முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / டிக்டாக் இந்திய அலுவலகம் மூடல்... ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் பிங்க் நோட்டீஸ்

டிக்டாக் இந்திய அலுவலகம் மூடல்... ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் பிங்க் நோட்டீஸ்

டிக் டாக்

டிக் டாக்

இந்தியாவில் உள்ள டிக்டாக் ஊழியர்களுக்கு பிப்ரவரி 28 நிறுவனத்தில் அவர்களின் கடைசி நாள் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras] |

2020 ஜூன் மாதம் இந்திய அரசு சீன வீடியோ செயலியான TikTok ஐ தடை செய்து உத்தரவிட்டது. ஆனாலும் இந்தியாவின் டிக்-டாக்  நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அதில் இந்தியர்கள் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். ஆனால் தற்போது டிக்-டாக்  தனது முழு இந்திய பணியாளர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது.

எகனாமிக் டைம்ஸின் அறிக்கையின்படி, TikTok இந்த தாய் நிறுவனமான பைட் டான்ஸு இந்த வாரம் 40 பேருக்கு  பிங்க்  சீட்டுகளை வழங்கியுள்ளது. அதாவது நிறுவனத்தின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதுடன் ஊழியர்களுக்கு ஒன்பது மாத பணிநீக்க ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக் கவலைகளை மேற்கோள் காட்டி டிக்டாக் செயலி மற்றும் 300 பிற சீன பயன்பாடுகள் கூடிய செயலியை இந்திய அரசாங்கம் தடை விதித்தது. டிக்டாக் இந்தியாவில் இரண்டாவது பெரிய பயனர் தளத்தைக் கொண்டிருந்தது. இந்தியாவில் தடை செய்த பின்னர் இந்திய அலுவலகத்தில் பணிபுரிந்த TikTok ஊழியர்கள், பிரேசில் மற்றும் துபாய் சந்தைகளை நிர்வகித்து வந்தனர்.

ஆனால் சீன பயன்பாடுகள் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டு தொடந்து இறுக்கமாக இருக்கும் சூழலில் , இந்தியாவில் டிக்-டாக்  செயல்பாட்டை மறுதொடக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது. இதனால் இதற்கு மேலும் காத்திருக்க  போவதில்லை என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து இந்தியாவில் இருக்கும் அலுவலகத்தை மூடவும் அதில் பணியாற்றும் ஊழியர்களை அப்பணியில் இருந்து விடுவிக்கவும் முடிவு செய்தது. இந்தியாவில் உள்ள டிக்டாக் ஊழியர்களுக்கு பிப்ரவரி 28 நிறுவனத்தில் அவர்களின் கடைசி நாள் என்று கூறப்பட்டதாக தெரிகிறது.

First published:

Tags: Ban, Tik Tok