• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • கட்டண அரசியல் விளம்பரங்களுக்குத் தடை- டிக்டாக் அறிவிப்பு

கட்டண அரசியல் விளம்பரங்களுக்குத் தடை- டிக்டாக் அறிவிப்பு

டிக் டாக்

டிக் டாக்

தடை செய்யப்பட்ட ஒரு தலைப்பின் கீழ் பயனாளர்கள் பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சீன வீடியோ ஆப் நிறுவனமான டிக்டாக் தனது தளத்தில் இனி வரும் காலங்களில் கட்டண அரசியல் விளம்பரங்கள் இடம்பெறாது என அறிவித்துள்ளது.

இன்றைய மில்லெனியல் மக்களைக் கவர்வதே டிக்டாக் செயலியின் முக்கிய நோக்கமாகும். இதனால் கட்டண அரசியல் விளம்பரங்களுக்கு இனி டிக்டாக் அனுமதி அளிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் பைட்டான்ஸ் டெக்னாலஜி நிறுவனம் தயாரிப்பில் உருவான டிக்டாக் ஆப் இந்தியா மட்டுமல்லாது பல தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பலமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து டிக்டாக் துணைத்தலைவர் ப்லேக் சாண்ட்லீ கூறுகையில், “ஒரு வேட்பாளரை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் விளம்பரம், அரசியல் தலைவர், முன்னாள் தலைவர், கட்சி, ஆட்சி, குழு, மாநில, தேசிய, சர்வதேச என எவ்வித அரசியல் சார்ந்த கட்டண விளம்பரங்களும் இனி எங்களது தளத்தில் இடம்பெறாது” எனக் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் ஒரு மாதத்தில் மட்டும் 500 மில்லியன் ஆக்டிவ் பயனாளர்கள் டிக்டாக் செயலியில் உள்ளனர். டீன் ஏஜ் குறிப்பாக மில்லேனியலுக்கு அடுத்தத் தலைமுறையினரையே டிக்டாக் செயலி ஈர்க்க முயற்சித்து வருகிறது. தடை செய்யப்பட்ட ஒரு தலைப்பின் கீழ் பயனாளர்கள் பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: குறிப்பிட்ட போன்களில் வாட்ஸ்அப் இயங்காமல் போகும் அபாயம்

தொடர்விடுமுறை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: