்கு ஸ்பேஸ் ‘low’ (குறைவாக இருக்கிறது) என்று காண்பித்தால், சிஸ்டம் டேட்டாவை நீங்கள் நீக்க வேண்டும். அதை எப்படி நீக்குவது என்ற விவரங்கள் இங்கே.

ALSO READ |  2021ம் ஆண்டின் மோசமான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்ட மெடா (ஃபேஸ்புக்)

Safariல் Cache வைக் கிளியர் செய்யுங்கள் :

Settings ஐத் திறந்து, safari மீது கிளிக் செய்யுங்கள். பின்னர், அதில் உள்ள ஹிஸ்டரி (history) மற்றும் வலைத்தள தரவை ஸ்க்ரோல் செய்யவும். கிளியர் ஹிஸ்டரி (clear history) என்ற பாப்-அப் டாப் மீது கிளிக் செய்து ஹிஸ்டரியை கிளியர் செய்யவும்.

மெசேஜ்களை தானாகவே டெலீட் செய்தல் :

Settings ஐத் திறந்து, மெசேஜ்கள் மீது கிளிக் செய்து, மெசேஜ் ஹிஸ்டரியை ஸ்க்ரோல் செய்யுங்கள். keep messages என்பதன் மீது கிளிக் செய்யுங்கள். பின்னர், எந்த தேதியிலிருந்து பெறப்பட்ட மெசேஜ்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பதைக் கிளிக் செய்தால், அதற்கு முன்புள்ள மெசேஜ்கள் ஆட்டோ டெலீட் ஆகிவிடும்.

ALSO READ |  2021 ஆம் ஆண்டில் மக்களுக்கு கைகொடுத்த டாப் 10 ஆப்ஸ்!

நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத ஆப்ஸ் :

நீங்கள் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத ஆப்ஸ் உங்கள் ஐபோனில் இருக்கலாம். அதைக் கண்டறிந்து அன்-இன்ஸ்டால் செய்து விடுங்கள்.

சோஷியல் மீடியா cache :

உங்கள் ஐபோனில் சோஷியல் மீடியா ஆப்ஸ் தான நீங்கள் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கும் செயலிகளாக இருக்கும். எனவே, அதில் தான் அதிக புகைப்படங்கள், ஆடியோ ஃபைல்கள், வீடியோக்கள் போன்றவை அதிக ஸ்டோரேஜ் ஸ்பேசை ஆக்கிரமத்திருக்கும். எனவே, சோஷியல் மீடியா cache வைக் கிளியர் செய்வது, உங்களுக்கு அதிக மெமரி ஸ்பேசைக் கொடுக்கும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Apple iphone, IPhone

அடுத்த செய்தி