செல்பேசி அழைப்புகளுக்கான ரிங்டோன் நேரம் இவ்வளவுதான் இருக்கணும்... ட்ராய் உத்தரவு

இன்னும் 15 நாட்களில் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்றும் ட்ராய் அறிவித்துள்ளது.

செல்பேசி அழைப்புகளுக்கான ரிங்டோன் நேரம் இவ்வளவுதான் இருக்கணும்... ட்ராய் உத்தரவு
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: November 1, 2019, 8:44 PM IST
  • Share this:
நெட்வொர்க் நிறுவனங்கள் செல்பேசி அழைப்புகளுக்கான ரிங்டோன் நேரம் குறித்த புதிய உத்தரவை ட்ராய் வெளியிட்டுள்ளது.

ட்ராய் வெளியிட்டுள்ள காலநேர நிர்ணயத்தின் அடிப்படையில் செல்போன் மொபைல் சேவைகளுக்கான அழைப்புகளுக்கு ரிங்டோன் நேரம் 30 விநாடிகள் ஆக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், டெலிபோன் சேவை அழைப்புகளுக்கான ரிங்டோன் நேரம் 60 விநாடிகள் ஆக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்கமிங் கால் பதில் இல்லாமல் துண்டித்து போனால் 90 விநாடிகளுக்குப் பின் நோட்டிஃபிகேஷன் மெசேஞ் கிடைக்கும். இதுதொடர்பான உத்தரவை ட்ராய் இன்று வெளியிட்டுள்ளது. இன்னும் 15 நாட்களில் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்றும் ட்ராய் அறிவித்துள்ளது.


சமீபத்தில் ஏர்டெல், வோடபோன் போன்ற நெட்வொர்க் நிறுவனங்கள் ரிங்டோன் கால நேரத்தை 35- 40 விநாடிகளில் இருந்து 25 விநாடிகளாகக் குறைப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: 108 மெகாபிக்சல் கேமிரா... 5X ஆப்டிகல் ஜூம்... வருகிறது ஜியோமி Mi CC9 Pro

அதிதீவிர புயலாக மாறும் மஹா - தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
First published: November 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்