2020ம் ஆண்டில் உலகளவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்ஸ்கள் என்னென்ன தெரியுமா? இதோ விவரம்...

2020ம் ஆண்டில் உலகளவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட ஆப்ஸ்கள் என்னென்ன தெரியுமா? இதோ விவரம்...

கோப்புப்படம்.

ஆப் அன்னி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆண்ட்ராய்டு, iOS மொபைல் செயலிகள் பயன்பாட்டில் அதிவேக வளர்ச்சியை இந்தியா கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
தற்போதைய சூழலில் அனைத்து விதமான வேலைகளுக்கும் மொபைல் செயலிகள் உள்ளன. அவற்றின் மூலமாக நமது வாழ்வில் பல விஷயங்கள் எளிமையாகியுள்ளன. அதிலும் செயலிகளை அதிகம் பயன்படுத்துவதில் இந்தியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆப் அன்னி (App Annie) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆண்ட்ராய்டு, iOS மொபைல் செயலிகள் பயன்பாட்டில் அதிவேக வளர்ச்சியை இந்தியா கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப ஆய்வுகளின் அடிப்படையில், இந்தியா மட்டுமல்லாது உலகளவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் குறித்து இங்கே காணலாம்.

ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் 2020ம் ஆண்டில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலி டிக்டாக் ஆகும். டிக்டாக் இந்த ஆண்டு ஃபேஸ்புக்கை ஓவர்டேக் செய்துவிட்டது. மேலும் இந்த ஆப் 2021ம் ஆண்டில் சராசரியாக உலகெங்கிலும் 1.2 பில்லியன் மாதாந்திர ஆக்டிவ் யூசர்களைக் கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்றவை இந்த ஆண்டு டவுன்லோடுகளில் முறையே மூன்றாவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பெற்றுள்ளன.

2019ம் ஆண்டில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலியாக மெசஞ்சர் (Messenger) செயலி ஆறாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஜூம் வீடியோ கான்பரன்சிங் (Zoom video conferencing) நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் இந்த செயலி 219வது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆப் அன்னி, தனது அறிக்கையில், ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்களின் ஆண்டுதோறும் 130 பில்லியனை எட்டும். எனவே ஆண்டுக்கு ஆண்டு இது 10 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என கணிக்கப்படுகிறது.

iOS-ஐ காட்டிலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்வது 160 சதவிகிதம் அதிகரித்துள்ளன. இருப்பினும் இரண்டிலும் டவுன்லோடுகள் 2020ம் ஆண்டில் 10 சதவீதம் அதிகரித்துள்ளன. கொரோனா காரணமாக பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களுடன் வீட்டுக்குள்ளேயே நேரத்தைச் செலவழித்ததால் டவுன்லோடுகளின் வளர்ச்சி மிக மிக அதிகரித்ததாக அறிக்கை கூறுகிறது.

Also read: கொரோனா பாதிப்பு: உலகின் மிகச் சிறந்த சினிமா இயக்குநர் கிம் கி டக் மரணம்

செயலி சேவைகளுக்கான நுகர்வோர் செலவினம் 2020ம் ஆண்டில் 112 பில்லியன் டாலர்களை எட்டியதால் 25 சதவிகிதம் வளர்ச்சியடைந்தாதாக ஆப் அன்னி எடுத்துக்காட்டுகிறது.

IOS-க்கான சிறந்த சந்தைகளில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சவுதி அரேபியா ஆகியவை அடங்கும். அதே நேரத்தில், கூகுள் பிளே ஸ்டோரின் சிறந்த சந்தைகள் இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா ஆகும். 2020ம் ஆண்டில் அதிக பயனர்களைக் கொண்ட செயலிகளில் டிண்டர், டிக்டாக், யூடியூப், டிஸ்னி + மற்றும் டென்சென்ட் வீடியோ ஆகியவை அடங்கும். டிக்டாக் 15 இடங்களையும், நெட்ஃபிளிக்ஸ் இந்த ஆண்டு இரண்டாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளது.

எதிர்பார்த்தபடி, பிற சமூக அல்லது உற்பத்தித்திறன் ஆப்ஸ்களுடன் ஒப்பிடுகையில் கேமிங் ஆப்ஸ்க்கான பயன்பாடு அதிகமாக இருந்தது. டவுன்லோடுகளைப் பொறுத்தவரையில், கேமிங் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோடுகளில் 45 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இது 2019ம் ஆண்டில் 40 சதவிகிதத்தையும் iOS-ல் உள்ள அனைத்து டவுன்லோடுகளில் 30 சதவிகிதத்தையும் கடந்த ஆண்டை விட மாறாமல் வைத்திருந்தது.

ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் டவுன்லோட் செய்யப்பட்ட சிறந்த கேம்களில், ஃப்ரீ ஃபயர், சம்வே சஃபர்ஸ், அமாங் அஸ், பப்ஜி மொபைல், மற்றும் Gardenscapes போன்றவை அடங்கும். மேலும் ஹானர் ஆஃப் கிங்ஸ், போகிமொன் கோ, ராப்லாக்ஸ், மான்ஸ்டர் ஸ்ட்ரைக் மற்றும் காயின் மாஸ்டர் ஆகியவற்றில் நுகர்வோர் செலவினங்கள் அதிகம் காணப்படுகிறது.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப், மெசஞ்சர் ஆகியவை இந்த ஆண்டிற்கான அதிக மாதாந்திர செயலில் பயனர்களைக் கொண்டுள்ளன என்றும் ஆப் அன்னி சுட்டிக்காட்டுகிறது. கேமிங் ஆப்ஸ்களுக்கு, பப்ஜி மொபைல், கேண்டி க்ரஷ் மற்றும் ரோப்லாக்ஸ் ஆகியவை மாதாந்திர செயலில் உள்ள பயனர்களைக் கொண்ட முதல் மூன்று தளங்களாக இருந்தன.

கடந்த ஜூனிலிருந்து டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பப்ஜி மொபைல் இந்தியாவில் விரைவில் புதிய அவதாரத்தில் மீண்டும் தொடங்கப்படும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றது. பப்ஜி மொபைல் லைட் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: